ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு இரவு காவலர் பணியிடம் – சம்பளம் 15 700 முதல் 50,000!

Ramanathapuram Recruitment 2024: இராமநாதபுரம் மாவட்டத்தில் வெளிவந்த இரவு காவலர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த பணியிடமானது நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. அதாவது தேர்வு இல்லாமல் எழுத படிக்க தெரிந்திருந்தாலே போதும் என்ற அடிப்படையில் இந்த காலியிடம் நிரப்பப்பட உள்ளது.

ஆகையால் ஆர்வம் உள்ளவர்கள் கட்டாயம் விண்ணப்பிக்கலாம், விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதியானது 19/01/2024 என்பது குறிப்பிடத்தக்கது, அதற்குள் உங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மறவாதீர்கள்.

Ramanathapuram Tiruvadanai Union Office Recruitment 2024 last date of application 19 01 2024
Ramanathapuram Tiruvadanai Union Office Recruitment 2024 last date of application 19 01 2024

பணியிடம்: இந்த வேலைவாய்ப்பானது இராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியம் பொது நிதியின் கீழ் ஊதியம் பெறும் வேலையாக உள்ளது. இதற்கு ஒரு காலிப்பணியிடம் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைக்கான வயது: வேலைக்கான வயது வரம்பு பொறுத்தவரை 18 வயது நிரம்பியவர் 37 வயதை கடக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம். இன சுழற்சி வயது வரம்பு பொறுத்தவரை பொதுப் பிரிவினருக்கு 18 முதல் 32. பிற்படுத்தப்பட்டோர்/மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் போன்றோருக்கு 18 முதல் 34. ஆதிதிராவிடர்/பழங்குடியினருக்கு 18 வயது முதல் 37 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நிபந்தனைகளை பொறுத்தவரை விண்ணப்பதாரர்களுக்கான கல்வி தகுதி இருப்பிட சான்று முன்னுரிமை சான்று மற்றும் இதர சான்றுகளுடன் ஆதாரங்கள் இணைத்து அனுப்ப வேண்டும். நீங்கள் தபால் மூலம் அனுப்ப வேண்டும். அனுப்ப வேண்டிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கவனிக்க: அடுத்த கட்டமாக வயதுவரம்பு மற்றும் கல்வி தகுதியற்ற நபர்களிடமிருந்து பரம்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகையால் குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு படித்தவர்கள் கூட அல்லது ஐந்தாம் வகுப்பு படித்தவர்கள் கூட எழுத படிக்க தெரிந்திருப்பார்கள். அது சம்பந்தமான ஆவணங்களை இணைக்க வேண்டும்.

Ramanathapuram Recruitment 2024
Ramanathapuram Recruitment 2024

விண்ணப்பதாரர்களின் காலியிடம் அறிவிக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய பகுதியில் வசிப்பவராக இருக்க வேண்டும். அப்படி என்றால் இந்தப் பகுதிக்கு நீங்கள் திருவாடானை ஊராட்சி ஒன்றியம் வசிப்பவராக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. காரணம் இது இரவு காவலர் பணியிடமாகும்.

மேலும், தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் விவரம் தனியே அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகையால் உங்கள் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து அலுவலக வேலை நாட்களில் 15/12/2023 முதல் 19/12/2024 வரை பிற்பகல் 05:45 ஐந்து மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கீழ்கண்ட முகவரிக்கு நேரில் அல்லது தபால் மூலமாக அனுப்புங்கள்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: ஆணையாளர், வட்டாட் வளர்ச்சி அலுவலர், ஊராட்சி ஒன்றியம், திருவாடானை ராமநாதபுரம் மாவட்டம் 623407 என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.

விண்ணப்பம்: விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய இந்த பகுதியை கிளிக் செய்யுங்கள். அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்துப் பார்க்க இந்த பகுதியை கிளிக் செய்யுங்கள்.

கூடுதல் தமிழக அரசு வேலைகள்!
கூடுதல் இராமநாதபுரம் அரசு வேலைகள்!

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment