சுருக்கமாக (NABARD ) அழைக்கக்கூடிய விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு தேசிய வங்கி தனது புதிய வேலைவாய்ப்பு பற்றிய தகவலை வெளியிட்டுள்ளது.
இதற்கு மொத்தம் 177 (Development Assistant Posts) காலி பணியிடங்கள் இருப்பதாகவும், தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இந்த வேலைக்கான விளம்பர பிடிஎஃப் மூலம் எடுக்கப்பட்ட தகவல்களை தமிழ் மொழியில் தெளிவாக பார்க்கலாம், இந்த வேலையானது ஒரு வங்கி சார்ந்த வேலை, இதற்கான கல்வித்தகுதி மற்றும் விண்ணப்பிக்க கடைசி தேதி, அதிகாரப்பூர்வ அறிவிப்பு, வயதுவரம்பு போன்ற பல விஷயங்களை இந்த பகுதியில் நீங்கள் காண உள்ளீர்கள்.
மேலும் இதை பதிவு செய்வதற்கான உதவியையும் நாங்கள் வழங்க உள்ளோம், எனவே வங்கி சார்ந்த இந்த பணியை பற்றி தெரிந்து கொள்ள வாருங்கள், வலைதளத்தில் பயணிக்கலாம்.
வேலையின் ஊதியம் எவ்வளவு?
இந்த வேலைக்கான ஊதியத்தை பொருத்தவரை பல பிரிவுகளில் வழங்கப்படுகின்றது, ஆனால் தோராயமாக 32,000/- ரூபாய் வரை வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இருந்தபோதும் ஒவ்வொரு வேலைக்கும், தகுதிக்கும் ஏற்றார்போல் இந்த ஊதியம் மாறிக் கொண்டிருக்கும், அதற்கான விளக்கங்களை கீழே பார்க்கலாம்.
Rs. 13150-750(3) – 15400 – 900(4) – 19000 – 1200 (6) – 26200 – 1300 (2) – 28800 – 1480 (3) – 33240 – 1750 (1) – 34990 (20 years)
வயது வரம்பு என்ன?
விண்ணப்பத்திற்கான வயது வரம்பை பொருத்தவரை குறைந்தபட்ச வயது 21 ஆகவும் அதிகபட்ச வயது 35 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடிப்படையில் இது வகுப்பு வாரியாக வயதுவரம்பு மாற்றமடைகிறது, அது பற்றிய விளக்கங்களை நீங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் பார்க்க முடியும்.
மேலும் இந்த வயதுவரம்பு 01/09/2022 அன்று அடிப்படையில் கணக்கிடப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
தகுதி என்ன?
குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விவரம் | அறிவிப்பு |
---|---|
அறிவிப்பு | NATIONAL BANK FOR AGRICULTURE AND RURAL DEVELOPMENT |
துறை | (NABARD) விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கான தேசிய வங்கி |
சம்பளம் | Rs. 32,000/- |
திறக்கும் தேதி | 15 September 2022 at 00.01 hrs |
கடைசி தேதி | 10 October 2022 at 23.59 hrs |
வேலை இடம் | இந்தியா – தமிழ்நாடு |
பதிவுமுறையை | (Online) மூலமாக |
விண்ணப்பிக்கும் கடைசி தேதி என்ன?
இந்த வேலைக்கான தேதி ஆனது 15 செப்டம்பர் 2022 அன்று, மேலும் இந்த வேலைக்கான விண்ணப்பிக்க கூடிய இறுதி தேதி 10 அக்டோபர் 2022 ஆகும்.
எனவே அதற்குள் நீங்கள் உங்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும், அதற்கான தகுதி உங்களிடம் கட்டாயம் தேவைப்படும்.
மேலும் விண்ணப்பிக்கும் முறை ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க கூடிய வேலை, எனவே அது சம்பந்தமான வலைதள தொடர்புகளும் கீழே உங்களுக்கு கிடைக்கும்.
தேர்வு முறை எப்படி இருக்கும்?
வேலைக்கான தேர்வை பொருத்தவரை எழுத்து தேர்வு, அதாவது முதல்நிலை எழுத்து தேர்வில் 100 மதிப்பெண்களுக்கு, முதன்மை எழுத்துத் தேர்வில் 200 மதிப்பெண்களுக்கும்.
அடுத்து ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவ தேர்வு மூலம் உங்களுக்கு இந்த பணி வழங்கப்படுகிறது, எனவே இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்கும் போது இதற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?
வேலைக்கு விண்ணப்பிப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து அதை நன்கு படிக்க வேண்டும், பின்பு ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
எங்கள் வலைதளம் மூலமாகவோ அல்லது அதிகாரப்பூர்வ வலைதளம் மூலமாக முதலில் இந்த அறிவிப்பை பதிவிறக்கம் செய்து, அதை படித்துப் பாருங்கள்.
அதில் கொடுக்கப்பட்டுள்ள வேலைகளுக்கான கல்வித்தகுதி உங்களிடம் இருக்கிறதா என்பதை உறுதிபடுத்திக் கொண்டு விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ய தரராகுங்கள்.
விண்ணப்பிக்க கூடிய அந்த வலைதளத்தை திறவுங்கள், உங்களுடைய ஆவணங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து அதை சரியான முறையில் பூர்த்தி செய்துக்கொள்ளுங்கள்.
உங்களுக்கான மொபைல் நம்பர் ஜிமெயில் ஐடி அனைத்தையும் அதில் சரியாக உள்ளிட்டு விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யுங்கள்.
பதிவேற்றம் செய்யும்போது விண்ணப்ப கட்டணம் செலுத்த நேரிட்டால் கட்டாயம் அதை செலுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அனைத்து விஷயங்களும் சரியாக செய்யப்பட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர் இறுதி பொத்தானை அழுத்தி உங்கள் ஆவணத்தை வெற்றிகரமாக பதிவேற்றம் செய்யுங்கள்.
இறுதியாக பதிவேற்றம் செய்ததற்கான ஏதேனும் ஆதாரம் முகப்பு பகுதியில் தோன்றினால் அதை நகல் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் ஆவணம் சரிபார்க்கப்பட்டு நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வுக்கு உங்களை வரவேற்க வாய்ப்பு உள்ளது.
கவனியுங்கள்:
இந்த வங்கி சார்ந்த வேலையை தமிழக மக்களுக்கு தெரியப்படுத்தும் ஒரு முயற்சிதான் இந்த வலைதள கட்டுரை.
எங்களால் முடிந்தவரை தமிழ் மொழியில் இந்த தகவலை தொகுத்து வழங்கியிருக்கிறோம், கூடுதல் உதவி வேண்டுமென்றால் கருத்து பெட்டியில் உங்களுடைய கருத்தை பதிவிடுங்கள், விரைவில் அதற்கு பதில் அளித்து உதவி புரிவோம், மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெளிவாக பார்வையிடுங்கள்.
JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.