கோவை: தொண்டாமுத்தூர் தொகுதி அரசு அலுவலக உதவியாளர் வேலைக்கான அறிவிப்பு!! 8ம் வகுப்புமுதல் விண்ணப்பிக்கலாம்!!

Follow Us
Sharing Is Caring:

அறிவிப்பு: கோயம்புத்தூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை தொண்டாமுத்தூர் தொகுதியில் உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கான அறிவிப்பு பற்றிய விவரமான கட்டுரைதான் இது. அதோடு எட்டாம் வகுப்பு படித்தவர்கள் முதல் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்பது கூடுதல் சிறப்பம்சம்

ஆம், இந்த கட்டுரையின் அடிப்படையில் அலுவலக உதவியாளருக்கான நேரடி நியமனம் பற்றிய விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ளலாம், அதாவது கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், ஒன்றிய தலைப்பில் காலியாக உள்ள ஒரு அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கான நேரடி நியமனம்.

உண்மைதான்! நேரடி நியமனம் மூலம் அந்த பணியிடம் நிரப்பப்பட உள்ளது, இதற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆகையால் இந்த அறிவிப்பு சம்பந்தமான தெளிவான விளக்கங்களை இந்த கட்டுரையில் பார்க்க உள்ளோம் வாருங்கள் பயணிக்கலாம்.

Coimbatore District Rural Development and Panchayat Department Thondamuthur Block– Notification for Recruitment for the post of Office Assistant


Coimbatore District Office Assistant Requirement

அறிவிப்புcoimbatore.nic.in
பதவிஅலுவலக உதவியாளர்
சம்பளம்15,700/- முதல் 50,000/-
காலியிடம்1
பணியிடம்தொண்டாமுத்தூர் தொகுதி
தகுதிகள்8ம் வகுப்பு முதல்
விண்ணப்பிக்க கடைசி தேதி15/11/2023
WhatsApp Group Join Now

Telegram Group Join Now

கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி வேலை: வேலை பொருத்தவரை அலுவலக உதவியாளர் வேலை, இதை கட்டுரையின் ஆரம்பத்திலிருந்து நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். இந்த வேலைக்கு ஒரு (1) பணியிடம் உள்ளது.

மேலும் இன சுழற்சி முறையில் பேசி பிற்படுத்தப்பட்டோர் (பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் தவிர) (BC – Other than Backward Class Muslims) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வி தகுதி மற்றும் இதழ் தொகுதிகள்: கல்வித் தகுதி மற்றும் இதர தகுதிகளை பொறுத்தவரை அலுவலக உதவியாளர் பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மிதிவண்டி ஓட்டு தெரிஞ்சி இருக்க வேண்டும். அதாவது சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

வயது வரம்பு: குறைந்தபட்ச வயது 18, அதிகபட்ச வயது 34. மேலும்01/07/2023 அன்றுப்படி வயது கணக்கிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கதுறிப்பு. இதற்கு மேலே இருந்தால் விண்ணப்பிக்க தகுதியில்லாதவர்கள் என்று அர்த்தம். அதாவது அதிகபட்ச வயது வரம்பு பூர்த்தி அடைந்தவராக இருக்கக் கூடாது.

விண்ணப்பங்கள் பெறப்படும் நாள்: விண்ணப்பங்களை நீங்கள் சரியான முறையில் பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் 16/10/2023 காலை 10 மணி முதல் 15/11/2023 மாலை 05:45 மணி வரை நீங்கள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும், சமர்ப்பிக்க வேண்டிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தொண்டாமுத்தூர் தொகுதி அலுவலக உதவியாளர் வேலைக்கான ஊதியம் எவ்வளவு?

வேலைக்கான ஊதியத்தை பொறுத்தவரை கோயம்புத்தூர் அரசு அலுவலக உதவியாளர் வேலைக்கு லெவல் 1 அடிப்படையில் 15,700 முதல் 50,000 வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அது சம்பந்தமான கூடுதல் விவரங்கள் அதிகாரப்பூர் அறிவிப்பில் உங்களுக்கு கிடைக்கும்.

கோயம்புத்தூர் மாவட்ட தொண்டாமுத்தூர் தொகுதியில் வெளியான அரசு அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கான நிபந்தனைகள்

நிபந்தனைகளை பொறுத்த வரை சரியாக பின்பற்ற வேண்டியது அவசியம்:

  • விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி, இருப்பிடம், சாதி சான்று, முன்னுரிமை சான்று ஆகியவற்றுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்க வேண்டும்.
  • இன சூழ்ச்சி மற்றும் வயது, கல்வி தகுதி இல்லாத நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  • அரசு விதிகளை பின்பற்றி, இன சுழற்சி முறையை பின்பற்றி பணி நியமனம் செய்யப்படும்.
  • முக்கியமாக சுய முகவரியுடன் கூடிய அஞ்சல் விலையில் ரூபாய் 30 ஓட்டப்பட்ட அஞ்சல் உரை (10×4 Inches Postal Cover) இனத்து அனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சரியான முறையில் இணைத்து நீங்கள் நேரில் அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம், மாறாக காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம், அனுப்ப வேண்டிய விலாசத்தை கீழேபாருங்கள்.

ஆணையர் ஊராட்சி ஒன்றியம், மாதம்பட்டி மெயின் ரோடு, தொண்டாமுத்தூர் கோயமுத்தூர் – 64 1109.
Coimbatore Thondamuthur Constituency Office Assistant Job Notification!
Coimbatore Thondamuthur Constituency Office Assistant Job

கவனிக்க: விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக தேர்வு நடைபெறும் தேதி மற்றும் நேரம் குறித்து தகவல் கடிதம் மூலம் பின்னர் அனுப்பி வைக்கப்படும், அதாவது தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

கோயம்புத்தூர் மாவட்ட தொண்டாமுத்தூர் தொகுதியில் வெளியான அலுவலக உதவியாளர் காலி பணியிடத்திற்கான விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் மற்றும் மாவட்ட இணையதளத்திலும், பெற்றுக் கொள்ளலாம், மேலும் எங்களுடைய வலைதளத்திலும் மேலே அந்த வாய்ப்பு உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Sharing Is Caring:

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment