நாகப்பட்டினத்தில் அரசு வேலை அறிவிக்கப்பட்டுள்ளது: இந்த வேலையானது நீதிமன்றத்தில் பணிபுரியக்கூடிய வேலை.
கணினியில் நல்ல தட்டச்சு (Typist) தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்த பணி வழங்கப்பட உள்ளது, இந்த பணிக்கான விவரங்கள் பற்றிய தொகுப்பு தான் இது, இந்த கட்டுரை மூலம் இந்த பணியை நீங்கள் அடைவதற்கான உதவி கிடைக்கும்.
நாங்கள் இந்த பகுதியில் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட சில தகவல்களை உங்களுக்கு தமிழ்மொழியில் தொகுத்து வழங்க முயற்சிக்கிறோம், இதன் மூலம் கிடைக்கும் உதவியால் நீங்கள் மிகவும் சுலபமாக இந்த வேலையை பெற முடியும்.
இந்த வேலைக்கு சம்பளம் 19,500 முதல் 65,500 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது, கூடுதல் விவரங்கள் அனைத்தையும் தெளிவாக தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் நீங்கள் பார்வையிடலாம், அதற்கான வாய்ப்பும் நாங்கள் தெளிவான முறையில் கீழே கொடுத்துள்ளோம்.
இந்த வேலைக்கு 18 வயது முதல் 40 வயது வரை உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், மற்றும் தமிழ் ஆங்கிலத்தில் தட்டச்சு பயிற்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
சீனியர் டைபிஸ்ட் (Senior Typist Grade III) வேலைக்கு தட்டச்சு வேலையில் இரண்டு வருடம் உங்களுக்கு அனுபவம் இருக்க வேண்டும், இவை இருந்தால் நிச்சயம் உங்களால் இந்த வேலைக்கு பதிவு செய்ய முடியும்.
இந்த வேலைக்கான கூடுதல் விவரங்கள்: இதை எவ்வாறு பதிவு செய்வது, எத்தனை காலி பணியிடங்கள் உள்ளது, மேலும் அதிகாரபூர்வ வலை தளத்திற்கு செல்லும் வாய்ப்பு போன்ற அனைத்து விஷயங்களும் கீழே உங்களுக்காக தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
கவனிக்க: சற்று நேரம் ஒதுக்கி தெளிவான விவரங்களை பார்வையிட்டு இந்த வேலையை வெற்றிகரமாக பெற்றிட உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?
எங்கள் வலைத்தளத்தில் வழங்கப்பட்டிருக்கும் வாய்ப்பை பின்பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டும், வேலைக்கான விண்ணப்பிக்கும் விண்ணப்பம் அதில் கிடைக்கும்.
விண்ணப்பத்தில் உங்களுடைய சான்றுகளை புகைப்படத்துடன் இணைக்க வேண்டும், குறிப்பாக ஆவணங்களில் ஏதேனும் இரண்டின் புகைப்பட நகல் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
அதாவது, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை போன்ற புகைப்படம் இருக்கக்கூடிய ஏதாவது சில ஆதாரத்தை இணைக்க வேண்டியது கட்டாயம்.
அனைத்து ஆதாரங்களும் சரியாக இணைக்கப்பட்ட பின்பு விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்யப்பட்டதா என்பதை சரி பாருங்கள்.
பின்பு, முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம் நாகப்பட்டினம் என்ற முகவரிக்கு 09/09/2022 மாலை 05:45 மணிக்குள் அலுவலகத்திற்கு கிடைக்குமாறு பதிவு தபாலில் அனுப்ப வேண்டும்.
காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்க படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் முன் விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரையை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது, அதற்கான வாய்ப்பை எங்கள் வலைத்தளத்தில் நீங்கள் அணுகலாம்.
தேர்வு எப்படி இருக்கும்?
சான்றிதழ் சரிபார்ப்பு முறையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு நேர்காணல் மூலம் பணி வழங்கப்படும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
குறிப்பாக, அனைத்து ஆவணங்களையும் இணைத்து சரியான நேரத்திற்குள் நீங்கள் முதன்மை நீதிமன்றத்திற்கு அனுப்ப மறக்கக்கூடாது.
மேலும் இது சம்பந்தமான பதவியின் பெயர், சம்பள ஏற்ற முறை, காலிப்பணியிடங்கள் மற்றும் இன சுழற்சி முறை போன்ற தகவல்களை தெரிந்து கொள்ளும் வாய்ப்பும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது, அதை பார்ப்பதன் மூலம் கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
அறிவிப்பு | Nagapattinam district court typing Recruitment |
துறை | மாவட்ட நீத்துறை |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | districts.ecourts.gov.in |
தகுதி | 10th Pass to Tamil or English Typist |
சம்பளம் | Rs.19,500/- to Rs.65,500/- |
கடைசி தேதி | 09/09/2022 |
வேலை இடம் | நாகப்பட்டினம் |
பதிவுமுறையை | தபால் (அஞ்சல்) மூலம் |
எனது கருத்து
மாவட்ட நீதித்துறையில் கிடைக்கும் இந்த வேலையை நிச்சயம் நீங்கள் தவற விடாமல் பதிவு செய்யலாம், குறிப்பாக இதற்கு தேர்வு கட்டணம் கிடையாது, உங்கள் ஆவண சரிபார்ப்பு மூலம் தேர்வு இல்லாமல் தகுதியின் அடிப்படையில் வேலை வழங்கப்படுகிறது.
மற்றும், இது ஒரு அரசாங்க வேலை என்பதால் சமூகத்தில் மதிப்பு மிக்க வேலையாகவும், நீதித்துறையில் செய்யக்கூடிய வேலையாகவும் இருக்கும், எனவே இதில் மன திருப்தி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு இது உதவியாக இருக்கும் என்று கருதினால் தயவு செய்து அனைவருக்கும் பகிருங்கள்.

JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.