சேலம் மாவட்ட பெண்களுக்கான அரசு வேலை வாய்ப்பு!

சேலம் மாவட்ட அரசு வேலை வாய்ப்பு அறிவிப்பு: சேலம் மாவட்டத்தில் 6 விதமான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது இந்த ஆறு விதமான காலி பணியிடங்களுக்கும் 14 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது, இந்த DSWO பணியிடத்திற்கான முழு விவரங்களை இந்த வலைதள கட்டுரையில் பார்க்க உள்ளோம்.

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

ஆம் இதில் குறைந்தபட்ச 8ம் மட்டும் 10ம் படிப்பு முதல் அதிகபட்ச படிப்பு வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கக்கூடிய வேலைகள் அடங்குகின்றன, இதை பற்றி தெளிவான விளக்கங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம் வாருங்கள்.

[dflip id=”10211″ ][/dflip]


அறிவிப்புsalem.nic.in
பதவிCentre Administrator
Senior Counsellor
IT-Admin
Case Worker
Security Guard
Multi Purpose Helper
சம்பளம்6,400/- முதல் 30,000/-
காலியிடம்14
பணியிடம்சேலம் DSWO
தகுதிகள்8ம் வகுப்பு முதல்
விண்ணப்பிக்க கடைசி தேதி10/11/2023

முதல் வேலை:

இந்த மைய நிர்வாகி (Centre Administrator) பணிக்கு 1 பணியிடம் உள்ளது. தொகுப்பதமாக மாதம் 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது, மேலும் கல்வி தகுதியை பொறுத்தவரை MSW (Counselling Psychology ), சமூகப் பணி மற்றும் உளவியல் பிரிவில் முதுகலை பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு பொறுத்தவரை 23 வயதுக்கு மேல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன் அனுபவ விளக்கங்கள்:

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை தடுக்கும் அரசு அல்லது தனியா நிறுவனத்தில் உளவியல் ஆலோசகராக 4 வருடம் பணிபுரிந்த அனுபவம் பெற்று இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவராக மட்டுமே இருக்க வேண்டும். பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 24 மணி நேரமும் சேவை அளிக்கும் வகையில் 24×7 முறையில் பணி அமைக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாவது வேலை:

அடுத்து Senior Counsellor பணியிடம், இதற்கு ஒரு காலி பணியிடம் உள்ளது. மாதம் தொகுப்பு உதயமாக 20,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு MSW (Counselling Psychology), சமூகப் பணி மற்றும் உளவியல் பட்டப்படிவில் முதுகலை பெற்றிருக்க வேண்டும். 23 வயதுக்கு மேல் 40 வயதுக்குள் வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன் அனுபவம்:

முன் அனுபவத்தை பொறுத்தவரை பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை தடுக்கும் சட்டத்தில் தனியார் அல்லது அரசு நிறுவனத்தில் உளவியல் ஆலோசகராக இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்து அனுபவம் தேவைப்படுகிறது. நம் மேலே பார்த்த Centre Administrator வேலைக்கு 4 ஆண்டு அனுபவம் கேட்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது, அடுத்தபடியாக பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும், 24 மணி நேரமும் சேவையை அளிக்கும் வகையில் சூழச்சி முறையில் வேலையை செய்ய வேண்டி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது வேலை:

மூன்றாவது வேலை பொருத்தவரை தொழில்நுட்ப வல்லுநர் அதாவது ஐடி அட்மின் வேலைக்கு 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதியை பொருத்தவரை B.Sc., B.E., (Computer Science), அதாவது கணினி சார்ந்த பட்டப் பிரிவில் இளங்கலை பட்டம் அல்லது முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும். இதற்கு 21 வயதுக்கு மேல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

முன் அனுபவம்:

முன் அனுபவத்தை பொருத்தவரை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை தடுக்கும் திட்டத்தில் உளவியல் ஆலோசகராக ஒரு வருடம் பணிபுரிந்த அனுபவம் இருந்தால் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. எப்போது போல் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும், 24 மணி நேரமும் பணி செய்யக்கூடிய சூழ்ச்சி முறையில் பணியாற்ற வேண்டும்.

