எழுதப்‌ படிக்க தெரிந்திருக்க வேண்டும்‌! விருதுநகர்‌ மாவட்ட அரசுவேலை! புதிய அறிவிப்பு!

விருதுநகர்‌ மாவட்டத்தில்‌ காலியாக உள்ள இரவுக்காவலர்‌ பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிப்பை நம்‌ JobsTn வலைதளத்தில்‌ காணலாம்‌.

தற்போது விருதுநகர்‌ மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில்‌ சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில்‌ ஒன்றிய தலைப்பில்‌ காலியாக உள்ள 1 இரவுக்காவலர்‌ காலிப்பணியிடத்தை நேரடி நியமனம்‌ மூலம்‌ நிரப்பிட தகுதியான விண்ணப்பத்தாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. எனவே இந்த விருதுநகர்‌ மாவட்ட வேலையை பற்றிய தகவலை கீழே காண்போம்‌ வாருங்கள்‌:

இந்த வேலைக்கான ஊதியம்‌ ரூ.15,7007- முதல்‌ ரூ.50,000/- வரை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்‌ இதற்கான இனசுழற்சியை பொறுத்தவரை ஆதிதிராவிடராக (முன்னுரிமை அடிப்படையில்‌ அருந்ததியினர்‌) (பெண்‌) (ஆதரவற்ற விதவை) இருத்தல்‌ வேண்டும்‌.

விருதுநகர்‌ மாவட்டத்தில்‌ வெளியான இந்த அரசு இரவுக்காவலர்‌ பணியிடத்திற்கான கல்வித்‌ தகுதியினை பொறுத்தவரையில்‌ எழுதப்‌ படிக்க தெரிந்திருக்க வேண்டும்‌.

அது மட்டுமல்லாமல்‌ மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்‌ பதிவு செய்திருக்க வேண்டும்‌ என்றும்‌ குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பினை பொறுத்தவரை 01.07.2023 அன்று குறைந்தபட்சம்‌ 18 வயது புர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்‌:

  • பொதுப்‌ பிரிவினருக்கு அதிகபட்சம்‌ 32 வயது
  • பிற்படுத்தப்பட்ட/மிகவும்‌ பிற்படுத்தப்பட்ட /சீரமரபினர்‌ வகுப்பினருக்கு அதிகபட்சம்‌ 34 வயது.
  • ஆதிதிராவிடர்‌/பழங்குடியினருக்கு அதிகபட்சம்‌ 37 வயது பூர்த்தி அடைந்திருக்கக்‌ கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பம்: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்‌ 06.11.2023 முதல்‌ 26.11.2023 வரை பிற்பகல்‌ 05.45 மணிக்குள்‌ கீழே குறிப்பிடப்பட்டூுள்ள முகவரிக்கு நேரடியாகவோ அல்லது பதிவுத்‌ தபால்‌ மூலமாகவோ சமர்ப்பிக்கப்பட வேண்டும்‌.

கவனிக்க: மேலும்‌ இப்பணியிடத்திற்கான மாதிரி விண்ணப்பப்‌ படிவத்தினை எங்கள்‌ வலைதளத்திலும்‌ அல்லது தேசிய தகவலியல்‌ மையம்‌ (National Informatics Center) virudhunagar.nic.in என்ற இணையதளத்திலும்‌ பதிவிறக்கம்‌ செய்து விண்ணப்பிக்கலாம்‌. இந்த இணையதளத்தில்‌ விண்ணப்பப்‌ படிவம்‌ மற்றும்‌ விண்ணப்பத்தாரர்களுக்கான அறிவுரை வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: ஆணையாளர்‌, ஊராட்சி ஒன்றியம்‌, சிவகாசி.


Applications are invited by the Sivakasi Block for Night Watchman Post
Applications are invited by the Sivakasi Block for Night Watchman Post 2023

Night Watchman Vacancy under union title in Sivakasi Panchayat Union in Virudhunagar District Rural Development Unit

[dflip id=”10848″ ][/dflip]

அறிவிப்புvirudhunagar.nic.in
பதவிNight Watchman
சம்பளம்15,700/- TO 50,000/-
காலியிடம்01
பணியிடம்விருதுநகர்‌ மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில்‌ சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில்‌
தகுதிகள்8th Pass (எழுதப்படிக்க தெரிந்தால் போதும்)
விண்ணப்பிக்க கடைசி தேதி26/11/2023

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment