நாமக்கல் மாவட்ட பஞ்சாயத்தில் பல அரசு வேலைவாய்ப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசு வேலை வாய்ப்புகளை பொறுத்த வரை அலுவலக உதவியாளர், இரவு நேர காவலர், ஏட்டு எழுத்தர், ரெக்கார்டு கிளார்க் என்று பல வேலை வாய்ப்புகளை நம்மால் பார்க்க முடிகிறது.
நீங்கள் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவராக இருந்தால் கட்டாயம் உங்கள் பஞ்சாயத்தில் வேலை வாய்ப்புகள் வெளியிடப்பட்டிருக்கும்.
ஆகையால், வெளியிடப்பட்ட நாமக்கல் பஞ்சாயத்திற்கான அனைத்து வேலைக்கான முழு விளக்கத்தையும், விண்ணப்ப படிவத்தையும் பார்க்கும் (பதிவிறக்கவும்) வாய்ப்பையும் உங்களுக்கு இந்த பகுதியில் கொடுக்கிறோம்.
ஆம், இந்த ஒரே பகுதியில் நாமக்கல் மாவட்டத்தில் வெளியிடப்பட்ட பஞ்சாயத்து அரசு வேலை வாய்ப்புகளையும், அதற்க்கான ஊதியத்தயும், கல்வித்தகுதியையும் பார்க்கும் வாய்ப்பு பெறலாம் வாருங்கள்.
கவனிக்க: நாமக்கல்லில் வெளியிடப்பட்ட அனைத்து அரசு வேலைவாய்ப்புகளையும் பார்ப்பதற்கு முன்பு பஞ்சாயத்தில் வெளியிடப்பட்ட வேலை வாய்ப்பினையும், பஞ்சாயத்து பெயர்களையும் கீழே கொடுத்துள்ளோம். ஆகையால் முதலில் அதை பாருங்கள், அதில் நீங்கள் எந்த பஞ்சாயத்தை சேர்ந்தவர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், பின்பு கட்டுரையில் பயணிக்கலாம்.
- எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் பணி.
- எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய இரவு காவலர் பணி.
- எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் பணி.
- கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளர் பணி.
- கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய இரவு காவலர் பணி.
- கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் பணி.
- கொல்லிமலை பஞ்சாயத்து யூனியன் இரவு காவலர் பணி.
- மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் பணி.
- மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய இரவு காவலர் பணி.
- மோகனூர் ஊராட்சி ஒன்றிய ஏட்டு எழுத்தர் பணிக்கான அறிவிப்பு.
- மோகனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் பணி.
- நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் பணி.
- நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய இரவு காவலர் பணி.
- நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் பணி அறிவிப்பு.
- நாமக்கல் பஞ்சாயத்து யூனியன் இரவு காவலர் பணிக்கான அறிவிப்பு.
- பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் பணி.
- பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் பணி.
- பரமத்தி ஊராட்சி ஒன்றிய இரவு காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு.
- புதுச்சத்திரம் பஞ்சாயத்து யூனியன் ரெக்கார்டு கிளார்க் பணி.
- புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் பணி.
- புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய இரவு காவலர் பணி.
- திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய ஏட்டு எழுத்தர் பணி அறிவிப்பு.
- திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் பணிக்கான அறிவிப்பு.
- திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய இரவு காவலர் பணி.
- வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் பணி.
- வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றிய இரவு காவலர் பணி.
வேலைக்கான கல்வி தகுதி: கல்வி தகுதியை பொறுத்தவரை தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், மற்றும் பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வரை விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு: இந்த நாமக்கல் பஞ்சாயத்து யூனியன் அரசு வேலை வாய்ப்புகளுக்கான வயது வரம்பு பொருத்தவரை அனைத்து வேலைவாய்ப்புகளுக்கும் 01/07/2023 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.
இருந்த போதும் வகுப்புவாரியான வயதுத் தளர்வு, முன்னாள் ராணுவத்தினருக்கான வயது தளர்வு போன்ற விஷயங்களுக்கு அந்தந்த பஞ்சாயத்து யூனியன் அறிவிப்பை பார்க்கலாம். அந்த வாய்ப்பு கீழே உங்களுக்கு கிடைக்கும்.
மாத சம்பளம்: இந்த அனைத்து வேலைகளுக்கும் மாத சம்பளமாக 15,700 முதல் 58,100 என்ற ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பளமானது ஊதிய ஏற்ற முறையில் இதர படிகளுடன் கிடைக்கும் என்பதும் குறிப்பிட தக்கது.
விண்ணப்பிக்கும் முறை: இந்த (Panchayat Union Office) பஞ்சாயத்திற்கும் நீங்கள் தபால் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். நீங்கள் எந்த பஞ்சாயத்து வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புகிறீர்கள் என்பதை உறுதி செய்து கீழே கொடுக்கப்பட்டிருக்கும் உங்களுடைய பஞ்சாயத்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யலாம்.
பின்பு அதை முழுமையாக பூர்த்தி செய்து உங்களுடைய விண்ணப்ப படிவத்தை நீங்கள் விரைவு தபால் மூலம் அனுப்ப வேண்டும். அதை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், உங்களுடைய பஞ்சாயத்து பெயர், மற்றும் அதற்கான சரியான அஞ்சல் குறியீடு இணைத்து அனுப்ப வேண்டும். அந்த தகவல் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கிடைக்கும், அந்த அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் பஞ்சாயத்து எது என்பதை தேர்வு செய்து அந்த விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கூடுதல் விவரங்களை பாருங்கள்.
முக்கிய செய்திகள்: கடைசி தேதியினை பொறுத்தவரை உங்களுடைய விண்ணப்ப படிவம் 22/12/2023 மாலை 5:45 மணிக்குள் உரிய அலுவலகத்தை சேர்ந்த அடைய வேண்டும் என்பது நிபந்தனையாகும். ஆகையால், முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய தேதிக்குள் அனுப்பி வையுங்கள்.
பணியிடம் | கடைசி தேதி | வேலை | விண்ணப்பம் & அறிவிப்பு |
---|---|---|---|
எலச்சிபாளையம் | 22/12/2023 | அலுவலக உதவியாளர் | விண்ணப்பிக்க |
எலச்சிபாளையம் | 22/12/2023 | இரவு காவலர் | விண்ணப்பிக்க |
எருமப்பட்டி | 22/12/2023 | அலுவலக உதவியாளர் | விண்ணப்பிக்க |
கபிலர்மலை | 22/12/2023 | அலுவலக உதவியாளர் | விண்ணப்பிக்க |
கபிலர்மலை | 22/12/2023 | இரவு காவலர் | விண்ணப்பிக்க |
கொல்லிமலை | 22/12/2023 | அலுவலக உதவியாளர் | விண்ணப்பிக்க |
கொல்லிமலை | 22/12/2023 | இரவு காவலர் | விண்ணப்பிக்க |
மல்லசமுத்திரம் | 22/12/2023 | அலுவலக உதவியாளர் | விண்ணப்பிக்க |
மல்லசமுத்திரம் | 22/12/2023 | இரவு காவலர் | விண்ணப்பிக்க |
மோகனூர் | 22/12/2023 | ஏட்டு எழுத்தர் | விண்ணப்பிக்க |
மோகனூர் | 22/12/2023 | அலுவலக உதவியாளர் | விண்ணப்பிக்க |
நாமகிரிப்பேட்டை | 22/12/2023 | அலுவலக உதவியாளர் | விண்ணப்பிக்க |
நாமகிரிப்பேட்டை | 22/12/2023 | இரவு காவலர் | விண்ணப்பிக்க |
நாமக்கல் | 22/12/2023 | அலுவலக உதவியாளர் | விண்ணப்பிக்க |
நாமக்கல் | 22/12/2023 | இரவு காவலர் | விண்ணப்பிக்க |
பள்ளிபாளையம் | 22/12/2023 | அலுவலக உதவியாளர் | விண்ணப்பிக்க |
பரமத்தி | 22/12/2023 | அலுவலக உதவியாளர் | விண்ணப்பிக்க |
பரமத்தி | 22/12/2023 | இரவு காவலர் | விண்ணப்பிக்க |
புதுச்சத்திரம் | 22/12/2023 | ரெக்கார்டு கிளார்க் | விண்ணப்பிக்க |
புதுச்சத்திரம் | 22/12/2023 | அலுவலக உதவியாளர் | விண்ணப்பிக்க |
புதுச்சத்திரம் | 22/12/2023 | இரவு காவலர் | விண்ணப்பிக்க |
திருச்செங்கோடு | 22/12/2023 | ஏட்டு எழுத்தர் | விண்ணப்பிக்க |
திருச்செங்கோடு | 22/12/2023 | அலுவலக உதவியாளர் | விண்ணப்பிக்க |
திருச்செங்கோடு | 22/12/2023 | இரவு காவலர் | விண்ணப்பிக்க |
வெண்ணந்தூர் | 22/12/2023 | அலுவலக உதவியாளர் | விண்ணப்பிக்க |
வெண்ணந்தூர் | 22/12/2023 | இரவு காவலர் | விண்ணப்பிக்க |
JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.