நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம் | 524 இ-சேவை மையங்கள் செயல்பட அனுமதி

e-Sevai for All – CSC: நீங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் 524 இ-சேவை மையங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இத்திட்டத்தின் நோக்கமானது இ-சேவை மையங்களில் எண்ணிக்கை அதிகரித்து இ-சேவை மையங்கள் இல்லாத பகுதிகளில், அதாவது கிராமப்புறங்களிலும் இ-சேவை மையத்தை தொடங்கி மக்கள் காத்திருக்கும் நேரத்தை குறைத்து மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட அரசு

தூத்துக்குடி மாவட்டம்:

இது சம்பந்தமான தெளிவான அறிவிப்பை தூத்துக்குடி மாவட்ட அரசு (https://pudukkottai.nic.in/notice_category/recruitment/) வலைதளத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் படி அனைத்து குடிமக்களுக்கும் இ-சேவை மையங்களை தொடங்கும் திட்டம், என்ற பெயரில் 08/06/2023 அன்று இது வெளியிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் அடிப்படையில் வாயிலாக நமக்கு தெரிய வரும் விஷயமானது தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டமானது படித்த இளைஞர்களையும், தொழிலாளர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ சேவை மையங்களை நிறுவி செயல்படுத்த இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

524 இ சேவை மையங்கள் செயல்பட அனுமதி

524 இ சேவை மையங்கள் செயல்பட அனுமதி

இத்திட்டத்தின் மூலம் தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 524 இ சேவை மையங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது, மேலும் திட்டத்தின் நோக்கமானது இ-சேவை மையங்களில் எண்ணிக்கை அதிகரித்து இ-சேவை மையத்தில் மக்கள் காத்திருக்கும் நேரத்தை குறைத்து மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவை வழங்குவதாகும்.

இத்திட்டத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்திட குறிப்பிட்ட இருவலைதளங்கள் (https://tnesevai.tn.gov.in/) மற்றும் (https://.tnega.tn.gov.in/) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இணைய முகவரியை பயன்படுத்தி விண்ணப்பங்களை 01/06/2023 அன்று காலை 11 மணி முதல் 30/06/2023 அன்று இரவு 12 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

இ-சேவை மையம் செயல்படுத்துவதற்கான விண்ணப்ப கட்டணம்

இ-சேவை மையம் செயல்படுத்துவதற்கான விண்ணப்ப கட்டணம்:

கிராமங்களில் இ-சேவை மையம் செயல்படுத்துவதற்கான விண்ணப்ப கட்டணம் 3000 ரூபாயும் ஆகும், மற்றும் நகரப்புறங்களில் இ-சேவை மையம் செயல்படுத்துவதற்கான கட்டணம் 6000 ரூபாயாகவும், ஆன்லைன் முறையில் செலுத்தும் வசதியை வழங்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்களுக்குரிய பயனர் எண் மற்றும் கடவுச்சொல் அதாவது யூசர் ஐடி மற்றும் பாஸ்வர்ட் (User ID & Password) விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் வாயிலாக வழங்கப்படும்.

மேலும் அருகில் உள்ள ஈ சேவை மையங்களின் தகவலை (முகவரி) ஆண்ட்ராய்ட் மொபைல் செயலியை பயன்படுத்தி காணலாம் அல்லது (https://.tnega.tn.gov.in/) இணையதளத்தில் காணலாம் என்று மாவட்ட ஆட்சியர் திருமதி ஐ.சா மெர்சி ரம்யா, இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்.


[dflip id=”8039″ ][/dflip]

கவனிக்க: இந்த செய்தியானது புதுக்கோட்டை மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது, எனவே நீங்களும் இ-சேவை மையம் துவங்க ஆர்வமாக இருந்தால், நீங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவராக இருந்தால் இந்த செய்தி உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment