தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு: தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் சமூக சேவகர் வேலை வாய்ப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த அறிவிப்பின் அடிப்படையில் இது ஒரு ஒப்பந்த அடிப்படையில் (Social Worker in District Child Protection) வேலை என்பது குறிப்பிடத்தக்கது.
கவனிக்க: இந்த அறிவிப்பு வந்த நாளிலிருந்து 15 நாட்களுக்குள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும், மேலும் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 15/11/2023 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதற்குள் உங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான முழு உதவியும் இந்த ஜாப்ஸ்டிஎன் (JobsTn) வலைதள பக்கத்தில் கிடைக்கும் என்று உறுதி அளிக்கிறோம்.
ஒருவேளை நீங்கள் தேனி மாவட்டத்தை சேர்ந்தவராக இருந்தால் இந்த Social Worker in District Child Protection வேலை வாய்ப்பு பெறுவதற்கான வாய்ப்புகள் ஈடுபடுங்கள், வாருங்கள் கீழ்நோக்கி பயணிக்கலாம்.
[dflip id=”10268″ ][/dflip]
Recruitment for the post of Social Worker in District Child Protection Unit – Theni and Last Date as on 15-11-2023 at 05:45 PM
அறிவிப்பு | theni.nic.in |
பதவி | Social Worker in District Child Protection |
சம்பளம் | 18,000/- முதல் 29,200/- |
காலியிடம் | 01 |
பணியிடம் | தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் |
தகுதிகள் | சமூகப்பணி மற்றும் சமூக அறிவியல் பட்டம் |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 15/11/2023 |
Theni Social Worker வேலைக்கான காலியிடம் மற்றும் வேலையின் பெயர்:
இந்த தேனி மாவட்ட சமூக பணி வேலையை பொறுத்தவரை ஆங்கிலத்தில் சோசியல் ஒர்க்கர் (Recruitment for the post of Social Worker in District Child Protection Unit) என்று கூறுவார்கள். மேலும் இதை சமூக சேவகர் என்ற தமிழில் கூறுவர்கள்.
இந்த வேலைக்கான ஒரு காலி பணியிடம் 1 மட்டுமே தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த காலி பணியிடமானது குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு தேனி மாவட்டம் மூலம் கிடைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தேனி மாவட்ட Social Worker வேலைக்கான ஊதியம் எவ்வளவு?
30/11/2023 அன்று வெளியிட்ட அறிவிப்பின்படி தேனி மாவட்ட சோசியல் ஒர்க்கர் வேலை வாய்ப்புக்கான ஊதியம் 18,536 என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் இது ஒரு தொகுப்பூதியம் ஆகும்.
தொகுப்பூதியம் என்ன: தொகுப்பூதியம் என்பது குறுகிய காலத்திற்கு அல்லது குறைந்த வருடத்திற்கு (மாதத்திற்கு) கொடுக்கக் கூடிய வேலைக்கு நிர்ணயிக்கப்படும் ஊதியமே தொகுப்பூதியம் என்று தமிழில் குறிப்பிடப்படுகிறது.
தேனீ மாவட்ட Social Worker வேலைக்கான கல்வி தகுதி என்ன?
தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வெளியான சோசியல் ஒர்க் வேலைக்கான கல்வி தகுதியை பொருத்தவரை முதல் கல்வித் தகுதி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப்பணி மற்றும் சமூக அறிவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இரண்டாவது பணி அனுபவம், பனி அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். மூன்றாவது கணினியில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் (கணினி அறிவு முக்கியம்).
சோசியல் ஒர்க்கர் தேனீ வேலைக்கான வயது வரம்பு என்ன?
தேனி மாவட்ட இந்த அரசாங்க சோசியல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு சேர விரும்பும் நபர்களுக்கு வயது வரம்பு என்பது 40 வயதை கடக்காமல் இருக்க வேண்டும். அதாவது 40 வயது குள் இருக்கும் அனைவருமே இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வாறு விண்ணப்பிப்பது?
இந்த வேலைக்கு நீங்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும், அதாவது உங்களுடைய ஆவணங்கள் அனைத்தையும் நீங்கள் பூர்த்தி செய்து, நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் விலாசத்திற்கு அனுப்ப வேண்டும், அந்த விலாசம் எங்களுடைய வலைதளத்தில் கீழே கிடைக்கும்.
கவனிக்க: தேனி மாவட்ட அரசாங்க வேலை வாய்ப்புகள் பற்றிய வெளியிட்ட அறிவிப்பை எங்களுடைய வலைதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், தேனி மாவட்ட அதிகாரப்பூர் வலைதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இரண்டுமே எங்கள் வலைதள கட்டுரைமூலம் உங்களுக்காக கிடைக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
வீணப்பாக்கள் சமர்பிக்கவேண்டிய விலாசம்: இ.சாந்தியா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட தொகுதி அளவிலான அலுவலர் கட்டிடம் – II ஆட்சியர் வளாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மேல்மாடி தேனி – 625 531. |
Address By English: E.Santhiya, District Child Protection Officer District Child Protection Office, District Block Level Officer Building – II Collectorate Campus, District Employment Office Upstairs Theni – 625 531. |
பொதுவாக அரசாங்க வேலைகள் என்பது அனைவருக்கும் ஒரு கனவாக இருக்கும், நீங்கள் நேரடியாக நிரந்தர அரசாங்க வேலைக்காக ஆசைப்படுவது தவறு கிடையாது.
இருந்தாலும் அனுபவம் என்பது முக்கியம்; ஆகையால் இது போன்ற குறைந்த காலத்திற்கு வழங்கக்கூடிய தொகுப்பூதிய வேளையிலும் சேர்ந்து உங்களுடைய திறமையை வெளிப்படுத்துங்கள்.
காரணம் பல மாவட்டங்களில் இது போன்ற வேலை வழங்கிய பிறகு வேலையின் திறமையை பார்த்து நிரந்தர பணியாக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் பணியின் காலம் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது, ஆகையால் இதில் உங்கள் பங்களிப்பை கட்டாயம் கொடுங்கள்.
JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.