Nilgiris Panchayat Union Recruitment 2023: நீலகிரி மாவட்டத்தில் புதிதான அரசு வேலை வாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பானது அலுவலக உதவியாளர் எனும் பணியிடத்தையும், மற்றும் இரவு நேர காவலர் காலிப்பணியிடத்தையும் நிரப்புவதற்கான இரு வெவ்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை முழுமையாக பூர்த்தி செய்து உரிய விலாசத்திற்கு நீங்கள் அனுப்ப வேண்டும்.
இந்த இரு வேலைகளுக்கும் 20/12/2023 ஆம் தேதிக்குள் உங்கள் விண்ணப்பங்கள் அதிகாரப்பூர்வ அலுவலகத்தை அடைய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆகையால் அது சம்பந்தமான முழு விவரங்களை இந்த வலைதள கட்டுரையில் பார்க்கலாம் வாருங்கள்.
நீலகிரி மாவட்ட அரசு காலி பணியிடங்கள்:
பதவியின் பெயரை பொறுத்தவரை இரவு நேர காவலர் எனும் பதவிக்கு ஒரு காலி பணியிடங்களும். மற்றும் அலுவலக உதவியாளர் எனும் பதவிக்கு ஒரு காலிப்பணியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Panchayat Union Jobs 2023 வாய்ப்புக்கான ஊதியம்:
இரவு நேர காவலர் பணியிடத்திற்கு ரூபாய் 15,700 முதல் 50,000ம் வரை நிலை ஒன்று என்ற முறையில் அரசு விதிகளின்படி ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக அலுவலக உதவியாளர் எனும் பணிக்கும் இதே சம்பள முறை பின்பற்றப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Panchayat Union Recruitment 2023 எங்கு கிடைக்கப்பட உள்ளது:
இந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சியில் உள்ள இடங்களில் வெளியிடப்பட்ட இரண்டு வேலை வாய்ப்பு; இதில் குன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இரவு காலை இரவு காவலர் பணியிடத்தை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
அதே சமயம், அதே குன்னூர் ஊராட்சி ஒன்றிய தலைப்பின் கீழ் உள்ள அலுவலக உதவியாளர் காலிப் பணியிடத்திற்கும் ஒரு விண்ணப்பம் வரவேற்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நீலகிரி மாவட்ட அரசு வேலைக்கான வயது வரம்பு:
இந்த இரண்டு வேலைகளுக்குமே ஒரே வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதுதான் 37. ஆனால் 01/07/2023 அன்று அதிகபட்ச வயதாக 37 இருக்க வேண்டும். மேலும் 01/07/2023 அன்று 18 வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும் என்பதும் நிபந்தனை ஆகும்.
வேலைக்கான கல்வி தகுதி:
அதிகாரப்புக்கு அறிவிப்பின்படி இரவு காவலன் வேலைக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மற்றும் மிதிவண்டி ஓட்டு தெரிந்திருக்க வேண்டும் என்று நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் அலுவலக உதவியாளர் வேலைக்கும் இதே நடைமுறை பின்பற்றப்படும்.
நீலகிரி மாவட்ட Panchayat Union Jobs 2023 வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது:
தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை அதிகாரப்பூர் வலைதளத்தின் (https://nilgiris.nic.in/notice_category/recruitment/) மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை நீங்கள் அலுவலக நேரங்களில் சமர்ப்பிக்க வேண்டும். 27/11/2023 முதல் 20/12/2023 அன்று மாலை 5:45 மணிக்குள் குன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வளர்ச்சி பிரிவில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம்.
கவனிக்க வேண்டிய தகவல்கள்:
- அரசு விதிகளின்படி இன சூழ்ச்சி முறையை பின்பற்றி பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படும். இன சுழற்சி முறையை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர் அறிவிப்பை பாருங்கள்.
- தகுதி இல்லாமல் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- காலதாமதம் கடந்து வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படாது.
- எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.
M Raj (Mohan Raj) is an expert in crafting informative articles, specializing in education updates and detailed job postings. With a keen eye for detail, Mohan Raj provides readers with accurate and up-to-date information.