அறிவிப்பு: கோயம்புத்தூர் மாவட்ட கோயம்புத்தூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் (District Social Welfare office) பல்வேறு காலி பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் ஆறு 5 நிலைகளில் பல காலி பணியிடங்களை கொண்டுள்ளது.
மேலும், இந்த வேலைக்கு நீங்கள் 31/10/2023-குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆகையால் விண்ணப்பிக்க கூடிய விண்ணப்ப படிவம், அதிகாரப்பூர் அறிவிப்பு போன்றவை இந்த கட்டுரையில் உங்களுக்கு கிடைக்கும்.
கோயம்புத்தூர் மாவட்ட சமூக நல அலுவலகத்திலிருந்து பல்வேறு பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு:
- மைய நிர்வாகி – CENTRE ADMINISTRATOR
- மூத்த ஆலோசகர் – SENIOR COUNSELOR
- கேஸ் ஒர்க்கர் – CASE WORKER
- ஐடி நிர்வாகி – IT ADMIN
- பாதுகாவலர் – SECURITY
- பல்துறை உதவியாளர் – MULTIPURPOSE HELPER
உண்மைதான்!! கோயம்புத்தூர் மாவட்டத்தில் பல வேலை வாய்ப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளது, இந்த வேலைக்கான கல்வி தகுதி, ஊதியம், வயதுவரம்பு, கூடுதல் தகுதி, விண்ணப்ப படிவம் போன்ற பல விஷயங்களை இந்த ஒரே கட்டுரையில் உங்களுக்காக தொகுத்து வழங்குவோம் வாருங்கள் கட்டுரையில் பயணிக்கலாம்.
SOCIAL WELFARE AND WOMEN EMPOWERMENT- ONE-STOP CENTRE
[dflip id=”9870″ ][/dflip]
[dflip id=”9839″ ][/dflip]
Recruitment Notice from District Social Welfare office, One Stop Centre Coimbatore for various posting
அறிவிப்பு | coimbatore.nic.in |
பதவி | மைய நிர்வாகி, மூத்த ஆலோசகர், வழக்கு பணியாளர், ஐடி நிர்வாகி, பாதுகாப்பு, பல்நோக்கு உதவியாளர் |
சம்பளம் | 6,400/- முதல் 30,000/- |
காலியிடம் | பல்வேறு பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு |
பணியிடம் | கோயம்புத்தூர் மாவட்ட சமூக நல அலுவலகம் |
தகுதிகள் | 8ம் வகுப்பு முதல் |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 31/10/2023 |
கோயம்புத்தூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் (District Social Welfare) இருந்து பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வந்துள்ளது, அவைகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி வயதுவரம்பு, ஊதியம், கல்வித் தகுதி போன்றவை நிர்ணயிக்கப்பட்டுள்ளது, ஆகையால் தெளிவாக பார்க்கலாம் வாருங்கள்:
மைய நிர்வாகி வேலைக்கான விவரங்கள்:
சமூக நல அலுவலகத்தில் இருந்து வெளியான இந்த மைய நிர்வாகி வேலைக்கான விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது, இது ஆங்கிலத்தில் (சென்டர் அட்மினிஸ்ட்ரேட்டர் – CENTRE ADMINISTRATOR) என்று கூறப்படுகிறது, இதற்கான ஊதியம் கல்வித் தகுதி வயது வரம்பு போன்ற கீழே தெளிவாக பாருங்கள்:
கல்வித் தகுதி | Master of Social Work (MSW), M.A/M.Sc Sociology, M.A/M.Sc Psychology / Clinical Psychology |
வயது வரம்பு | 21 வயதுக்குள் இருக்க வேண்டும் மற்றும் 40 வயதை கடக்காமல் |
சம்பளம் | Rs. 30,000/- |
கூடுதல் தகுதிகள் மற்றும் விருப்பம்:
- 24 மணிநேர சேவையை வழங்குவதற்கு சுழற்சி முறையில் வேலை இருக்கும், விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
- பெண்கள் மட்டுமே தகுதியுடையவர்கள்
- பூர்வீகம் கோவையாக இருக்க வேண்டும்
மூத்த ஆலோசகர் வேலைக்கான விவரங்கள்:
மொத்த ஆலோசகர் எனும் இந்த பணியிடத்திற்கான விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது, இது ஆங்கிலத்தில் (சீனியர் கான்செல்டர் – SENIOR COUNSELOR) என்று அழைக்கப்படக்கூடியது:
கல்வித் தகுதி | Master of Social Work (MSW), M.A/M.Sc Sociology, M.A/M.Sc Psychology / Clinical Psychology |
வயது வரம்பு | 21 வயதுக்குள் மற்றும் 40 வயதை கடக்காமல் |
சம்பளம் | Rs. 20,000/- |
கூடுதல் தகுதி மற்றும் விருப்பம்:
- 24 மணி நேரமும் சூழ்ச்சி முறையில் வேலை செய்ய விருப்பமாக உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
- கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவராகவும் வசிப்பவராகவும் இருக்க வேண்டும்.
கேஸ் ஒர்க்கர் வேலைக்கான விவரங்கள்:
கோயம்புத்தூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் இருந்து வெளியான கேஸ் ஒர்க்கர் எனும் பணியிடத்திற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது, பார்த்து பயன்படுங்கள்:
கல்வித் தகுதி | Master of Social Work (MSW), M.A/M.Sc Sociology, M.A/M.Sc Psychology / Clinical Psychology |
வயது வரம்பு | 21 வயது நிரம்பியவர், 40 வயதை கடக்காதவர் |
சம்பளம் | Rs. 15,000/- |
கூடுதல் தகுதி மற்றும் விருப்பம்:
- 24 மணி நேரமும் சுழற்சி முறையில் வேலை வழங்கப்படும் என்பதால் விருப்பமுள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
- கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
- பெண்களுக்கு முதல் முன்னுரிமை இந்த வேலையில் அளிக்கப்படுகிறது.
ஐடி நிர்வாகி வேலைக்கான விவரங்கள்:
கோயம்புத்தூர் அரசு மாவட்ட ஐடி நிர்வாகி வேலைக்கான கல்வி தகுதி, வயதுவரம்பு, ஊதிய விவரம் போன்றவை கிழே கொடுக்கப்பட்டுள்ளது:
கல்வித் தகுதி | Graduate with Diploma in Computer / IT |
வயது வரம்பு | குறைந்தபட்ச வயது 21, மற்றும் 40 வயதை கடக்காதவராக இருக்க வேண்டும் |
சம்பளம் | Rs. 18,000/- |
பொறுப்பு மற்றும் கூடுதல் தகுதி:
- கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசிப்பராக இருக்க வேண்டும்.
- விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
- 24 மணி நேரமும் சுழற்சி முறையில் வேலை செய்ய விருப்பம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.
பாதுகாவலர் பணியிடத்திற்கான விவரங்கள்:
கோயம்புத்தூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பாதுகாவலர் பணியிடத்தை பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது, இதன் முக்கிய சிறப்பம்சமே எட்டாம் (8th) வகுப்பு படித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம்:
கல்வித் தகுதி | 8th pass (a) 10th pass failed |
வயது வரம்பு | குறைந்தபட்ச வயது 21, மற்றும் 40 கடக்காதவராக வேண்டும் |
சம்பளம் | Rs. 10,000/- |
முக்கிய பொறுப்பு கூடுதல் தகுதி மற்றும் விருப்பம்:
- சொந்த ஊர் கோயம்புத்தூர் ஆகவும் இருக்க வேண்டும்.
- 24 மணி நேரமும் சூழ்ச்சி முறையில் வேலை செய்ய வேண்டும்.
கவனிக்க: வேளைகளில் குறிப்புடப்படும் நிபந்தனைகளுக்கு உட்பட்டவர்கள் (விருப்பமுள்ளவர்கள்) இந்த கோயம்புத்தூர் மாவட்ட சமூக நல அலுவலகத்திலிருந்து பல்வேறு வேலைகளுக்கு வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
பல வேலைகளுக்கு உதவும் (MULTIPURPOSE HELPER) வேலைக்கான விவரம்:
மல்டி பர்ப்பஸ் ஹெல்பர் எனப்படும் பல வேலைகளுக்கு உதவும் உதவியாளர் பணிக்காக விண்ணப்பிக்க ஆர்வமாக உள்ளவர்களுக்கான தகுதி வயதுவரம்பு கூடுதல் விவரங்கள் கீழே:
கல்வித் தகுதி | எட்டாம் (8th) வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி |
வயது வரம்பு | 21 வயது நிரம்பியவர், 40 வயதுக்கு உட்பட்டவர் |
சம்பளம் | Rs. 6,400/- |
கூடுதல் விவரங்கள் மற்றும் தகுதிகள்:
- 24 மணி நேரமும் சுழற்சி முறையில் வேலை செய்ய விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
- சொந்த ஊர் கோயம்புத்தூர்-ஆக அவசியம்.
More Details Of District Social Welfare office requirement in Coimbatore
S.No | Position | Salary |
---|---|---|
1. | CENTRE ADMINISTRATOR | Rs.30,000/- |
2. | SENIOR COUNSELOR | Rs. 20,000/- |
3. | CASE WORKER | Rs. 15,000/- |
4. | IT ADMIN | Rs. 18,000/- |
5. | SECURITY | Rs. 10,000/- |
6. | MULTIPURPOSE HELPER | Rs. 6,400/- |
குறிப்பு: விண்ணப்பங்கள் நிரப்பப்பட்ட தொடர்புடைய இணைப்புகள்/ஆவணங்களுடன் முறையாகச் சான்றளிக்கப்பட்ட முகவரிக்குக் கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். முக்கியமாக அக்டோபர் 30, 2023 அன்று மாலை 5.00 மணிக்குள் அலுவலகத்தை அடையவேண்டும்.
பொறுப்பு: மேற்கண்ட தேதிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் சுருக்கமாக நிராகரிக்கப்படும். விண்ணப்பத்துடன் அசல் சான்றிதழ்களை அனுப்பக்கூடாது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கீழே உள்ள முகவரிக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
அலுவலக முகவரி: மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் வளாகம், பழைய கட்டிடம், தரை தளம், கோயம்புத்தூர் 641018. தொடர்பு எண். 0422-2305156
Address in English: District Social Welfare Officer, District Collectorate Campus, Old building, Ground floor, Coimbatore 641018. Contact No. 0422-2305156
கோயம்புத்தூர் மாவட்ட அரசு வேலை வாய்ப்புகள் பற்றி சில கருத்து:
இந்த கட்டுரையை பொறுத்தவரை கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சமூக நல அலுவலகத்தின் மூலம் வெளியான பல்வேறு காலிப் பணியிடங்கள் பற்றிய தெளிவான விளக்கங்களை தமிழ் மொழியில் வழங்கு எடுத்த ஒரு முயற்சி தான் இது. ஆகையால் இது முழுமையாக உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நோக்கத்தோடு உருவாக்கி இருக்கிறோம்.
இருந்தபோதும், உங்களுடைய கருத்தைக் கேட்க ஆவலாக இருப்பதால் கருத்து பெட்டியில் பதிவிடுங்கள், ஒவ்வொரு கருத்தும் எங்களை ஊக்கவிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் எங்களுடைய வலைதள கட்டுரையை மேம்படுத்தவும் உதவியாக இருக்கும் காரணத்தினால் கட்டாயம் உங்கள் கருத்தை பதிவிடுங்கள்.
M Raj (Mohan Raj) is an expert in crafting informative articles, specializing in education updates and detailed job postings. With a keen eye for detail, Mohan Raj provides readers with accurate and up-to-date information.