தேனி மாவட்ட அரசு வேலை: 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை விண்ணப்பிக்கலாம் | சம்பளம் 15,000/-

தேனி மாவட்டத்தில் வேலை தேடுபவர்களுக்கான ஒரு புதிய நற்செய்தி; தேனி மாவட்டத்தில் (One stop centre) 3 அரசு வேலைகள் வெளியிடப்பட்டுள்ளது, இந்த அரசு வேலைக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம்.

 • வழக்கு தொழிலாளி (Case Worker)
 • பாதுகாவலன் (Security Guard)
 • பல்நோக்கு உதவியாளர் (Multipurpose Helper)

இதற்கு அதிகபட்ச சம்பளமாக 15 ஆயிரம் ரூபாய் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, மேலும் 35 வயதை கடக்காதவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும் இந்த One stop centre வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்கக்கூடிய இறுதி தேதியானது 12/06/2023 அன்று ஆகும், அன்றுக்குள் உங்கள் விண்ணப்பங்களை தெளிவாக பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

தேனி மாவட்ட அரசு வேலைக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி, அது சம்பந்தமான கூடுதல் விபரங்கள் போன்றவை இந்த வலைதள கட்டுரையில் உங்களுக்கு கிடைக்கும். இந்த தேனி மாவட்ட One stop centre வேலை சம்பந்தமான முழு தகவலை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.


கவனிக்க: தேனி மாவட்டத்தில் பொது இடங்களில் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களுக்கு அனைத்து விதமான உதவிகள் வழங்குவதற்கு ஒருங்கிணைக்கப்பட்ட சேவை மையம் உள்ளது.

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

அதாவது ஆங்கிலத்தில் One stop centre என்று சொல்லக்கூடிய சேவை மையம் செயல்பட்டு வருகிறது, இச் சேவை மையத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை தேர்ந்தெடுக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தேனி மாவட்ட அதிகாரப்பூர்வ வலைதளத்தின் மூலம் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

முக்கியம்: Theni One stop centre அறிவிப்பில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் உங்களுக்கு இந்த கட்டுரை மூலமாக கிடைக்கும். குறிப்பாக இதில் மூன்று விதமான வேலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதில் ஒரு வேலைக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இரண்டு வேலைகளுக்கு ஆண்கள் விண்ணப்பிக்கலாம், அது சம்பந்தமான முழு விவரங்களையும் தெளிவாக தெரிந்து கொண்டு Theni One stop centre வேலைக்கு விண்ணப்பிக்கலாம். அல்லது உங்கள் சுற்றத்தாருக்கு இந்த JobsTn வலைதள கட்டுரையை பகிரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம், வாருங்கள் வலைத்தளத்தில் தொடர்ந்து பயணிக்கலாம்.

குறிப்பு: இந்த வேலைக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை தேர்ந்தெடுக்க மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேனி மாவட்ட One stop centre Jobs

Post Details of Theni One stop centre 2023

விவரம்அறிவிப்பு
அறிவிப்புTheni One stop centre
காலியிடங்கள்3
தொடக்க தேதி02/06/2023
பணி விவரம்Caseworker, Multipurpose worker and Security Guard
விண்ணப்பிக்கும் முறைOffline (Post)
ஊதியம்6,500/- To 15,000/-

தேனி One stop centre வேலைக்கான கல்வித்தகுதி:

இதில் மூன்று வேலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அந்த வேலையில் ஒரு வேலைக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம், அதற்கு பட்டப்படிப்பு அவசியம், மேலும் கூடுதல் தகுதி அவசியம்.

மீதி இரண்டு வேலைக்கு எட்டாம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம், அது சம்பந்தமான தகவல்களை கீழே தொகுத்துக் கொடுத்துள்ளோம்.

பதவியின் பெயர்கல்வி தகுதி
வழக்கு பணியாளர் (பெண்கள் மட்டும்)சமூகப்பணி (அ) உளவியல் இளங்கலை பட்டம்
பாதுகாவலர்எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி
பல்நோய்க்கு உதவியாளர்எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி

மேலே குறிப்பிட்டுள்ள தகவலை தெளிவாக பாருங்கள், அதில் உள்ள தகவலை வைத்து எந்த பதவிக்கு நீங்கள் தகுதியானவர்கள் என்று தெரிந்து கொள்ள முடியும். அதன் அடிப்படையில் நீங்கள் விண்ணப்பிக்கலாம், இருந்த போதும் கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் நோக்கி பயணிக்கலாம் வாருங்கள்.

Theni One stop centre வேலைக்கான ஊதியம்:

இதில் மூன்று வேலைகள் உள்ளது, இந்த மூன்று காலி பணியிடங்களுக்கும் தகுதியான நபர்களை தேர்வு செய்து தனித்தனி ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதில் குறைந்தபட்ச ஊதியமாக 6400/- இல் தொடங்கி அதிகபட்ச ஊதியமாக 15,000/- வரை வழங்கப்பட உள்ளது.

எந்தெந்த பதவிக்கு எந்தவிதமான ஊதியம் வழங்கப்படுகிறது என்பதை கீழே தெளிவாக பாருங்கள்:

பதவியின் பெயர்கல்வி தகுதி
வழக்கு பணியாளர் (பெண்கள் மட்டும்)15,000/- (பயண செலவு மீல பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது)
பாதுகாவலர்10,000/-
பல்நோய்க்கு உதவியாளர்6,400/-

இந்த மூன்று வேலைகளுக்கான ஊதிய விவரங்களை தெளிவாக பார்த்திருப்பீர்கள், அடுத்த கட்டமாக வயதுவரம்பு பற்றிய விளக்கங்களை பார்க்கலாம் வாருங்கள்.