குறிப்பு: இப்பணிக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும் என்ற நிபந்தனை குறிப்பிடப்படவில்லை.

நான்காவது வேலை:

வழக்கு பணியாளரின் (Case Worker) எனும் இந்த பணியிடத்திற்கு மட்டும் ஆறு காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடத்திற்கு மாத தொகுப்பு ஊதியம் 15,000 ரூபாய் சம்பளம், கல்வி தகுதியை பொருத்தவரை BSW / MSW (Counselling Psychology), அதாவது சமூக பணி மற்றும் உளவியல் பாடப்பிரிவில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அதோடு வயது வரம்பு பொறுத்தவரை 21 வயதுக்கு மேல் 40 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம், சேலம் மாவட்டத்தை சேர்ந்தவராக மட்டுமே இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும், எப்போதும் போல் 24 மணி நேர முறையில் வேலை செய்ய தயாராக இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ஐந்தாவது வேலை:

காவலர் பணியிடம் காவலர் (Security Guard), இந்த பணியிடத்தை பொருத்தவரை இரண்டு பணியிடம் காலியாக உள்ளது, இதற்கு மாத ஊதியமாக பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம், வயது வரம்பு பொறுத்தவரை 21 வயதிற்கு மேல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். சேலத்தில் வசிப்பதாக இருக்க வேண்டும்.

மேலும் தனியார் அலுவலகத்தில் அல்லது அரசு அலுவலகத்தில் இரண்டு வருடம் முன் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும் (அதாவது ஏற்கனவே பாதுகாப்பு பணியில் இருந்தவராக இருக்க வேண்டும்). விண்ணப்பதாரர்கள் கட்டாயம் உள்ளூரை சேர்ந்தவராக மட்டுமே இருக்க வேண்டும், 24 மணி நேரமும் சூழ்ச்சி முறையில் வேலை செய்ய தயாராக இருக்க வேண்டும்.

கவனிக்க: காவலர் பணியிடத்திற்கு வாகனம் ஓட்டுபவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும், அதாவது வாகனம் ஓட்ட தெரிந்தவர்களுக்கு இந்த செக்யூரிட்டி பணியில் முதல் முன்னுரிமை அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆறாவது பணி:

உதவியாளர் (Multi Purpose Helper) எனும் இந்த பணியிடத்திற்கு 6,400 சம்பளம் நிர்ணிக்கப்பட்டுள்ளது, இதற்கு சேலத்தில் ஒரு காலிப்பணியிடமும், ஆத்தூரில் 2 பணியிடமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்காது, மொத்தம் மூன்று காலிப்பணியிடங்கள் இதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அதோடு தொகுப்பூதியமாக 6,400. கல்வி தகுதியை பொறுத்தவரை செக்யூரிட்டி வேலைக்கு என்ன கல்வி தகுதி கேட்கப்பட்டதோ அதே கல்வி தகுதி, எட்டாம் மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு என்பது 21 வயதுக்கு மேல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பொறுப்பு:

நிர்வாக அமைப்பின் கீழ் பணிபுரிந்தவராக இருக்க வேண்டும், நல்ல சமையல் தெரிந்திருக்க வேண்டும் 24 மணி நேரமும் சேவைகளுக்கு சுழற்சி முறையில் வேலை செய்ய வேண்டும். உள்ளுரை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கவனிக்க: இதற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்ற விதிமுறை அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Explore 14 job opportunities in Salem district for women, ranging from Counseling to Security roles. Learn about qualifications and requirements.
Salem District Government Job Vacancies for Women: 6 Roles with Unique Requirements

Salem DSWO – One Stop Centre Addrsss: M543+VHR, Shevapet, Salem, Tamil Nadu 636002

நீங்கள் சேலம் மாவட்டத்தில் வெளியான இந்த DSWO – One Stop Centre Recruitment News வேலை வாய்ப்பு சம்பந்தமான விவரங்களை நேரடியாக DSWO சென்டர் மூலம் அணுகி தெரிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment