தமிழ்நாடு அரசு மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல வேலை வாய்ப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்புகளுக்கு நீங்கள் விண்ணப்பித்து அரசு வேலையில் சேர முடியும்.
அரசு அறிவிப்பின்படி உள்ளாட்சித் துறைகளில், ஊராட்சி அலுவலகங்களில் இந்த வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நேரடி உதவியாளர், அலுவலக உதவியாளர், பதிவு எழுத்தர் மற்றும் உள்ளாட்சித் துறை கூடுதல் அலுவலக உதவியாளர் என்று பல வேலை வாய்ப்புகளை பட்டியலிடப்பட்டுள்ளது.
மேலும் அதற்கு தனித்தனி விண்ணப்பமும், தனித்தனி அறிவிப்பும் அரசு மூலம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு, விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பம், வயதுவரம்பு, கல்வித் தகுதி, கூடுதல் தகுதி, விண்ணப்பிக்கக்கூடிய விலாசம் போன்ற பல விஷயங்களை உங்களுக்காக தொகுத்து வழங்கி இருக்கிறோம்.
எனவே கட்டாயம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்காக இந்த கட்டுரை அமையும் என்ற நோக்கத்தோடு உங்களை வரவேற்கிறோம் வாருங்கள்.
காலியிடங்கள் இதில் கட்டுரையின் ஆரம்பத்தில் கூறியது போல் நாலு வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் வேலை வாய்ப்பு அலுவலக உதவியாளர் என்பது:
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடத்திற்கு அலுவலக தலைவர், பிரிவு தலைவர், மற்றும் பணியின்போது உடன் இருத்தல், கோப்புகளை எடுத்து செல்லுதல் மற்றும் பிற அலுவலக பணிகளை செய்தல் என்ற வேலை உங்களுக்கு இருக்கும்.
ஊதியம்: ஏழாவது நிலை ஊதியத்தின் அடிப்படையில் 15,700 முதல் 58,100 வரை உங்களுக்கு ஊதியம் நிர்ணயிக்கப்படும். இதில் 18 வயது முதல் அதிகபட்ச வயது 37 ஆக கணிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் வகுப்புவாரியான வயதுக்கு நீங்கள் அதிகாரப்பூர் அறிவிப்பை பார்க்கலாம்.
பணியிடங்கள்: இதற்கு மொத்த காலி பணியிடங்கள் இரண்டு உள்ளது. மேலும் இதற்கு எட்டாம் வகுப்பு படித்தவர்கள் தகுதியானவர்கள். இதர தகுதிகளை பொறுத்தவரை நீங்கள் மிதிவண்டி ஓட்ட தெரிந்திருந்தால் போதுமானது.
விண்ணப்பம்: நீங்கள் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து 20/12/2023 மாலை 4 மணிக்குள் அனுப்ப வேண்டும். அனுப்புவதற்கான தேதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பு: நான்கு (Assistant Direct, Office Assistant, Record clerk, and Office Assistant in the Local Bodies Sector.) வேலைகளுக்கும் நீங்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. விண்ணப்ப படிவத்தை பதிவிறக்க இதை கிளிக் செய்யுங்கள்.
நமது கட்டுரையில் இரண்டாவது வேலையாக கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய தரப்பு அலுவலக உதவியாளர் வேலைக்கு காலி பணியிடம் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளதை பார்க்கலாம்:
பதவி: இந்த பதவியின் பெயரானது அலுவலக உதவியாளர் வேலை. இது நீங்கள் அலுவலகத்தில் பணியாளர்களின் உடன் இருத்தல், கோப்புகளை எடுத்து செலுத்துதல், மற்றும் பிற அலுவலக பணிகளை செய்ய வேண்டிய சூழ்நிலை வரும்.
ஊதியம்: 15,700 முதல் 58,100 ஊதியம் உங்களுக்கு நிர்ணயிக்கப்படும். இந்த ஊதிய அட்டவணை அரசு நிர்ணயம் செய்யும் பிற பணிகளுடன் அடங்கும். வயதுவரம்பு 18 முதல் 37 அதிகபட்சமாக இருக்கும். வகுப்புவாரியான வயது வரம்புகளுக்கு நீங்கள் அறிவிக்கயை பார்க்கலாம். மேலும் 1/7/ 2023 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும் அப்போது பூர்த்தி அடையாதவராக இருக்காமல் நீங்கள் இருக்கக் கூடாது
காலிப்பணியிடங்கள்: இந்த சின்னசேலம் அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு மொத்தம் இரண்டு காலிப்பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் கல்வி தகுதி போதுமானது. மேலும் மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் என்ற கட்டளை உங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம்: 11/12/2023 முதல் 21/12/2023 பிற்பகல் 5:45 மணிக்குள் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து நீங்கள் உரிய விலாசத்திற்கு அனுப்ப வேண்டும். விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய இதை கிளிக் செய்யுங்கள்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: சின்ன சேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5:45 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம். தபால் மூலம் அனுப்ப விரும்புபவர்கள் ஆணையாளர், சின்னசேலம் ஊராட்சி ஒன்றியம் 606201 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் வெளியிடப்பட்ட பதிவு எழுத்தர் பணியிடத்தை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 11/12/2023 முதல் 21/12/2023 வரை வரவேற்கப்படுகிறது.
இந்த வேலையின் பெயரானது பதிவு எழுத்தர், அதிகபட்ச ஊதியமாக 58,500 நிர்ணிக்கப்பட்டுள்ளது, குறைந்தபட்ச ஊதியமாக 15,900 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 01/07/2023 அன்று 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். வகுப்புவாரியான விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை நீங்கள் பார்க்க முடியும்.
மேலும் இதற்கு ஒரு காலிபணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதியை பொறுத்தவரை பத்தாம் வகுப்பு பூர்த்தி செய்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். படிவத்தை நீங்கள் பதிவிறக்கம் செய்து அலுவலக நேரங்களில் நேரிலோ அல்லது தபால் மூலமாக சமர்ப்பிக்கலாம்.
ஆணையாளர், சின்ன சேலம் ஊராட்சி ஒன்றியம் 606201 என்ற முகவரிக்கு நீங்கள் பதிவு அஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம். பதிவஞ்சலானது 21/12/2023 பிற்பகல் 5:45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
கவனிக்க: காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. விண்ணப்ப படிவத்தை உடனே அனுப்புங்கள், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய இந்த பகுதிகளுக்கு செல்லுங்கள்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அறிவிக்கையின் அடிப்படையில் அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்யப்பட உள்ளது:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில், ஊராட்சி ஒன்றிய தரப்பு அலுவலக உதவியாளர் நிலையில் ஏற்பட்டுள்ள காலி பணியிடத்தை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளதால் தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பதவியின் பெயரை பொறுத்தவரை அலுவலக உதவியாளர். பதவியின் தன்மையானது அலுவலக தலைவர், பிரிவு தலைவர் பணிகளின்போது உடன் இருத்தல், கோப்புகளை எடுத்து செல்லுதல், மற்றும் பிற அலுவலக பணிகளை கவனித்தல் என்பதாகும்.
ஊதியத்தை பொருத்தவரை 15,700 முதல் 58,100 அரசு ஊதிய அட்டவணையின் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, பிற படிகலும் இதில் அடங்குகின்றன. வயது வரம்பை பொருத்தவரை 01/07/2023 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.
மேலும் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும். நீங்கள் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து 28/12/2023 மாலை 5:45 மணிக்குள் நீங்கள் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம். விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய இந்த பகுதியை கிளிக் செய்யுங்கள்.
JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.