தேனி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைக்கு சேர வயதுவரம்பு:

இந்த வேலைக்கான வயது வரம்பு பற்றி நீங்கள் குழப்பமடைய தேவையில்லை, காரணம் மூன்று வேலைக்கும் ஒரே வயது வரும்போதுதான் கேட்கப்பட்டுள்ளது.

அதாவது இந்த (Caseworker, Multipurpose worker and Security Guard) மூன்று வேலைக்கு 35 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டும், இருந்தபோதும், விளக்கமான பட்டியலை கீழே பார்க்கலாம்:

பதவியின் பெயர்வயது வரம்பு
வழக்கு பணியாளர் (பெண்கள் மட்டும்)35 கடக்காமல்
பாதுகாவலர்35 கடக்காமல்
பல்நோய்க்கு உதவியாளர்35 கடக்காமல்

வயது வரம்பு பற்றிய தெளிவாக நீங்கள் தெரிந்து கொண்டிருப்பீர்கள், அதேபோல் ஒவ்வொரு விஷயத்தையும் கவனமாக படியுங்கள், அப்போதுதான் உங்களுடைய புரிதலுக்கு உதவியாக இருக்கும்.

பிறகு உங்கள் சுய சான்றோபங்களை நகலெடுத்து உரிய விலாசத்திற்கு அனுப்பலாம், அந்த விலாசமும் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது, அறிவிப்பும் கட்டுரையில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். வாருங்கள் அடுத்தபடியாக தகவலை பார்க்கலாம், அதில் இந்த வேலைக்கான அனுபவம் பற்றி பேசப்பட்டுள்ளது.


தேனி ஒன் ஸ்டாப் சென்டர் வேலைக்கான கூடுதல் தகுதி:

முதலில் பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கக்கூடிய வழக்குப் பணியாளர் (கேஸ் ஒர்க்கர் – Case Worker) என்னும் காலி பணியிடம்:

 • வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களுக்கு உதவி புரிதலில் குறைந்தபட்சம் ஒரு வருடம் முன் அனுபவம் வாய்ந்தவராக இருத்தல் வேண்டும்.
 • அரசு மற்றும் அரசு சார்ந்த திட்டங்களோடு ஒன்றிணைந்து செயல்படுவதோடு குறைந்தபட்ச ஒரு வருடம் முன் அனுபவம் ஆற்றுப்படுத்துதலில் (கவுன்சிலிங் – Counseling) இருத்தல் வேண்டும்.
 • சமூகப் பணியில் முதுகலை பட்டம் பெற்றவரும் விண்ணப்பிக்கலாம்.
 • பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து மட்டுமே இந்த வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 • தேனி மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
 • 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்ற தயார் நிலையில் இருத்தல் அவசியம்.

இரண்டாவதாக பாதுகாவலர் பணி அதாவது ஆங்கிலத்தில் (செக்யூரிட்டி கார்டு -Security Guard) எனப்படும் பணி இடங்களுக்கான:

 • விவரங்கள் எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி (அ) தோல்வி வேண்டும்.
 • தகுதி மற்றும் நிர்வாக அமைப்பின் கீழ் பணிபுரிந்தவராக இருத்தல் வேண்டும்.
 • தேனி மாவட்டத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
 • 24 மணி நேரம் சுழற்சி முறையில் பணியாற்ற தயார் நிலையில் இருத்தல் வேண்டும்.

மூன்றாவதாக பல் நோய்க்கு உதவியாளர் அதாவது (மல்டி பர்ப்பஸ் ஹெல்பர் – Multipurpose Helper) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள், இதற்கான தகுதிகள் பார்க்கலாம்:

 • எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி.
 • தகுதி மற்றும் நிர்வாக அமைப்பின் கீழ் பணிவராக இருத்தல் அவசியம்.
 • தேனி மாவட்டத்தை சேர்ந்தவராக இருத்தல் அவசியம்.
 • 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்ற தயார் நிலையில் இருக்க வேண்டும்.

தேனி மாவட்டம் One stop centre வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?

தகுதியான நபர்கள் வலைதள கட்டுரையில் உள்ள அனைத்து தகவலையும் தெளிவாக படித்துப் பார்க்க வேண்டும்.

பின்பு அதிகாரப்பூர் வலைதளம் மற்றும் அதிகாரபூர்வ அறிவிப்பையும் பதிவிறக்கம் செய்வதற்கான வாய்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது, அதை படித்து பார்த்து வேலையும், தகுதியையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

பின்னர் உங்களுடைய ஆவணங்களை நகலெடுத்து சுயசான்ட்ரோப்பமிட்டு 12/062023க்குள் விண்ணப்பங்களை உரிய முகவரிக்கு அனுப்ப வேண்டும், அனுப்ப வேண்டிய முகவரி உங்களுக்கு வலைதளத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய விலாசம்: மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், அறை எண்: 67, மூன்றாம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் தேனி மாவட்டம் – 625531.

மேல கொடுக்கப்பட்டுள்ள விலாசத்திற்கு உங்களுடைய விண்ணப்பங்களை தவறாமல் அனுப்பி வையுங்கள், அதற்கான தகுதியும், திறமையும் உங்களிடம் இருந்தால் போதுமானது. விண்ணப்பங்களை அனுப்பும்போது அனைத்தையும் சரிபார்த்த பின்னர் அனுப்புங்கள்.

Theni district One stop centre jobs Pdf
Theni District Gvt Recruitment Site

மறுப்பு: இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல் அனைத்துமே தேனி மாவட்ட அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இருந்து வெளியான ஒருங்கிணைந்த சேவை மையம் பத்திரிகை செய்தி மூலமாக எடுக்கப்பட்ட தகவல் மட்டுமே.

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment