ITI போதும் பணம் அச்சடிக்கும் துறை நிரந்தரமான அரசு வேலை ரூ.67390 சம்பளத்தில்!

பணம் அச்சடிக்க கூடிய துறையில் நிரந்தர அரசு வேலைக்கான (Advt. No. 02/2022) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது, ஐடிஐ முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் இந்த வேலைக்கான உதயமானது 67,390/- ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது, இது ஒரு நிரந்தர அரசு வேலை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த (SPMCIL) வேலைக்காக மொத்தம் 85 காலி பணியிடங்களும் 8 விதமான வேலையும் இருக்கின்றது, விருப்பம் உள்ளவர்கள் நிச்சயம் விண்ணப்பிக்கலாம், இந்த விண்ணப்பத்திற்கான முழு விளக்கத்தையும் தமிழ் மொழியில் இங்கே உங்களால் தெளிவாக காண முடியும்.

  • Junior Technician (Technical)
  • Junior Technician (Control)
  • Junior Technician (Tech Support-Design)
  • Junior Technician (Machine Shop)
  • Junior Technician (Electrical)
  • Junior Technician (Electronic)
  • Junior Technician (Store)
  • Junior Technician (CSD)
isp nashik 85 junior technician recruitment announcement 2022

இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும், விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி 08/11/2022 ஆகும், அதற்குள் உங்களுடைய ஆவணங்கள் அனைத்தையும் சரியான முறையில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த அரசு வேலையை, அதாவது ITI முடித்தவர்களுக்கு இந்த நிரந்தர அரசு வேலை பெறுவதற்கான வாய்ப்பு உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும், தமிழ் மக்களுக்கு இந்த வாய்ப்பை வழங்குவதற்காக தயவு செய்து இந்த வலைதள கட்டுரையை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இது மொத்தம் 8 வித மான பணிகளில் 85 விதமான காலிப்பணியிடங்களை கொண்டது, எனவே இதில் நிச்சயம் நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும், இதற்கான தகுதி மட்டும் உங்களிடம் இருந்தால் போதும், தொடர்ந்து பயணிக்கலாம் வாருங்கள்.

இந்த வேலை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கூடிய வேலை விண்ணப்பிப்பதற்கான அதிகாரப்பூர்வ வலைத்தளத்தையும், எவ்வாறு விண்ணப்பிப்பது மற்றும் உங்களுடைய சிறந்த கேள்விக்கான பதில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு போன்ற அனைத்தையும் கீழே தெளிவான முறையில் நீங்கள் பார்க்க முடியும்.

அந்த விண்ணப்ப படிவங்களை நேரடியாக படித்துப் பார்க்கவும், பதிவிறக்கம் செய்யும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும்.

தேர்வு முறை என்ன?

India Security Press Nashik (isp)

இந்த வேலைக்கான தேர்வு முறையைப் பொறுத்த அளவு நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வு இருக்கக்கூடும், மேலும் இந்த தேர்வில் 120 வினாக்களுக்கு 120 மதிப்பெண்கள் மற்றும் இதை முடிப்பதற்கு 120 நிமிடங்கள் உங்களுக்கு வழங்கப்படும்.

அதுமட்டுமில்லாமல் வகுப்பு வாரியான மதிப்பீடு எடுக்கப்படும், அது சம்பந்தமான தகவல்களை நீங்கள் கீழே காண முடியும்.

General Category& EWS: 55%
OBC Category: 50%
SC/ST Category: 45%

மேலும் இந்த தேர்வுக்கான ஆன்லைன் எழுத்துத் தேர்வும் இருக்கக் கூடும், இது தற்காலிகமான மாதமாக டிசம்பர் 2022 மற்றும் ஜனவரி 2023 குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே நீங்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் ஆவண சரிபார்ப்பு போன்ற அனைத்து விஷயங்களுக்கும் உங்களை தயார்படுத்திக் கொள்ளுதல் அவசியம்.

இது சம்பந்தமான தகவல்களை கூடுதல் விளக்கம் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பார்க்கலாம்.

விண்ணப்பிக்க கட்டணம் உண்டா?

இதில் விண்ணப்ப கட்டணத்தை பொறுத்தவரை சில பிரிவினருக்கு 600 ரூபாய் விண்ணப்ப கட்டணம், சில பிரிவினருக்கு 200 ரூபாய் விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அந்த விண்ணப்பக் கட்டணங்கள் பற்றிய விவரங்களை நீங்கள் கட்டுரையில் தெளிவாக படிக்கலாம்.

(UR)/EWS and (NCL), OBC: Rs .600/-
SC/ST/Physically Challenged category-PwBD and Ex-Servicemen: Rs.200/-

விவரம்அறிவிப்பு
அறிவிப்புIndia Security Press Nashik
துறைஇந்தியா செக்யூரிட்டி பிரஸ் நாசிக்
இணையதளம்spmcil.com, spnasik.spmcil.com
கடைசி தேதி08/11/2022
வேலை இடம்இந்தியா, Nashik
தேர்வு முறைஎழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்
பதிவுமுறையை(Online) மூலமாக
முகவரிIndia Security Press: Nashik Road-422101
தொலைபேசி எண்0253-2402464/2465
மின்னஞ்சல்isp.recruitment@spmcil.com
jobs tn google news

எத்தனை விதமான வேலைகள் உள்ளது?

இதில் மொத்தம் 8 விதமான காலி வேளைகளில் 85 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான முயற்சி தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

இதில் குறைந்தபட்ச சம்பளம் 18,780/- இல் தொடங்கி அதிகபட்ச சம்பளமாக 67,390/- வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஐடிஐ முடித்தவர்கள் தொடங்கி பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம், விண்ணப்பிக்கும் போது உங்களிடம் கூடுதல் அனுபவம் இருந்தாலும் அதற்கான சான்றையும் சேர்ந்து விண்ணப்பியுங்கள்.

இது அனைத்து பிரிவினரும் ஒரு சிறந்த அரசாங்க வேலை, அதுவும் நிரந்தர வேலை என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

தேதி என்ன?

இந்த வேலையானது முதலில் 08/10/2022 அன்று ஆன்லைன் பதிவு துவக்கப்படுகிறது, மேலும் விண்ணப்ப பதிவு முடிவடையும் நாளாக 08/11/2022 அன்று முடிவடைகிறது, இதற்கு விண்ணப்பத்தை அச்சிடுவதற்கான கடைசி தேதி 23/11/2022 ஆகும்.

ஆன்லைன் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி தேதி 08/10/2022 அன்று முதல் விண்ணப்பிக்கும் கடைசி நாளான 08/11/2022 வரை, அதாவது இது ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க கூடிய துவக்க தேதியையும் முடிவு தெரியும் சேர்த்து பணம் செலுத்த வேண்டிய தேதியும் அடங்குகிறது என்பதை நம்மால் நினைவில்கொள்ள முடியும்.

வேலைக்கான வயதுவரம்பு?

இந்த வேலைக்கான வயது வரம்பை பொருத்தவரை விண்ணப்பதாரர்கள், தகுதியானவர்கள் 18 வயது முடிந்து 25 வயதை தாண்டாமல் இருக்க வேண்டும்.

இது எந்த வகையிலான அடிப்படையைக் கொண்டு கணக்கிடப்படுகிறது என்பதை நீங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படித்து முடித்தவர்கள் உடனே இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும், கூடுதல் அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பிக்க முடியும் என்பதை இந்த வயது வரம்பை பார்த்து நாம் தெரிந்துகொள்ள முடிகிறது.

எவ்வாறு விண்ணப்பிக்க?

முதலில் நீங்கள் அனைத்து தகவல்களும் பிடிஎஃப் ஃபைல் மூலமாகவும் நீங்கள் பார்க்க முடியும், அதனை தெளிவாகப் பாருங்கள், பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்.

