கரூர்‌ மாவட்ட அரசு பணி – ஊதியம்‌ மாதம்‌ ரூ.55,0007/-

கரூர்‌ மாவட்ட தோகைமலை ஊராட்சி மாவட்ட திட்டமிடல்‌ பிரிவில்‌ வளரும்‌ வட்டார திட்ட அலுவலர்‌ பணிக்கான அறிவிப்பினை நமது வலைதளத்தில்‌ காண்போம்‌ வாருங்கள்‌!

வயது வரம்பு: இந்த வேலையின்‌ வயது வரம்பினை பொறுத்தவரை 18 வயது முதல்‌ 30 வயது வரை உள்ளவர்கள்‌ விண்ணப்பிக்கலாம்‌.

தகுதிகள்‌: ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தில்‌ ஏதேனும்‌ ஒரு பிரிவில்‌ முதுகலை பட்டதாரி கல்வி பயின்றிருக்க வேண்டும்‌. ஆங்கில மொழி தெரிந்திருக்க வேண்டும்‌, தகவல்களை பகுப்பாய்வு செய்தல்‌ மற்றும்‌ செயல்பாடுகளை விளக்கும்‌ திறன்‌ பெற்றிருக்க வேண்டும்‌

  • சமூக வலைதளங்களை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்‌.
  • திட்டங்களை நிர்வாகப்படுத்தும்‌ திறன்‌ பெற்றிருக்க வேண்டும்‌.
  • வளர்ச்சி தொடர்பான நிறுவனங்களில்‌ வேலை செய்திருக்க வேண்டும்‌. நல்ல தகவல்‌ தொடர்பு திறன்‌ இருக்க வேண்டும்‌
  • அந்தந்த ஆஸ்பிரேஷ்னல்‌ தொகுதியின்‌ உள்ளுர்‌ மொழி தெரிந்திருக்க வேண்டும்‌

குறிப்பு:

கரூர்‌ மாவட்ட திட்டமிடல்‌ பிரிவின்‌ பணிக்கு குறிப்பாக ஊரக வளர்ச்சி தொடர்பாக உயர்கல்வி பயின்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூகவியல்‌ / குழந்தை 6ேம்பாடு / பொது கிராமப்புறங்களில்‌ கல்வி / உடல்நலம்‌ / சமூகப்பணி போன்ற ஏதேனும்‌ ஒரு துறையில்‌ தேர்ச்சி பெற்றிருந்தால்‌ முன்னுரிமை வழங்கப்படும்‌.

தேர்ந்தெடுக்கப்படும்‌ முறை:

  • குறுகியப்‌ பட்டியல்‌ (Short listing)
  • நேர்முகத்‌ தேர்வு (Interview)

சம்பளம்‌: இந்த வேலைக்கான ஊதியம்‌ மாதம்‌ ரூ.55,0007- என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வளரும்‌ வட்டார திட்ட அலுவலருக்கான பணிகள்‌ மற்றும்‌ கடமைகள்‌:

வளரும்‌ வட்டார திட்ட அலுவலர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்‌ தொகுதி அளவிலான அதிகாரிகள்‌ மற்றும்‌ நிதி ஆயோக்கிற்கு இடையே ஒரு இணைப்புப்‌ பாலமாக செயல்படுவர்‌. அவர்களின்‌ முதன்மை பொறுப்புகளை பற்றி பின்வருமாறு காண்போம்‌.

வளரும்‌ வட்டார திட்ட பகுதிகளின்‌ வளர்ச்சிக்கான செயல்பாடுகளை வடிவமைப்பு செய்தல்‌ மற்றும்‌ திட்டங்களை செயல்படுத்த வட்டார அளவிலான அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு தருதல்‌.

திட்டங்களை செயல்படுத்துதல்‌, சவால்களை கண்டறிதல்‌ போன்றவைகளுக்கான தொடர்ச்சியாக களங்களை பார்வையிடல்‌, வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு வட்டார மற்றும்‌ மாவட்ட அளவிலான அலுவலர்களுக்கு தகவல்களை பகுப்பாய்வு செய்தல்‌ மற்றும்‌ ஆதாரங்கள்‌ அடிப்படையில்‌ பரிந்துரைகளை கூறுதல்‌.

உள்ளுர்‌ சமூக மக்களை மேம்படுத்துவதற்கான பயிற்சிப்‌ பட்டறைகள்‌, விழிப்புணர்வு பிரச்சாரங்கள்‌ மற்றும்‌ திறன்‌ வளர்ச்சி பயிற்சிகளை செயல்படுத்துதல்‌.

சிக்கல்கள்‌, சவால்கள்‌ மற்றும்‌ தேவை போன்றவற்றிற்காக மாநில மற்றும்‌ NITI அளவில்‌ இணைந்திருத்தல்‌.

விண்ணப்பிக்கும்‌ முறை:

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள்‌ தங்களின்‌ சுய கையொப்பமிட்ட சான்றிதழ்‌ நகல்களினை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால்‌ மூலமாகவோ 20.11.2023 அன்று மாலை 5.00 மணிக்குள்‌ அனுப்ப வேண்டும்‌.

மேலும்‌ தாமதமாக பெறப்படும்‌ விண்ணப்பங்கள்‌ நிராகரிக்கப்படும்‌ என்றும்‌ தங்களின்‌ அசல்‌ சான்றிதழ்களை தபாலில்‌ அனுப்பிவிட வேண்டாம்‌ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன்‌ இவ்வேலை 1 வருடத்திற்கு மட்டுமே என்றும்‌ அதற்குமேல்‌ தொடர முடியாது எனவும்‌ கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

District Planning Officer,
District Planning Cell,
No.26 – Annexure Building,
Collectorate, Karur District – 639007.

Thogamalai Block Aspirational Block Fellow Applications are invited
Aspirational Block Jobs 2023

Karur District Block – Thogamalai Block Aspirational Block Fellow Application Form

[dflip id=”10616″ ][/dflip]

அறிவிப்புகரூர் மாவட்டம் – தோகமலை தொகுதி
பதவிAspirational Block Fellow
சம்பளம்Rs.55,000/- per month
காலியிடம்Post – 1
பணியிடம்தோகமலை தொகுதி
தகுதிகள்முதுகலை பட்டதாரி
விண்ணப்பிக்க கடைசி தேதி20/11/2023

கரூர்‌ மாவட்ட கோகைமலை ஊராட்சி மாவட்ட திட்டமிடல்‌ பிரிவில்‌ வளரும்‌ வட்டார திட்ட அலுவலர்‌ பணிக்கு விண்ணப்பிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்‌ படிவத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவண நகல்களை சுய கையொப்பமிட்டு மேலே குறிப்பிட்டுள்ள முகவரிக்கு குறிப்பிட்ட தேதிக்குள்‌ அனுப்பி இந்த வேலையினை பெறுமாறு எங்கள்‌ வலைதளத்தின்‌ சார்பாக வாழ்த்துகிறோம்‌!

மேலும்‌ இது போன்ற அரசு வேலை வாய்ப்பு பற்றிய செய்திகளை உடனுக்குடன்‌ தெரிந்து கொள்ள எங்கள்‌ வலைதளத்தினை தொடருங்கள்‌!

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment