காஞ்சிபுரம் மாவட்டத்தில் குழந்தைகள் நலக் குழு உறுப்பினர் – 1 காலியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பதவிக்காக ஒரு காலிபணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடத்திற்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம், இதற்கு 1/3/2024 முதல் 15/3/2024 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பிற்கு நீங்கள் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்ப படிவத்தில் 23 வகையான கேள்விகள் இருக்கின்றன, அவைகளை பூர்த்தி செய்து நீங்கள் உங்களுடைய விண்ணப்பத்தில் கையொப்பமிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.
பொதுவாக ஒரு அரசு வேலை வெளியிடப்பட்டால், அந்த அரசு வேலைக்கான அறிவிப்பு செய்தியும், மற்றும் விண்ணப்ப படிவமும் தனியாக அறிவிக்கப்படும். ஆனால் தற்போது இந்த காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் நல குழு உறுப்பினர் காலியிடம் பொறுத்தவரை காஞ்சிபுரம் மாவட்டம் அதிகாரப்பூர்வ வலைதளமான https://kancheepuram.nic.in/-த்தில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், அதே பகுதியில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. ஆகையால் இந்த குழந்தைகள் நலக் குழு உறுப்பினர் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, உங்களுடைய புகைப்படத்தை உள்ளிட்டு, கூடுதலாக கேட்கப்பட்டிருக்கும் பதில் அளித்து, அனைத்து ஆவணங்களையும் இணைத்து, உங்களுடைய விண்ணப்ப படிவத்தை சமர்ப்பியுங்கள்.
அதோடு மிகமுக்கியமாக உரிய (15/03/2024)தேதிக்குள் உங்கள் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பித்து வேலையை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள். விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்வதற்கான வாய்ப்பு எங்கள் வலைதளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது, பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
மேலும் இந்த விண்ணப்ப படிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் உண்மையானவை, பிற்காலத்தில் விவரங்கள் தவறானவை என கண்டறிந்தால் என் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை நான் அறிவேன் என்ற வாக்குறுதியோடு குழந்தைகள் நலக் குழு உறுப்பினர் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யும்போது இதைப்பற்றிய முழு விவரங்களும் உங்களுக்கு தெரிய வரலாம், அதற்காக முதலில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக படித்துப் பார்க்க பரிந்துரைக்கிறோம்.
JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.