பின்பு உங்களுடைய ஆவணங்கள் அனைத்தையும் தயார் செய்து வைத்துக் கொண்டு எங்கள் வலைத்தளத்தில் மூலம் கொடுக்கப்பட்ட வழியே பின்தொடர்ந்து நீங்கள் நேரடியாக பதிவு செய்யக்கூடிய அதிகாரபூர்வ வலை தளத்திற்கு செல்லலாம்.

அந்த வலைத்தளத்தில் இது சம்பந்தமான அனைத்து விஷயங்களும் தெளிவாக கொடுக்கப்பட்டிருக்கும், அது தெளிவாக படித்து பார்த்த பின்பு கூகுள் குரோம் மூலம் நீங்கள் விண்ணப்பிக்க ஆரம்பிக்கலாம்.

பின்பு அங்கு (Click here for New Registration) என்ற ஒரு பொத்தான் இருக்கும், அதை கிளிக் செய்து உங்களுக்கான ஆவணங்கள் உங்களுடைய மொபைல் நம்பர், உங்கள் படிப்பு சார்ந்த விஷயம் போன்ற அனைத்தையும் தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

அப்போது விண்ணப்ப கட்டணம் செலுத்த நேரிட்டால் நிச்சயம் அதை கட்டாயம் செலுத்த வேண்டும் என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ளுங்கள், அதற்கும் தயாராக இருங்கள்.

அப்போது உங்களுடைய முகப்பு அதாவது சப்மிட் செய்ததற்கான முகப்பு பகுதியில் ஏதேனும் ஆதாரம் தோன்றும் பட்சத்தில், அதை ஸ்கிரீன்ஷாட் அல்லது நகல் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

அனைத்து விஷயங்களும் சரியாக செய்யப்பட்ட பின்பு இறுதியை பொத்தானை கிளிக் செய்து உங்களுடைய விண்ணப்பத்தை சப்மிட் செய்யுங்கள்.

விண்ணப்பிக்கும்போது தகவல்களை தெளிவாக பூர்த்தி செய்தோம் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள், மின்னஞ்சல் மொபைல் நம்பர் போன்ற விஷயத்தை தெளிவாக கொடுங்கள், உங்கள் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு உங்களை தொடர்பு கொள்வதற்கான வழி அது தான்.

இதுபோன்ற வழிமுறையை பின்பற்றி தெளிவாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப மறக்காதீர்கள்.


isp nashik 85 junior technician recruitment announcement 2022

[dflip id=”2676″ ][/dflip]

isp nashik recruitment Instructions

[dflip id=”2682″ ][/dflip]

Frequently Asked Questions: For On-Line Registration Process

[dflip id=”2686″ ][/dflip]

How to Apply junior technician jobs for isp nashik

[dflip id=”2691″ ][/dflip]

Guidelines for scanning the Photograph & Signature

[dflip id=”2696″ ][/dflip]

வேலைக்கான கெடு முடிவடைந்தது, வேறு பணியை எங்கள் வலைதளத்தில் தேடுங்கள்

கவனியுங்கள்:

தமிழ் மக்கள் அனைவருக்குமே நல்ல அரசாங்க வேலையும், நல்ல ஊதியமும், மரியாதை மிக்க பதவி கிடைக்க வேண்டும் என்பதில் எங்கள் குழு எப்போதும் கவனம் செலுத்தி வருகிறது.

இதனால் உரிய வேலையை தகுந்த நேரத்திற்கு முன்பாகவே, அதாவது விண்ணப்பிக்கும் நேரத்திற்கு முன்பாகவே மக்களிடம் கொண்டு சேர்க்க நாங்கள் பாடுபட்டு வருகிறோம்.

நீங்களும் எங்களுடன் கைகோர்க்க நினைத்தால், இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதி உங்களுக்கு இருந்தால் கட்டாயம் விண்ணப்பியுங்கள்.

மற்றும் ஒரு வாட்ஸ்அப் குரூப்பில் இதை பகிர்வதன் மூலம் மற்றவர்களுக்கும் இதில் உதவி கிடைக்கும், வேலையில் அமர வாய்ப்பு கிடைக்கும், எனவே அதையும் நீங்கள் செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கூறி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment