விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஜீப் டிரைவர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆகையால், ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காரணம் உங்கள் ஊரிலும் இதற்கான வாய்ப்பு இருக்கக்கூடும், ஆகையால் கட்டுரையை தெளிவாக பாருங்கள்.
விழுப்புரம் மாவட்டத்தில் கிராம பஞ்சாயத்துகளில் மாவட்ட வாரியான காலியிடங்கள் வந்துள்ளது. உதாரணத்திற்கு கோலியனூர், மரக்காணம், முகையூர், வானூர், செஞ்சி, கண்டமங்கலம், மைலம், மேல்மலையனூர், ஒலக்கூர், திருவெண்ணைநல்லூர் மற்றும் விக்கிரவாண்டி போன்ற பல கிராம்களில் இது வெளியிடப்பட்டுள்ளது, அந்த விவரங்களை சுலபமாக நீங்க கீழே அணுகலாம்.
அடிப்படைத் தகுதிகள்: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் கீழ் கனவல்ல பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் ஜீப் டிரைவர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் மோட்டார் வாகனச் சட்டம், 1988-ன்படி தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும். மேலும், ஐந்தாண்டுகளுக்கு குறையாத நடைமுறை ஓட்டுநர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
- ஜீப் டிரைவர்: ரூ. 19500 – 62000/- மற்றும் பிற படிகள்.
- அலுவலக உதவியாளர்: ரூ. 15700 – 50000/- மற்றும் பிற படிகள்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்கள்:
கிராமங்கள் | உள்ளாட்சித் துறையில் வேலை வாய்ப்புகள் | தொடக்க தேதி | கடைசி தேதி | விண்ணப்பம் |
---|---|---|---|---|
Vikkiravandi | Office Assistants | 15/11/2023 | 24/11/2023 | View (2 MB) |
Vanur | Office Assistants | 15/11/2023 | 24/11/2023 | View (2 MB) |
Thiruvennainallur | Office Assistants | 15/11/2023 | 24/11/2023 | View (1 MB) |
Olakkur | Office Assistants | 15/11/2023 | 24/11/2023 | View (1 MB) |
Mugaiyur | Office Assistants | 15/11/2023 | 24/11/2023 | View (685 KB) |
Merkanam | Office Assistants | 15/11/2023 | 24/11/2023 | View (2 MB) |
Melmalaiyanur | Office Assistants | 15/11/2023 | 24/11/2023 | View (2 MB) |
Mailam | Office Assistants | 15/11/2023 | 24/11/2023 | View (1 MB) |
Kandamangalam | Office Assistants | 15/11/2023 | 24/11/2023 | View (1 MB) |
Union, Kanai | Office Assistants | 15/11/2023 | 24/11/2023 | View (1 MB) |
Gingee | Office Assistants | 15/11/2023 | 24/11/2023 | View (2 MB) |
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள ஜீப் டிரைவர் பணியிடங்கள்:
கிராமங்கள் | உள்ளாட்சித் துறையில் வேலை வாய்ப்புகள் | தொடக்க தேதி | கடைசி தேதி | விண்ணப்பம் |
---|---|---|---|---|
Vanur | Jeep Drivers | 15/11/2023 | 24/11/2023 | View (853 KB) |
Koliyanur | Jeep Drivers | 15/11/2023 | 24/11/2023 | View (2 MB) |
Kanai | Jeep Drivers | 15/11/2023 | 24/11/2023 | View (1 MB) |
Gingee | Jeep Drivers | 15/11/2023 | 24/11/2023 | View (357 KB) |
கவனிக்க: விழுப்புரம் மாவட்டத்திற்கான https://viluppuram.nic.in/ என்ற இணையதளத்தில் காலி பணியிட விவரம் மற்றும் விண்ணப்பப் படிவம் வெளியிடப்பட்டுள்ளது.
முக்கிய குறிப்பு: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் மற்றும் உரிய சான்றிதழ்களின் நகல்களை ஆணையர், ஊராட்சி ஒன்றியம், காணை விழுப்புரம் மாவட்டம் – 605301 என்ற முகவரிக்கு அலுவலக வேலை நாட்களில் மாலை 5.45 மணிக்குள் 24.11.2023 அன்று பெற்றுக்கொள்ள வேண்டும்.
நேரில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அதோடு தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து பதிவு செய்யப்பட்ட கடிதங்கள் மூலம் தெரிவிக்கப்படும்.
முக்கிய குறிப்புகள்:
ரூ.30/-க்கான சுய முகவரியிடப்பட்ட தபால்தலையை அஞ்சல் உறை-1 (10×4 அங்குல அஞ்சல் அட்டை) உடன் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் கல்விச் சான்று, குடும்பச் சான்று மற்றும் விருப்பச் சான்று ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும்.
மேலும் இனம், வயது மற்றும் கல்வித் தேவைகளை பூர்த்தி செய்யும் நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
JobsTn Nandha Kumar is very proficient in writing job-related website articles, Many articles written by him have helped people a lot and many have become a great way to get jobs. Whereas, JobsTn Nandha Kumar is an expert in writing very clear job articles. It is worth noting that he is the best writer for article creation/design as recommended by Google.