பொதுவாக ரயில்வே வேலைவாய்ப்புக்கு என்று அனைவருமே காத்திருப்பார்கள், அதுவும் தமிழர்களுக்கான ரயில்வே வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்ட தகவல் எப்போது வரும் என்று எண்ணம் அனைவருக்கும் இருக்கும்.
ஆம், அந்த வகையில் வெளிவந்த ஒரு அறிவிப்பு பற்றிய கட்டுரைதான் இது. உண்மைதான் இந்த வேலை வாய்ப்புக்கு 27/11/2023 வரை நீங்கள் விண்ணப்பிக்க முடியும். மேலும் 67 பணியிடங்கள் உள்ளது. முக்கியமாக சென்னையை மையமாகக் கொண்டு இந்த காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீப காலமாக இது Southern Railway சம்பந்தமான கட்டுரை வலைதளங்களில் அதிக அளவு வைரலாகி கொண்டு வருகிறது. அதுபற்றிய விரிவான விளக்கத்தில் உங்களுக்கு தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள் தெரியவரும். நாங்களும் இந்த பதிவில் கொடுக்கவுள்ளோம், ஆகையால் வாருங்கள்.
அதாவது இந்த வேலை வாய்ப்புக்கு பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்க முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வேலைக்கு 18000 முதல் 29000 ரூபாய் வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியான ஊதியத்தை கொண்டு அறிவிப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த Southern ரயில்வே வேலையானது 28/10/2023 அன்று வெளியிடப்பட்டு, 27/11/2023 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் கூறியிருக்கிறது.
அதாவது 27/10/2023 அன்று காலை 9 மணி முதல் 27/11/2023 இரவு 11:59 மணி வரை விண்ணப்பிக்க முடியும் என்று அதிகார அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகவல்களை தெளிவாக பார்த்து பல நபர்கள் விண்ணப்பித்து வருகிறார்கள். ஒருவேளை நீங்கள் விண்ணப்பிக்கவில்லை என்றால் விண்ணப்பிப்பதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள்.
Southern Railway 67 காலி பணியிடங்கள்:
மொத்தம் 67 காலி பணியிடங்களில் நாலு மற்றும் ஐந்து லெவல்களில் 5 காலிப்பணியிடங்களும், இதில் லெவல் ரெண்டு மற்றும் மூன்றில் 16 காலிப்பணியிடங்களும், லெவல் ஒன்றில் மட்டும் 46 காலி பணியிடுங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக இதற்கு பத்தாம் வகுப்பு முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வந்ததால் அனைவருமே ஆர்வமாக வேலைக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.
28/10/2023ல் வெளியிட்ட Southern Railway ஊதியம்:
மேலும் இதில் முதல் லெவலுக்கு 18000 ரூபாயும், இரண்டாவது லெவலுக்கு 19,900 ரூபாயும், லெவல் மூன்றுக்கு 21,700 ரூபாயும், லெவல் 4க்கு 25,500 ரூபாயும், லெவல் 5க்கு 29,200 ரூபாயும் ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
NOTE: ஆகையால் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் இந்த ஊதியத்தின் அடிப்படையில் வேலையில் அமர்த்தப்படுகிறார்கள்.
அதோடு ஆன்லைனில் விண்ணப்ப கட்டணம் என்பது 500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் போன்றவர்களுக்கும், பெண்களுக்கும் 250 ரூபாய் என்று நினைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கட்டண சலுகைக்கு நீங்கள் நிச்சயம் உரிய ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்பதும் நிபந்தனை. ஆகையால் இந்த வேலைக்கான முழு விவரத்தையும் பார்த்து விண்ணப்பித்து வேலையை பெறுவதற்கு வாய்ப்பில் ஈடுபடுங்கள். விண்ணப்பிக்க இந்த பகுதியை பாருங்கள்.
JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.