மாதம் 55,000/- தமிழ்நாடு அரசு வேலை! – பட்டப்படிப்பு முடித்தவர்கள் தவறவிடாதீர்கள்!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (Aspirational Block Fellow) பணியிடங்களுக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. தகுதியானவர்கள் இந்தப் பதவிக்கு மாதாந்திர சம்பளம் ரூ.55,000/- வழங்கப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இன்று விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சிவகங்கை மாவட்ட அரசு காலிப்பணியிடங்கள்: தற்போதைய அறிவிப்பின்படி சிவகங்கை மாவட்ட மாவட்ட திட்டமிடல் துறையில் ஆஸ்பிரேஷனல் பிளாக் ஃபெலோ பணிக்கான 01 பணியிடம் மட்டுமே உள்ளது.

ஆஸ்பிரேஷனல் பிளாக் ஃபெலோ கல்வித் தகுதி: அரசு அல்லது அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் / கல்லூரிகளில் ஏதேனும் ஒன்றில் முதுகலை பட்டப்படிப்பை முடித்த விண்ணப்பதாரர்கள் ஆஸ்பிரேஷனல் பிளாக் ஃபெலோ பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

சக வயது வரம்பு: இந்த வேலைக்கான அறிவிப்பு பொறுத்தவரை வயது வரம்பு அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. எனவே நீங்கள் சிவகங்கை மாவட்டம் என்றால் நேரில் சென்று தெரிந்து கொள்ள முடியும்.

ஒருவேளை நீங்கள் தொலைவில் இருந்தால் அலுவலக தொலைபேசி (04575- 245864)எண்ணில் நீங்கள் தொடர்ந்து கொண்டு பேச முடியும் அதற்கான வாய்ப்பும் உள்ளது.

மாதாந்திர சம்பளம்: ஆஸ்பிரேஷனல் பிளாக் ஃபெலோ பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பதவிக்காலத்தில் ரூ.55,000/- மாத சம்பளம் பெறுவார்கள்.

வேலைக்கான கல்வி தகுதி:

  • ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் முதுகலை பட்டதாரி.
  • தரவு பகுப்பாய்வு மற்றும் விளக்கக்காட்சி திறன் பெற்றிருக்க வேண்டும்.
  • சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதில் தெரிந்திருக்க வேண்டும்.
  • திட்ட மேலாண்மை திறன் பெற்றிருக்க வேண்டும்.
  • மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவம்/இன்டர்ன்ஷிப்.
  • நல்ல தகவல் தொடர்பு திறன் கொண்ட சுயமாக இயக்கப்படுகிறது.
  • அந்தந்த ஆஸ்பிரேஷனல் பிளாக்கின் உள்ளூர் மொழியை அறிந்திருத்தல்.

தேர்வு செயல்முறை: நேர்காணல் மூலம் பொருத்தமான வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் வேலைக்கு தேர்ந்தெடுக்கக்கூடிய விதத்தைப் பற்றி அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. ஆகையால் உரிய ஆவணங்களை எடுத்துக்கொண்டு நேர்காணலில் கலந்து கொள்ளும்போது நேர்முகத் தேர்வின் மூலம் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படலாம்.

வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

  • உங்களுடைய விண்ணப்ப படிவத்தை நீங்கள் முதலில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை தெளிவாக பூர்த்தி செய்யுங்கள்.
  • பூர்த்தி செய்த பிறகு விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய விலாசம்: மாவட்ட திட்ட அலுவலகம் / மாவட்ட ஊராட்சி அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சிவகங்கை 630 561.


District Planning Office – Application for the Post of Aspirational Block Fellows.
District Planning Office – Application for the Post of Aspirational Block Fellows.
அறிவிப்புsivaganga.nic.in
பதவிAspirational Block Fellow
சம்பளம்55,000/-
காலியிடம்01
பணியிடம்சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில்
தகுதிகள்முதுகலை பட்டம்
விண்ணப்பிக்க கடைசி தேதி12/12/2023

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment