தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் பாதுகாப்பு அலுவலர் வேலைவாய்ப்பு!!

தூத்துக்குடி மாவட்டத்தில் வெளியான புதிய பாதுகாப்பு அதிகாரி (நிறுவன பராமரிப்பு) வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு தான் இது. மேலும் இந்த அறிவிப்பின் அடிப்படையில் 31/10/2023 வரை நீங்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

அதோடு ஒப்பந்த அடிப்படையில் இந்த வேலையை மேலும் சமூக பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டின் கீழ், குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு பாதுகாப்பு அதிகாரி ஆகிய வேலைகளுக்கான விண்ணப்பம் என்பது குறிப்பிடத்தக்கது, இது சம்பந்தமான தெளிவான விளக்கங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம் வாருங்கள்.


தூத்துக்குடி மாவட்ட பத்திரிக்கை செய்தி:

சமூக பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவிற்கு பாதுகாப்பு அதிகாரி (நிறுவன பராமரிப்பு) எனும் Protection Officer (Institutional Care) அடிப்படையில் வேலையில் சேர்க்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இந்த பாதுகாப்பு அதிகாரி பதவிக்கு தகுதியான வேட்பாளர்களிடமிருந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு தூத்துக்குடிக்கு விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கலாம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவுக்கு விண்ணப்பித்து தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள்.

[dflip id=”9768″ ][/dflip]


Recruitment of Protection Officer in Thoothukudi, District Child Protection Unit

அறிவிப்புthoothukudi.nic.in
பதவிபாதுகாப்பு அலுவலர் (நிறுவன பராமரிப்பு)
சம்பளம்ரூ.27804/-
காலியிடம்1 – (1 Post)
பணியிடம்தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில்
தகுதிகள்அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம்
விண்ணப்பிக்க கடைசி தேதி31/10/2023

வேலையின் பெயர் மற்றும் ஊதியம்:

வேலையின் பெயரை பொறுத்தவரை (Recruitment of Protection Officer ( Institutional Care) for District Child Protection Unit,
Thoothukudi). இதற்கு மாத ஊதியமாக Rs.27804/- (per month) ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி மாவட்ட புரொடக்ஷன் ஆபீஸ் வேலைக்கான கல்வி தகுதி மற்றும் அனுபவம்:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும், அது சம்பந்தமான தெளிவான விளக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

தகுதி, அனுபவம் மற்றும் வயது: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப் பணி / சமூகவியல் / குழந்தைகள் மேம்பாடு / மனித உரிமைகள் பொது நிர்வாகம் / உளவியல் / மனநலம் / சட்டம் / பொது சுகாதாரம் / சமூக வள மேலாண்மை ஆகியவற்றில் முதுகலை பட்டம் (10+2+3+2 முறை).

அல்லது

சமூக பணி / சமூகவியல் / குழந்தைகள் மேம்பாடு / மனித உரிமைகள் பொது நிர்வாகம் / உளவியல் / மனநலம் / சட்டம் / பொது சுகாதாரம் / சமூக வள மேலாண்மை ஆகியவற்றில் பட்டதாரி (10+2+3 முறை) திட்ட உருவாக்கம் / செயல்படுத்தல், கண்காணிப்பு ஆகியவற்றில் 2 வருட அனுபவத்துடன் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு / சமூக நலத்துறையில் கணினியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Show In English:

தூத்துக்குடி மாவட்ட சமூக பாதுகாப்பு துறையின் கீழ் கொடுக்கப்படும் வேலைக்கான வயது வரம்பு:

தற்போது வெளியிடப்பட்ட இந்த பாதுகாப்பு அதிகாரி (நிறுவன பராமரிப்பு) வேலைக்கான வயதுவரம்பு பொருத்தவரை 42 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.

எவ்வாறு விண்ணப்பிப்பது?

வேலைக்கான விண்ணப்ப படிவத்தை விண்ணப்பதாரர்கள் மற்றும் இதர விவரங்களை தூத்துக்குடியின் அதிகாரப்பூர் வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். (எங்களுடைய இந்த JobsTn பகுதியிலும் டவுன்லோட் செய்யலாம்).

அடுத்து, விண்ணப்பதாரர்கள் தங்களுடைய கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் அனுபவ சான்றிதழ்களை ஜெராக்ஸ் (நகலுடன்) பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தில் மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் உங்களுடைய விண்ணப்பம் 31/10/2023 அன்று மாலை 5:30 மணிக்குள் பின்வரும் முகமது அனுப்பி வைக்க வேண்டும், முகவரி சம்பந்தப்பட்ட விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அனுப்பி வைக்க வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு 176, முத்துசுரபி கட்டிடம் மணிநகர் 2வது தெரு, பாளை ரோடு தூத்துக்குடி 628 003. தொலைபேசி எண்: 0461 -2331188

Security Officer Employment in Tuticorin District Child Protection Division
Security Officer Job Vacancy in Child Protection Division Last Date to Apply 31/10/2023

கவனிக்க: மேற்படி பதவிக்கான நியமனத்திற்கான இந்தத் தேர்வு, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை பெஞ்ச் ஆகியவற்றின் கோப்புகளில் நிலுவையில் உள்ள ரிட் மனுவின் (WP (MD) எண்.25082 இன் 2022) இறுதி உத்தரவுகளுக்கு உட்பட்டு முற்றிலும் தற்காலிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment