ந. .எண். 1/2024/அ1 நாள் 05.03.2024: கோவை மாவட்டம், பேரூர் வட்டம், மருதமலை கோவிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கண் அறிவிப்பு வந்துள்ளது. இந்த அறிவிப்பின் அடிப்படையில் 18 வயது முதல் 45 வயது உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம், இந்து சமயத்தை சார்ந்த நபர்களிடம் இருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக 12 பதவிகளில் 21 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, இதில் தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்க முடியும்.
இதில் பத்தாயிரம் ரூபாய் சம்பளம், 15,700 ரூபாய் சம்பளம், மற்றும் 31,500 ரூபாய், 50 ஆயிரம் ரூபாய் என பல பிரிவுகளில் சம்பளங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆகையால் ஒவ்வொரு வேலைக்கும் தனி தனி கல்வித் தகுதி, தனித்தனியான சம்பள விதிமுறைகள் மற்றும் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக இந்த மருதமலை கோவிலில் அறிவிப்பின் அடிப்படையில் பல வேலை வாய்ப்புகள் இருப்பதாக பேசினோம், அதில் டிக்கெட் விற்பனை எழுத்தர், அலுவலக உதவியாளர், காவலர், விடுதி காப்பாளர், ஓட்டுநர், பிளம்பர், பம்பு ஆப்ரேட்டர், மின் உதவியாளர், மினி பஸ் கிளீனர் போன்ற பல வேலை வாய்ப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
அந்த விவரங்கள் அனைத்தும் மருதமலை கோவிலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பை நீங்கள் முழுமையாக படிக்க வேண்டும், அந்த அறிவிப்பில் மொத்தம் 23 நிபந்தனைகள் உள்ளது.
ஆகயால், நிபந்தனைகள் அனைத்தையும் நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். மருதமலை கோவிலில் பதவியை பொருத்தவரை 23வது நிபந்தனையான கடைசி நாளான 5/4/2024 மாலை 5:45 மணிக்குள் உங்களுடைய விண்ணப்ப படிவத்தை அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி ஆனது; சுவாமி திருக்கோயில் மருதமலை துணை ஆணையர், செயல் அலுவலர், அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில், மருதமலை, பேரூர் வட்டம், கோவை மாவட்டம் 641046 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.
மேலும் 25 ரூபாய் மதிப்புள்ள அஞ்சல் வில்லையை ஒட்டி, சுயவிலாசம் இட்ட ஒப்புகை அட்டையுடன், அஞ்சல் உரையுடனும் இணைத்து அனுப்ப வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது.
அது சம்பந்தமான விவரங்கள் அனைத்தும் அடங்கிய அறிவிப்பு கட்டுரையில் கீழே கிடைக்கும், அனைத்தையும் தெளிவாக பார்த்துருங்கள்.
Maruthamalai Murugan Temple jobas 2024 Pdf
JobsTn M Raj is very proficient in article writing job-related vacancy details posts.