நமது நாமக்கல் மாவட்டத்தில் (GMC) அரசு வேலை மாதம் 15,000/-

Follow Us
Sharing Is Caring:

நாமக்கல் (GMC) அரசு மருத்துவ கல்லூரியில் புதிதாக வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த வேலை வாய்ப்புக்கு டிப்ளமோ மற்றும் டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம், இந்த வேலைவாய்ப்புக்காக விண்ணப்பிக்க கூடிய இறுதி தேதி 07/10/2022 அன்று ஆகும்.

இந்த நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆய்வுக்கூட நுட்ப நிலை அதாவது லேப் டெக்னீசியன் கிரேடு – 2 (Lab Technician Grade – 2) என்று கூறக்கூடிய இந்த வேலைக்காக 31 பணியிடங்கள் காலியாக உள்ளது.

 Namakkal Govt Medical College Lab Technician Recruitment

மேலும் இதற்கு தொகுப்பூதியமாக மாதம் 15,000/- ரூபாய் ஊதியம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது, எனவே தகுதி உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த Govt Medical College வேலை சம்பந்தமான கூடுதல் தகவல்கள், விண்ணப்பிக்க கூடிய விதிமுறை போன்றவற்றையும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு போன்ற அனைத்தையும் இந்த வலைதள கட்டுரையில் தமிழ் மொழியில் காணலாம்.

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

இதனை நமது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் பகிருங்கள், நாங்கள் தமிழ்நாடு முழுக்க இருக்கும் அனைத்து மாவட்டத்திலும் உள்ள வேலைவாய்ப்பை சரியான நேரத்தில் உங்களுக்கு வழங்குகிறோம், அதுவும் நமது தாய்மொழியில்,

எனவே மற்ற தமிழ் உறவுகளுக்கும் இதை பகிர்வதன் மூலம் அவர்களுக்கும் இது உதவியாக இருக்கும், வாருங்கள் வலைதளத்தில் தொடர்ந்து பயணிபோம்.

வேலைக்கான வயது என்ன?

இந்த வேலைக்கான வயது வரம்பு அதிகாரபூர்வ அறிவிப்பின் அடிப்படையில் 18 வயது முதல் 59 வயதை தாண்டாமல் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது, எனவே இது சம்பந்தமான கூடுதல் விவரங்களை யும் நீங்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கீழே காணமுடியும்.

அதோடு இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது என்பதே மேலும் சிறப்பம்சம், நீங்கள் தபால் மூலம் இதை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கூடிய விலாசம் உங்களுக்கு வலைதள கட்டுரையில் தொடர்ந்து கீழ்நோக்கி படித்துக்கொண்டே பயணிக்கும் போது கிடைக்கும்.

வேலைக்கான கல்வித்தகுதி என்ன?

இந்த வேலைக்கான கல்வி தகுதி பொருத்தவரை பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்ட வேதியியல் அல்லது உயிர் வேதியியல் பிரிவில் இளங்கலை பட்டம் மற்றும் மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் பட்டப்படிப்பு இரண்டு ஆண்டுகள் (King Institute of Preventive Medicine) அல்லது தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்ட தகுதி இருக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே இந்த விஷயத்தை கருத்தில் கொள்ளுங்கள் கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாருங்கள்.

விவரம்அறிவிப்பு
அறிவிப்புNamakkal Govt Medical College
துறை(GMC ) அரசு மருத்துவக் கல்லூரி
இணையதளம்Namakkal District, Government of Tamilnadu
சம்பளம்Rs. 15,000/-
கடைசி தேதி07/10/2022
வேலை இடம்நாமக்கல்
தேர்வு முறை(நேர்காணல்) மூலமாக
பதிவுமுறையை(Speed Post) மூலமாக
தொலைபேசி04286 294939 & 294940
மின்னஞ்சல்gmchnkl@gmail.com
jobs tn google news

இந்த வேலைக்கான இறுதி தேதி எப்போது?

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கூடிய ஆரம்ப தேதி ஆனது 23/09/2022 ஆகும், இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கூடிய கடைசி தேதி 07/10/2022 ஆகும்.

எனவே கீழே உள்ள தகவல்களைப் படித்து எவ்வாறு விண்ணப்பிப்பது என்று தெரிந்து கொண்டு உங்கள் விண்ணப்பத்தை சரியான நேரத்துக்கு அனுப்புங்கள்.

எவ்வாறு விண்ணப்பிப்பது?

வேலைக்கு விண்ணப்பிப்பது மிகவும் சுலபம், இதற்கு விண்ணப்ப கட்டணம் எதுவும் கிடையாது.

GMC Lab Technician Grade – 2 வேலைகளுக்கு நீங்கள் தகுதியானவர்கள் என்றால் உங்களுடைய படிப்பு சார்ந்த ஆவணங்கள் ஏதேனும் கூடுதல் அனுபவ சான்று இருந்தாலும் அதையும் இனைத்து தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கூடிய முறையை பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலம் கொடுக்கப்பட்டுள்ளது, அதாவது விண்ணப்பங்கள் முழுமையான முகவரியுடன் மற்றும் சான்றிதழ் நகல்களுடன் அனுப்பப்பட வேண்டும் என்றும்…

கல்வித்தகுதி சான்று நகல் தபால் ஆதார் நகல் போன்ற அனைத்தயும் மூலமாக அலுவலகத்தில் பெறுவதற்கு இறுதி நாளாக 07/10/20 22 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டி அனுப்ப வேண்டிய முகவரியை கீழே காணலாம்.

முதல்வர், அரசு மருத்துவக்கல்லூரி, எண் 353 பெருந்திட்ட வளாகம், சிலுவம்பட்டி (அ) நாமக்கல், நாமக்கல் மாவட்டம் – 637003.

Namakkal Govt Medical College Lab Technician Grade – 2 Announcement

Namakkal Govt Medical College Lab Technician Grade - 2  Announcement
வேலைக்கான கெடு முடிவடைந்தது, வேறு பணியை எங்கள் வலைதளத்தில் தேடுங்கள்

கவனியுங்கள்:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் பணிபுரிய தகுதியானவர்களுக்கு இந்த வலைதள கட்டுரை சமர்ப்பணம்.

மேலும் இந்த கட்டுரையை படித்த நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு இந்த வேலைக்கான தகுதி இருந்தால் அவர்களுக்கும் இந்த வலைதள கட்டுரையை பகிருங்கள், அதன் மூலம் அவர்களுக்கும் இந்த வேலை கிடைக்க உதவி புரிவோம்.

Sharing Is Caring:

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment