கூட்டுறவு மொத்த விற்பனை லிமிடில் புதிதான வேலைவாய்ப்பு!

விருதுநகர் மாவட்டம் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை லிமிடில் புதிதான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பு பற்றிய முழு விளக்கத்தை கட்டுரையில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஆம் விருதுநகர் மாவட்டம் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையானது புதிய அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் அடிப்படையில் கூட்டுறவு மருந்துகத்தில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளது.

இப்பணிக்கு (B.Pharm, D.Pharm) டிகிரி தேர்ச்சி பெற்ற நபர்கள் விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இது சம்பந்தமான தெளிவான விளக்கங்களை கட்டுரையில் பார்த்து பணிக்கு விண்ணப்பியுங்கள்.

மருந்தாகுணர் எனும் இந்த பணிக்கு ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது, இதற்கு அரசு அங்கீகரிக்கப்பட்ட பாடசாலையில் B.Pharm, D.Pharm பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

மேலும் இப்ப இந்த பதவிக்கு வயது வரம்பு பற்றி விவரங்கள் அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை, அந்த அறிவிப்பை நீங்கள் கீழே பார்க்கலாம்.

மருந்தாளுநர் (Pharmacist) எனும் பணியிடத்திற்கு மாத தொகுப்பு ஊதயமாக 11 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் பணிக்கு நேர்முகத் தேர்வு மூலம் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதால், உங்கள் படிப்பு சார்ந்த ஆவணங்களை எடுத்துக் கொண்டு நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நாள் 31/3/2024, அன்று உங்களுடைய விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும், அந்த விண்ணப்பம் சம்பந்தப்பட்ட தகவல் அனைத்தும் அருப்புக்கோட்டை ரோடு விருதுநகர் மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் கிடைக்கும்.

consumer-cooperative-society-pharmacist-jobs-2024
consumer-cooperative-society-pharmacist-jobs-2024 Image (விருதுநகர் மாவட்டம் நுகர்வோர் கூட்டுறவு)

தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் நம்பர் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது, அந்த அறிவிப்பில் இருக்கும் மொபைல் நம்பரை தொடர்புகொண்டாள் கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளலாம், விருப்பப்பட்டால் இந்த தகவலை பகிருங்கள்.

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment