கோயம்புத்தூர் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மாவட்ட நல்வாழ்வு சங்கமானது அதாவது (District Health Society) என்று கூறக்கூடிய சங்கம் மூலம் புதிதாக வேலைவாய்ப்பை (9035/E/NHM/2021.dt.26.07.2022)அறிவித்துள்ளது.
சிஸ்டம் அனலைசர்/டேட்டா மேனேஜர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை என அறிவிப்பு வெளியாகி உள்ளது, இந்த அறிவிப்பு வந்த தேதி ஆனது 20/09/2022 ஆகும், இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கூடிய இறுதி தேதி 29/09/2022 ஆகும்.
எனவே இந்த விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தபால் மூலம் நீங்கள் அனுப்பலாம், அல்லது நேரில் சென்று கொடுக்கலாம், தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு 13,500 முதல் 20,000 வரை ஊதியம் வழங்கப்படஉள்ளது.
மேலும் இந்த வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது, இந்த வேலை கல்வித்தகுதி போன்ற பல விஷயங்களை இந்த கட்டுரையில் நீங்கள் பார்க்க உள்ளீர்கள்.
கவனிக்க: ஒவ்வொரு வேளையும் விண்ணப்பிக்கும் நேரத்தை கருத்தில் கொண்டு கட்டுரையை பதிவிடுகிறோம், நிச்சயம் இதற்கு விண்ணப்பிக்க துவங்குங்கள், அல்லது உங்கள் நண்பர்களுக்கு இதை பகிர்வதன் மூலம் அவர்களுக்கு இந்த வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
பணி மற்றும் ஊதியம் விவரம்?
இந்த வேலையானது (System Analyst/Data Manager (DEIC) – 1 and Data Entry Operator – 1) என்று கூறக் கூடியது, இதில் சிஸ்டம் அனாலிஸ்ட் மேனேஜருக்கு 20,000 ஊதியமாகவும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் 13500 ஊதியமாக வழங்கப்படுகிறது, மேலும் இவை அனைத்தும் கணினி சார்ந்த வேலை என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
கல்வித் தகுதி என்ன?
வேலை கல்வித்தகுதியை பொறுத்தவரை Master Degree, Post Graduate degree, MBA அல்லது அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்து இருந்தால் இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்க முடியும்.
விவரம் | அறிவிப்பு |
---|---|
அறிவிப்பு | Coimbatore District Health Society |
துறை | (DHS) மாவட்ட சுகாதார சங்கம் |
இணையதளம் | coimbatore.nic.in |
சம்பளம் | Rs. 13,500/- to Rs. 20,000/- |
கடைசி தேதி | 29/09/2022 |
வேலை இடம் | கோவை |
தேர்வு முறை | (நேர்காணல்) மூலமாக |
பதிவுமுறையை | (Speed Post) மூலமாக |
தேர்வுமுறை?
இது நேரடியாக உங்களை சில கேள்விகள் கேட்டு உங்கள் ஆவணங்களை சரி பார்க்கப்பட்டு வேலை வழங்கப்படும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.
இந்த வேலைக்கான பணி இடம் மற்றும் தேதி விவரங்கள்?
இந்த வேலை கோயம்புத்தூர் மாவட்டத்தில் வழங்கக்கூடிய வேலை, மற்றும் இது அரசாங்க வேலை, அதுமட்டுமில்லாமல் இந்த வேலைக்கான அறிவிப்பு தேதி ஆனது நாம் மேலே பார்த்ததுபோல 20/09/2022 அன்று வெளியானது இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கூடிய தேதி 29/09/2022 அன்று ஆகும்.
அது மட்டும் இல்லாமல், நீங்கள் உங்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து வலைதளத்தில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் விலாசத்திற்கு அனுப்பும் போது உங்களின் நேர்காணல் ஆனது 10/10/2022 என்பதை தெரிவித்துக் கொள்கிறோம், எனவே இந்த வேலைக்கு தெளிவாக விண்ணப்பியுங்கள்.
எவ்வாறு விண்ணப்பிப்பது?
வேலைக்கு விண்ணப்பிப்பது மிகவும் சுலபமான விஷயம், எங்கள் வலைத்தளத்தில் கீழே பார்த்தீர்கள் என்றால் இந்த வேலைக்கான அறிவிப்பு மற்றும் வேலைக்கான விண்ணப்பப் படிவம் இரண்டும் உங்களுக்குத் தோன்றும், அதை தெளிவாக படித்து பார்த்து பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பின்பு அதோடு உங்கள் கல்வித் தகுதி சான்று ஏதேனும் கூடுதல் தகுதி சான்று இருந்தாலும் அதை இணைத்துக் கொள்ளுங்கள், பின்னர் அனைத்து விவரங்களையும் சரியாக பூர்த்தி செய்யுங்கள்.
பின்னர் வலைதளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த (உறுப்பினர் செயலாளர் / துணை இயக்குனர் சுகாதார பணிகள், மாவட்ட சுகாதார சங்க துணை இயக்குனர் சுகாதார பணிகள் அலுவலகம், 219, ரேஸ் கோர்ஸ் சாலை, கோயம்புத்தூர் – 641 018) விலாசத்திற்கு தெளிவாக பூர்த்தி செய்து அனுப்புங்கள்.
Member Secretary / Deputy Director Health Works, District Health Society Office of the Deputy Director Health Works, 219, Race Course Road, Coimbatore – 641 018
அனுப்புவதற்கு முன்பு நீங்கள் அனுப்பிய ஆவணங்களை மற்றும் விண்ணப்பங்களை நகல் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் வருங்காலத்தில் தேவைப்படலாம், பின்னர் உங்கள் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு நேர்காணலுக்கு அழைப்பார்கள்.
கோயம்புத்தூர் மாவட்ட சுகாதார சங்கம் வேலை வாய்ப்புகள் அறிவிப்பு
[dflip id=”2052″ ][/dflip]
சிஸ்டம் அனலிஸ்ட் / டேட்டா மேனேஜர், மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் விண்ணப்பம் Pdf
[dflip id=”2058″ ][/dflip]
கவனி நண்பா:
கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால் நிச்சயம் இந்த வேலையை உங்கள் மாவட்டத்தில் இருப்பவர்களுக்கு பகிருங்கள்.
அனைவருக்கும் இது உதவியாக இருக்கும், நீங்களும் அரசாங்க வேலைக்காக ஆர்வமாக இருந்தால் இந்த பணிக்காக விண்ணப்பியுங்கள் இதற்கான கல்வித்தகுதி மற்றும் மட்டும் போதுமானது.
M Raj (Mohan Raj) is an expert in crafting informative articles, specializing in education updates and detailed job postings. With a keen eye for detail, Mohan Raj provides readers with accurate and up-to-date information.