விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு: விழுப்புரம் மாவட்ட மைய வட்டார ஆரம்பி சுகாதார நிலையங்களில் மைக்ரோ பயாலஜிஸ்ட், லேப் டெக்னீசியன், லேப் அட்டெண்டர் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வந்துள்ளது, இந்த வேலை ஒப்பந்த அடிப்படையில் ஆன வேலை என்பதை குறிப்பிடத்தக்கது.
- Microbiologist
- Lab Technician
- Lab Attendant
இந்த விழுப்புரம் மாவட்ட வேலைக்கான கல்வித் தகுதி, வயதுவரம்பு போன்றவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது, குறிப்பாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்க கூடிய வேலை வாய்ப்புகள் இதில் அடங்குகின்றது, எனவே விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கான ஒரு சிறந்த வேலை வாய்ப்பு கட்டுரையாக இது இருக்கும் காரணத்தினால் வாருங்கள் கட்டுரையில் உள்ள தகவல்களை தெளிவாக படிக்கலாம்.
[dflip id=”10097″ ][/dflip]
District Health Society, Villupuram
அறிவிப்பு | viluppuram.nic.in |
பதவி | MICROBIOLOGIST, CONTRACT LAB TECHNICIAN AND CONTRACT LAB ATTENDER |
சம்பளம் | – |
காலியிடம் | 3 |
பணியிடம் | விழுப்புரம் மாவட்டத்தில் |
தகுதிகள் | 10ம் வகுப்பு தேர்ச்சி முதல் |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 25/10/2023 |
விழுப்புரம் மாவட்ட DHS வேலைவாய்ப்பு கல்வி தகுதி என்ன:
மைக்ரோ பயாலஜிஸ்ட் எனும் வேலையானது தமிழில் நுண்ணுயிர்யலாளர் குறிப்பிடப்படுகிறது, இந்த வேலைக்கான காலில் கல்வி தகுதியை பொறுத்தவரை முதுகலை பட்டம், டிப்ளமோ, நுண்ணுயிரியல், வைராலஜி, நோயியல் மற்றும் பிற ஆய்வு அறிவியல் அல்லது மருத்துவ பட்டதாரி, மேலும் 2 இரண்டு வருட அனுபவத்துடன் கூடிய அவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
லேப் டெக்னீசியன் எனும் வேலைக்கான கல்வி தகுதி: இந்த ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் எனும் லேப் டெக்னீசியன் வேலைக்கு DMLT என்ற படிப்பை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
லேப் அட்டெண்டர்: DHS Lab Attendant எனும் வேலைக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வேலைக்கான காலி பணியிடங்கள் எத்தனை?
மூன்று வேலைகளுக்கும் மூன்று காலி பணியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது, இதில் லேப் டெக்னீசியன் (மைக்ரோலஜிஸ்ட்) வேலைக்கு ஒரு (1) பணியிடமும், லேப் டெக்னீசியன் வேலைக்கு ஒரு (1) பணியிடமும், லேப் அட்டெண்டர் வேலைக்கு ஒரு (1) பணியிடமும் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வேலைக்கான விண்ணப்பம் எங்கு அனுப்பப்பட வேண்டும்?
விண்ணப்பங்களை முழுமையான முகவரியுடன் மற்றும் (சான்றிதழ்கள்) கல்வித் தகுதி, சான்று ஆதார் நகல், மற்றும் அனுபவ சான்று அனைத்தும் இணைத்து தபால் மூலமாக அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள் 25/10/2023 பிற்பகல் 5 மணி குள் என்பது குறிப்பிடத்தக்கது.
கவனிக்க: இந்த வேலைக்கான விண்ணப்ப படிவத்தை எங்களுடைய வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், மேலும் அதிகாரப்பூர்வ (https://viluppuram.nic.in/) வலைதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம், அதை அணுகவும் வாய்ப்பு உங்களுக்கு கீழே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்:
அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி இணைக்க வேண்டிய ஆவணங்களின் பட்டியல்: பட்டப்படிப்பு, பட்டப்படிப்பு மதிப்பெண் சான்றிதழ், மற்றும் இருப்பிட சான்றிதழ், அடுத்து சாதி சான்றிதழ். மேலும் மாற்றுத்திறனாளி, விதவை, கணவரால் கைவிடப்பட்டவர், மூன்றாம் பாலினத்தவர் ஆக இருந்தால் அதற்கான சான்று கட்டாயம் இணைக்கப்பட வேண்டும்.
நிபந்தனைகள் என்ன?
நிபந்தனைகளை பொறுத்தவரை இப்பதவி முற்றிலும் தற்காலிகமானது, அதை நாங்கள் ஆரம்பத்தில் கூறுவிட்டோம், மேலும் இப்பதவி எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது, அதோடு எந்த நேரத்திலும் பணியிலிருந்து விடுவிக்கப்படலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி ஆனது நிர்வாக செயலாளர், துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள், மாவட்ட நல வாழ்வு சங்கம் (டிஸ்ட்ரிக்ட் ஹெல்த் சொசைட்டி) சென்னை நெடுஞ்சாலை விழுப்புரம் – 605602.
முக்கிய குறிப்பு:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தகுதி உடைய ஆவணங்களுடன் மாவட்ட நல வாழ்வு சங்கம் விழுப்புரம் அலுவலகத்தில் 26/10/2023 அன்று மாலை 5 மணிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.
பொறுப்பு: காலி பணியிடங்கள் நியமனம் செய்வது மாறுதலுக்கு உட்பட்டது என்றும் நிர்வாகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்ட மைய வட்டார் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒதுக்கப்பட்டுள்ள இந்த மூன்று வேலைகளுக்கான முழு விளக்கத்தையும் கொடுத்திருப்போம் என்று நம்புகிறோம், மேலும் சந்தேகம் இருந்தால் கட்டுரையின் கீழே இருக்கும் கருத்து பெட்டியல் பதிவிடுங்கள்.
M Raj (Mohan Raj) is an expert in crafting informative articles, specializing in education updates and detailed job postings. With a keen eye for detail, Mohan Raj provides readers with accurate and up-to-date information.