தமிழக அரசு சுகாதாரத்துறையில் 2250 கிராம செவிலியர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு!!

Follow Us
Sharing Is Caring:

அறிவிப்பு: தமிழ்நாடு பொது சுகாதாரத் துணைச் சேவையில் துணை செவிலியர் மருத்துவச்சி / கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு தற்காலிக அடிப்படையில் நேரடி ஆட்சேர்ப்புக்கு 31.10.2023 வரை ஆன்லைன் முறையில் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


தமிழக அரசின் சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மொத்தம் 2,250 கிராம செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. மேலும் 31/10/2023 தேதிக்குள் நீங்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

அரசு மூலம் நிரப்பப்பட உள்ள இந்த செவிலியர் பணிக்கான கல்வித் தகுதி, கூடுதல் தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கக்கூடிய ஆன்லைன் வாய்ப்பு, அதிகாரப்பூர்வ VHN_Notification_2023.pdf (tn.gov.in) அறிவிப்பு போன்ற அனைத்தையும் இந்த வலைத்தள கட்டுரையில் பார்ப்பதற்காக உங்களை அழைக்கிறோம் பாருங்கள்.


Notification and Application Form for Nursing Posts to be filled by Tamil Nadu Govt

அறிவிப்பு(MRB) (tn.gov.in)
பதவிஉதவி செவிலியர் மருத்துவச்சி / கிராம சுகாதார செவிலியர்
சம்பளம்Level – 8 (Rs.19,500 – 62,000)
காலியிடம்2250
பணியிடம்தமிழ்நாடு சுகாதாரத்துறை
தகுதிகள்12ம் வகுப்பு (12th)
விண்ணப்பிக்க கடைசி தேதி31/10/2023

தமிழ்நாடு அரசு செவிலியர் வேலைக்கான காலி பணியிடங்கள்:

வேலைக்கான காலிப்பணியிடங்களை பொறுத்தவரை கட்டுரையின் ஆரம்பத்தில் இருந்து உங்களுக்கு கூறி வருகிறோம். 2250 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் கட்டாயம் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறையின் கீழ் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படும் துணைச் செவிலியர், மருத்துவச்சி, கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் கூடுதல் விபரங்களை கீழே காணலாம்.

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

குறிப்பு: தமிழ்நாடு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட இடஒதுக்கீடு மற்றும் வகுப்புவாரி சுழற்சி விதிகள் மற்றும் திருப்தியின் அடிப்படையில் வேலையாட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

வேலைக்கான ஊதியம் எவ்வளவு?

இந்த வேலைக்கான.ஊதியத்தை பொறுத்தவரை தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பே லெவல் 8-ன் அடிப்படையில் 19,500 – 62,000 வழங்கப்படும்.

தமிழ்நாடு அரசு செவிலியர் பணிக்கான வயது வரம்பு என்ன?

இந்த வேலைக்கான வயது வரம்பை பொறுத்தவரை குறைந்தபட்ச வயது 18, அதிகபட்ச வயதுக்கு வயது வரம்பு கிடையாது. இருந்தபோதும் 60 வயது கணக்கிடப்பட்டுள்ளது, அது பற்றிய விளக்கங்கள் கீழே:

  • அனைத்து பிரிவினருக்கும்: குறைந்தபட்ச வயது 18, அதிகபட்ச வயது வரம்பு இல்லை
  • மாற்றுத் திறனாளிகள்: குறைந்தபட்ச வயது 18, அதிகபட்ச வயது வரம்பு இல்லை
  • ஆதரவற்ற விதவை: குறைந்தபட்ச வயது 18, அதிகபட்ச வயது வரம்பு இல்லை

கவனிக்க: அதிகபட்ச வயது வரம்பு என்றால், விண்ணப்பதாரர்கள் அறிவிக்கும் தேதியில் (அல்லது) பதவிக்கு தேர்வு / நியமனம் செய்யும் போது 60 வயதை நிறைவு செய்திருக்கக் கூடாது.

வேலைக்கான கல்வி தகுதி என்ன?

இந்த அறிவிப்பின் தேதியில் விண்ணப்பதாரர் பின்வரும் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்:

  • மேல்நிலைப் பள்ளி (+2) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவம் இயக்குநரால் வழங்கப்படும் பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்கள் (பெண்) பயிற்சிப் பாடநெறி / துணை செவிலியர் மருத்துவச்சி பயிற்சிப் படிப்பு இரண்டாண்டுகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும்.
  • தமிழ்நாடு செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் கவுன்சில் வழங்கிய பதிவு சான்றிதழ்;
  • முகாம் வாழ்க்கைக்கு உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
  • பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவம் இயக்குநரால் வழங்கப்படும் 18 மாத பல்நோக்கு சுகாதார பணியாளர்கள் (பெண்கள்) பயிற்சிப் படிப்பு / துணை செவிலியர் மருத்துவச்சி பயிற்சிப் படிப்பு மற்றும் எஸ்.எஸ்.எல்.சி (10 ஆம் வகுப்பு) 11/2011/12 க்கு முன் தேர்ச்சி பெற்றவர்கள் தகுதி உடையவர்கள்.
Educational Qualification for Tamil Nadu Govt Nurse Jobs.
Educational Qualification for Tamil Nadu Govt Nurse Jobs.

SHOW EDUCATIONAL QUALIFICATION IN ENGLISH:

முக்கிய குறிப்பு: இந்த வேலைவாய்ப்புக்கு தகுதி மற்றும் பிற நிபந்தனைகள் அனைத்தும் பொருந்தும், வேலைக்கு வாய்மொழித் தேர்வு மட்டும் உண்டு. நேர்காணல்.இருக்காது.

முக்கிய குறிப்பு:

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் (சேவை நிபந்தனைகள்) சட்டம்- 2016ன் பிரிவு 20ன் துணைப் பிரிவு 8 இந்த ஆட்சேர்ப்புக்கு பொருந்தும்.

SC, SC(A)s, STs, MBC&DNCs, BCs, BCM களுக்குச் சொந்தமில்லாத விண்ணப்பதாரர்கள், மாநில/மத்திய அரசில் 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சேவையில் உள்ளவர்கள் வயது வரம்பிற்குள் இருந்தாலும் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள்.

கட்டணம் மற்றும் சேவைக் கட்டணங்கள்:

  • SC / SCA / ST / DAP(PH) / DW – ரூ. 300/-
  • மற்றவர்கள் – ரூ. 600/-
MEDICAL SERVICES RECRUITMENT BOARD (MRB) JOBS
MRB VILLAGE NURSE JOBS

பொறுப்பு: தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத்துறை சேவையின் கீழ் துணை செவிலியர், மருத்துவச்சி, கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவலை எங்கள் குழு முடிந்தவரை தமிழில் தொகுத்து வழங்கி இருக்கின்றது.

இதில் முக்கியமான தகவல்கள் அனைத்துமே உங்களுக்கு இந்த கட்டுரையில் கிடைத்திருக்கும், ஒருவேளை கூடுதல் தகவல் தேவைப்பட்டாலும் தாயாக்கிமில்லாமல் நீங்கள் கருத்துப் பெட்டியில் உங்கள் கேள்விகளை கேட்கலாம், அதற்கான பதிலை நாங்கள் கொடுப்போம். மேலும் இந்த தகவல் பற்றிய உங்களுடைய கருத்தையும்க்கு பதிவிடுங்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பாருங்கள்.

Sharing Is Caring:

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment