தஞ்சாவூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்புகள்!!

Follow Us
Sharing Is Caring:

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு: தஞ்சாவூர் மாவட்ட நல வாழ்வு சங்கம், தஞ்சாவூர் மாவட்ட மருத்துவ மக்கள் நல வாழ்வு துறையில் மருத்துவ காலி பணியிடங்கள் பூர்த்தி செய்ய அறிவிப்பு வந்துள்ளது.

இந்த அறிவிப்பை தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நடுகாவேரி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய நிலையங்களில் காலியாக உள்ள 2 இயன்முறை (Physiotherapists) மருத்துவர் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 27/10/2023 அன்று மாலை 5:00 மணிக்குள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது.

Thanjavur District Government Hospital Vacancies


அறிவிப்புthanjavur.nic.in
பதவிPhysiotherapists
சம்பளம்13,000/-
காலியிடம்2
பணியிடம்நடுகாவேரி
தகுதிகள்Bachelor of Physiotherapy (BPT) from any recognized University
விண்ணப்பிக்க கடைசி தேதி27/10/2023

மேலும் முக்கிய குறிப்புகளை கீழே பாருங்கள்:

கீழே கண்ட பதவிகள் முற்றிலும் தற்காலிகமானது, மேலும் எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது. 11 மாதங்கள் முடிவுற்ற நிலையில் ஒருநாள் பணியிடை முறிவு செய்து மாரு பணி நியமன ஆணை வழங்கப்படும் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலையின் பெயர் என்ன:

வேலையின் பெயர் பொருத்தவரை பிசியோதெரபிஸ்ட் எனப்படும் இயன்முறை (Physiotherapists) மருத்துவராகவும், இதற்கு மாத ஊதியம் 13,000/- ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பணியிடங்கள் இரண்டு (2) காலியாக உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அரசு விதிகளின்படி வயது வரம்பு பின்பற்றப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

மேலும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால் வேலை சார்ந்த படிப்பு படித்தவர்கள் கட்டாயம் விண்ணப்பிக்கலாம் (Bachelor of Physiotherapy (BPT) – from any recognized University).

விண்ணப்பத்தை விண்ணைக்க கூடிய முகவரி:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களில் உங்கள் சுய சான்றோபம் (கையெழுத்து) இட்டு செயல் செயலாளர், மாவட்ட நலச் சங்கம், மற்றும் துணை இயக்குனர், துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள், அலுவலகம் காந்தி ரோடு, Near LIC Building தஞ்சாவூர் – 613 001. என்ற முகவரிக்கு அனுப்புங்கள். தொலைபேசி எண் – 04362- 273503 இதுவாகும்.

Thanjavur District Government Hospital Recruitment of Physiotherapist Thanjavur District
Thanjavur District Government Hospital Recruitment

முக்கிய குறிப்பு:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தகுந்த ஆவணங்கள் நகல்களுடன் மாவட்ட நல்வாழ்வு சங்கம், மற்றும் துணை இயக்குனர், சுகாதார பணிகள் தஞ்சாவூர் மாவட்டம் அலுவலகத்தில் வரும், 27/10/2023 அன்று மாலை 5 மணிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும் என்பது நிபந்தனை.

மேலும் இரண்டு பணியிடங்கள் நியமனம் செய்வது மாறுதலுக்கு உட்பட்டது, இன சூழ்ச்சி வாயிலாக காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் செயலாளர் மாவட்ட நல வாழ்வு சங்கம் மற்றும் துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment