தமிழ்நாடு கால்நடைத் துறையில் 731 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த காலிப்பணியிடங்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக 56,000/- தொடங்கி அதிக படியான ஊதியமாக 2,05,700/- ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
TNPSC Veterinary Assistant Surgeon Vacancy 2022க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான கடைசி தேதி 17/12/2022 அன்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதற்குள் உங்களுடைய அனைத்து ஆவணங்களையும் ஒருங்கிணைத்து நீங்கள் ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
பின்பு இந்த வேலைக்காக உங்களை தேர்வு செய்த பிறகு கணினி அடிப்படையிலான தேர்வு மற்றும் நேரடி வாய்வழி கேள்வி சோதனைகள் அடிப்படையில் இந்த வேலை வழங்கப்படும், அது சம்பந்தமான கூடுதல் விவரங்கள் அனைத்தும் இந்த வலைதள கட்டுரையில் தெளிவாக பார்க்கலாம்.
விவரம் | அறிவிப்பு |
---|---|
அறிவிப்பு | TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION |
விளம்ப எண் | No. 640 |
அறிவிப்பு எண் | 34/2022 |
திறக்கும் தேதி | 18/11/2022 |
கடைசி தேதி | 17/12/2022 |
பணி | Veterinary Assistant Surgeon |
காலியிடங்கள் | 731 |
இணையதளம் | https://www.tnpsc.gov.in/ |
தேர்வு முறை | Computer Based Test & Oral Test |
பதிவுமுறையை | (Online) மூலமாக |
முகவரி | 37PJ+3QH, Park Town, Tamil Nadu Public Service Commission Rd, V.O, C. Nagar, Chennai, Tamil Nadu 600003 |
Veterinary Assistant Surgeon கல்வித் தகுதி என்ன?
இந்த Veterinary Assistant Surgeon வேலைக்கான கல்வித் தகுதியை பொறுத்தவரை (B.V.Sc & A.H) இந்த வகையான படிப்புகளை முடித்தவர்கள் கட்டாயம் விண்ணப்பிக்கலாம்.
Tamil Nadu Animal Husbandry Service காலி பணியிடங்கள்?
Veterinary Assistant Surgeon: மொத்தம் 731 காலிப்பணியிடங்கள் உள்ளது, வெவ்வேறு காலிப்பணியிடங்கள் தனித்தனியாக பிரித்து வழங்கப்பட்டுள்ளது, அது சம்பந்தமான கூடுதல் விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை உங்களால் பார்க்க முடியும். மொத்தம் 43 பக்க அறிவிப்பில் இது சம்பந்தமான தெளிவான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது, அந்த அறிவிப்பு கீழே உள்ளது.
இந்த TNPSC விண்ணப்பத்திற்கான தேதி விவரங்கள்?
இந்த Animal Husbandry Service வேலைக்கு அறிவிப்பு 18/11/2022 அன்று வெளியிடப்பட்டது, இந்த வேலைக்கான இறுதி நாளானது 17/12/2022 ஆகும், அதற்குள் உங்கள் விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் கூடுதல் விரிவான தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தேதி சம்பந்தமான அட்டவணையை பாருங்கள்.
Date of examination (Computer Based Test)
Paper-I : Subject paper Animal Husbandry and Veterinary Science (UG Degree Standard) | 15.03.2023 09.30 A.M. to 12.30 P.M. |
Paper – II PART A Tamil Eligibility Test (SSLC Std) and PART B General Studies (Degree Std) | 15.03.2023 02.30 P.M. to 05.30 P.M. |
ANNEXURE – VI TENTATIVE TIMELINE FOR THE RECRUITMENT PROCESS
Online Application can be edited/ submitted/ payment of fees | 17/12/2022 |
Online Application Correction Window period | From 22.12.2022 12.01 A.M to 24.12.2022 11.59 P.M |
applicants are permitted to upload/ re-upload the documents | 02/03/2023 |
Publication of Examination (CBT Method) Results | MAY 2023 |
Certificate Verification / Oral Test | JUNE 2023 |
Counselling | JUNE 2023 |
கட்டணம் உண்டா?
தமிழ்நாடு Veterinary Assistant Surgeon வேலைக்கு தேர்வு கட்டணமாக 200/- ரூபாயும், விண்ணப்பக் கட்டணமாக 100/- ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அது சம்பந்தமான விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலமாக நீங்கள் இந்த பகுதியில் பார்க்க முடியும், அந்த தகவல்களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
Veterinary Assistant Surgeon வேலைக்கான தேர்வு எப்படி இருக்கும்?
தேர்வுமுறை பொறுத்தவரை கணினி அடிப்படையிலான தேர்வு மற்றும் வாய்வழி சோதனையும், கேள்விகளும் (Computer Based Test & Oral Test) அடங்கும்.
தமிழ்நாடு Animal Husbandry Service வேலைக்கான வயது வரம்பு என்ன?
வேலைக்கான வயது வரம்பை பொறுத்தவரை ஆர்வமும் தகுதியும் விண்ணப்பதாரர்களுக்கு 21 வயது முதல் அதிகபட்சம் 32 வயது இருக்க வேண்டும்.
இந்த வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?
- பணி சார்ந்த தகவல்களை அனைத்தையும் தெளிவாக படித்து பார்த்த பின்பு, உங்கள் கல்வித் தகுதியின் அடிப்படையில் எந்த பணிக்கு விண்ணப்பிக்க என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு நீங்கள் உங்கள் ஆவணங்களுடன் கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
- அப்போது https://apply.tnpscexams.in/ வலைதளத்தில் உங்களுக்கென ஒரு கணக்கை திறந்து, உங்கள் ஆவணங்கள் அனைத்தும் தெளிவாக பதிவேற்றம் செய்யுங்கள்.
- விண்ணப்ப கட்டணம் செலுத்த நேரம் வந்தால் கட்டாயம் செலுத்துங்கள்.
- விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யும் போது உங்களுடைய மொபைல் நம்பரை தெளிவாக கொடுங்கள், ஆவணம் சரி பார்க்கப்பட்டு உங்களை தொடர்பு கொள்ள அதுதான் வழி.
- அனைத்து விஷயங்களும் சரியாக செய்தபின்பு விண்ணப்பிக்க பொத்தானை கிளிக் செய்து உங்கள் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பியுங்கள்.
- படிவத்தை சமர்பித்தபின்பு தோன்றும் பகுதியை ஸ்கிரீன் ஷாட் அல்லது நகல் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
TNPSC Veterinary Assistant Surgeon Vacancy 2022 Pdf
[dflip id=”4261″ ][/dflip]
731 பணியிடங்கள் தமிழ்நாடு கால்நடை துறை அறிவிப்பு வெளியானதை அடுத்து உங்களுக்கு தெரியப்படுத்தும் ஒரு நோக்கத்தோடு இதனை உருவாக்கினோம்.
Veterinary Assistant Surgeon Vacancy 2022 சம்பந்தமான கூடுதல் விளக்கங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள், அதற்கான வாய்ப்பு கீழே உள்ளது.
மேலும் கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்து எங்களை JOBSTN.IN சம்பந்தமான சோசியல் மீடியா தளங்கள் இணைந்திருங்கள், வருங்கால நல்ல கட்டுரைகளை பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.
I am a B.pharma graduate. Am I eligible to apply for this Veterinary Assistant Surgeon Vacancy