ராமநாதபுரம் மாவட்டத்தில் வெளிவந்த அரசு வேலை வாய்ப்பு பற்றிய கட்டுரைதான் இது. ஆம், இந்த ராமநாதபுரம் Aspirational Block Follow வேலை வாய்ப்பு ஆனது ஒரு சிறந்த வேலை வாய்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மைதான்! இதற்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். மேலும் 2024 வரை இந்த பணி உங்களுக்கு இருக்கும், அதாவது இது ஒரு ஒப்பந்த அடிப்படையில், ஆனாலும் நவம்பர் மாதம் 2024 வரை இந்த பணி உங்களுக்கு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கவனிக்க: ஊரக வளர்ச்சி தொடர்பான உயர் கல்வி பயின்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்,
முக்கியமாக மாதம் 55,000/- ரூபாய் இதற்கு ஊதியம் வழங்கப்படுகிறது, ஆகையால் இது ஒரு சிறந்த பணி என்பதால் கட்டாயம் இந்த பணிக்கு விண்ணப்பங்கள் பூர்த்திசெய்து அனுப்பலாம்.
உண்மைதான் நண்பரே! நீங்கள் தகுதியான நபராக இருந்தால் ராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் (வளர்ச்சி பிரிவு) மூலம் கிடைக்க உள்ள இந்த வேலை சம்பந்தமான தெளிவான விளக்கங்களை பார்த்து கட்டாயம் விண்ணப்பியுங்கள். தயக்கமில்லாமல் இது சம்பந்தமான முழு விளக்கங்களும் இந்த வலைதள கட்டுரைகள் உங்களுக்கு கிடைக்க உள்ளது.
[dflip id=”9978″ ][/dflip]
[dflip id=”9982″ ][/dflip]
Application for the post of Aspirational Block Fellow – Thiruvadanai Block from Rural Development, Ramanathapuram
அறிவிப்பு | mayiladuthurai.nic.in |
பதவி | வட்டார திட்ட அலுவலர் (Aspirational Block Follow) |
சம்பளம் | 55,000/- |
காலியிடம் | 1 |
பணியிடம் | திருவாடானை ராமநாதபுரம் |
தகுதிகள் | அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு பிரிவில் முதுகலை பட்டம் |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 31/10/2023 |
பதவியின் பெயர் என்ன?
இது இராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியரகம் (வளர்ச்சி பிரிவு) மூலம் வழங்கப்பட உள்ள வளரும் வட்டார திட்ட அலுவலர் (Aspirational Block Follow) பணியாகும், இந்த பணியிடத்திற்கு ஒரு (1) காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பணியிடம் எங்கு வழங்கப்படும்?
தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு இராமநாதபுரத்தில் திருவாடானை ராமநாதபுரம் மாவட்டம் எனும் பகுதியில் உங்களுக்கு நவம்பர் மாதம் 2024 வரை இந்த வேலை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
பணிக்கான தகுதிகள் என்ன?
ராமநாதபுரம் மாவட்டத்தில் வெளியான இந்த வளரும் வட்டார திட்ட அலுவலர் பணியிடத்திற்கான தகுதிகளை பொறுத்தவரை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருப்பவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
- மேலும் தகவல் பகுத்தாய்வு செய்தல் மற்றும் செயல்பாடுகள் விளக்கம் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
- அதோடு சமூக வலைதளங்களை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும், மேலும் திட்டங்களை நிர்வாகப்படுத்துதலில் திறன் பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் வளர்ச்சி தொடர்பான நிறுவனங்களில் வேலை செய்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது, அதோடு ஆங்கிலம் மற்றும் தமிழ் தொடர்பு கொள்ளக்கூடிய திறன் இருக்க வேண்டும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கிய குறிப்பு: ஊரக வளர்ச்சி தொடர்பான உயர் கல்வி பயின்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும், இந்த விஷயத்தை தெரிந்து கொண்டு கட்டாயம் நீங்கள் ஊரக வளர்ச்சி தொடர்பான உயர் கல்வி பெற்று இருந்தால் கட்டாயம் விண்ணப்பியுங்கள், உங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வளரும் வட்டார திட்ட அலுவலர் வேலைக்கான ஊதியம் எவ்வளவு?
வேலைக்கான ஊதியத்தை பொருத்தவரை மாதம் 55,000/- ரூபாய், மேலும் வரி படுத்தவும் இதில் பொருந்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது, ஆகையால் தகுதியுள்ள நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 55 ஆயிரம் ரூபாய் வரை வரி பிடித்த அடங்க உங்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் நமக்கு தெரிய வருகிறது.
வளரும் வட்டார திட்ட அலுவலருக்கான பணி மற்றும் கடமைகள்:
வளரும் வட்டார திட்ட பகுதிகளில் வளர்ச்சிக்கான செயல்பாடுகளை வடிவமைப்புகள் மற்றும் செய்தல் திட்டங்களை செயல்படுத்த வட்டார அளவிலான அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு தருதல் என்பது முதல் கடமையாகும்.
இரண்டாவது, கடமை திட்டங்களை செயல்படுத்துதல், சவால்களை கண்டறிதல் போன்றவைகளை தொடர்ச்சியாக கலங்களை பார்வையிடுதல், அதாவது கள ஆய்வில் ஈடுபடுதல் என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது, வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு வட்டார மற்றும் மாவட்ட அளவிலான அலுவலருக்கு தகவல்களை பகுத்தாய்வு செய்தல் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் பரிந்துரைகளை கூறுதல் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில் இது ஒரு முக்கியமான பணி என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம்.
நான்காவது, உள்ளூர் சமூக மக்களை மேம்படுத்துவதற்கான பயிற்சி பட்டறைகள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள், திறன் வளர்ச்சி பயிற்சியில் செயல்படுத்துதல் போன்ற அறிவுரைகளை வழங்குவதில் நீங்கள் முக்கியத்துவம் பெற்றிருக்க வேண்டும்.
ஐந்து, சிக்கல், சவால் மற்றும் தேவை போன்றவற்றிற்கான மாநில மற்றும் niti அளவில் இணைந்திருத்தல்.
ஆறாவது, மாவட்ட ஆட்சியர் அவர்களால் வழங்கப்படும் பிற பொறுப்புகளையும் நீங்கள் சிறப்பாக செய்ய வேண்டும்.
ராமநாதபுரம் வளரும் வட்டார திட்ட அலுவலர் வேலைக்கு எங்கு விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்வது, மற்றும் எவ்வாறு விண்ணப்பிப்பது?
முதலில் விண்ணப்பங்களை எங்களுடைய வலதலத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், அல்லது அதிகாரப்பூர்வ ராமநாதபுரம் மாவட்ட வலைதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பின்பு பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் இணைத்து சரியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தபால் மூலமாக அனுப்புதல் அவசியம்.
அனுப்பவேண்டிய முகவரி: மாவட்ட ஆட்சித்தலைவர், வளர்ச்சி பிரிவு, மாவட்ட ஆட்சியரகம் ராமநாதபுரம் 623503 என்ற முகவரிக்கு 31/10/2023க்குள் அஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும் என்று அதிகாரப்பூர் அரிப்பின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில விஷயங்கள் இது பற்றி பேசலாம்!
ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சி பிரிவில் வெளியிடப்பட்டுள்ள இந்த வளரும் வட்டார திட்ட அலுவலர் பணியிடத்திற்கு ஒரு காலி பணியிடம் மட்டுமே உள்ளது. இருந்த போதும் இது நவம்பர் மாதம் 2024 வரை வழங்கப்படும் பணி, அதுமட்டுமில்லாமல் 55 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கக்கூடிய பணியாக இருப்பதால் கட்டாயம் இதை தவறவிடாதீர்கள்.
மேலும் முக்கிய பொறுப்புகள், மற்றும் நல்ல மரியாதை மிக்க பணியாக இது உங்களுக்கு அமையும், ஆகையால் இந்த பணியை சிறப்பாக செய்தால் வருங்காலத்தில் உங்களுக்கு அரசு தரப்பில் கூடுதல் பணி வழங்கப்படலாம், அல்லது காலம் நீட்டிக்க படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
காரணம், இது போன்ற வேலைகளில் அவ்வாறு ஏற்கனேவே பலருக்கு வேலையின் திறமையை பொறுத்து பணி நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, ஆகையால் இந்த வேலையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள், உங்கள் சுற்றத்தாருக்கும் தகுதி இருந்தால் அவர்களுக்கும் இந்த கட்டுரையை பகிருங்கள்.
JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.
Tamil Selvan