தூத்துக்குடி மாவட்டம்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் காலியாக உள்ள ஆறு (6) உதவி மின் கம்பியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்ப படிவம், அது சம்பந்தமான கூடுதல் தகவல் அனைத்தும் இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆம், 18 வயது பூர்த்தி அடைந்து 45 வயதுக்கு குறைவாக இருப்பவர்கள் அனைவரும் தகுதியை சரிபார்த்து வரும் 30/10/2023 மாலை 5:45 மணிக்குள் வேலைக்கு விண்ணப்பியுங்கள், அது சம்பந்தமான அறிவிப்பு, கூடுதல் விளக்கங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் திருச்செந்தூர் வேலைவாய்ப்பு விளம்பர அறிவிப்பு:
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள 6 உதவி மின் கம்பியாளர் எனப்படும் தொழில் நுட்ப பணியிடத்திற்கு தகுதியுள்ள இந்து சமயத்தை சார்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 30/10/2023 மாலை 5:45 மணி வரை திருக்கோயில் இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து நிரப்பி அனுப்ப வேண்டும்.
குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் வெளியான ஆறு (6) காலி பணியிடங்களை பற்றிய தெளிவான விளக்கம் தான் இந்த வலைதள கட்டுரை, இந்த வலைதள கட்டுரை மூலம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் இருக்கும் உதவி மின் கம்பியாளர் எனப்படும் வாய்பிற்க்கான விளக்கங்களை தெரிந்து கொள்ளலாம்.
[dflip id=”9712″ ][/dflip]
Jobs of Assistant Electrician in Tiruchendur Arulmiku Subramania Swami Temple, Thoothukudi District.
அறிவிப்பு | tiruchendurmurugan.hrce.in.gov.in |
பதவி | உதவி மின் கம்பியாளர் |
சம்பளம் | Level 18 – 16600 – 52400 |
காலியிடம் | 6 |
பணியிடம் | திருச்செந்தூர் முருகன் கோயிலில் |
தகுதிகள் | தொழில் பயிற்சி நிறுவன சான்றிதழ், மின் உரிமம் வழங்கல் வாரியத்திடம் இருந்து “H” சான்றிதழ் |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30/10/2023 |
பதவியின் பெயர்:
திருச்செந்தூர் முருகன் கோயிலில் 26/9/2023 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி உதவி மின் கம்பியாளர் எனப்படும் பணியிடம் காலியாக உள்ளது, மொத்தமாக ஆறு (6) காலி பணியிடங்கள் உள்ளது என்று தூத்துக்குடி மாவட்ட திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக நமக்கு தெரிய வருகிறது.
வேலைக்கான ஊதியம் எவ்வளவு?
அறிவிப்பின் அடிப்படையில் சம்பளத் தொகுப்பு பே மெட்ரிக் லெவல் 18 அடிப்படையில் 16,600 முதல் 52,400 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் ஆர்வமாக இருந்தால் கட்டாயம் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் வெளியிடப்பட்ட இந்த வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க துவங்கலாம். இருப்பினும், அதற்கான தகுதி உங்களிடம் இருக்கிறதா என்று தொடர்ந்து கட்டுரையில் பயணித்து தெரிந்து கொள்ளுங்கள்.
திருச்செந்தூர் முருகன் கோயில் வேலைவாய்ப்புக்கான கல்வி தகுதி:
- கல்வித் தகுதியை பொருத்தவரை அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட மின் கம்பி பணியாளர் தொழில் பயிற்சி நிறுவன சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
- மின் உரிமம் வழங்கல் வாரியத்திடம் இருந்து “H” சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 01/07/2023 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும் 45 வயதுக்கு உடையவராகவும் இருக்க வேண்டும், அதாவது 45 வயதுக்கு கீழ் இருக்க வேண்டும்.
திருச்செந்தூர் முருகன் கோயில் மின் கம்பியாளர் பணிக்கான நிபந்தனைகள்:
- இந்து சமயத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும், தமிழ்நாட்டை சார்ந்தவராகவும் இருக்க வேண்டும்.
- தொற்று நோய் உடல் அல்லது மனநிலை குன்றிய குறைபாடுகள் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.
- நீதிமன்றத்தில் தண்டனை அடைந்தவர்கள், பட்ட கடனை தீர்க்க முடியாதவர்கள் என நீதிமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டவர்கள், மற்றும் அரசு பணிகள் பொது ஸ்தாபனங்கள் மற்றும் வேறு இடங்களில் பணிபுரிந்து தண்டனை காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் ஆகியோர்கள் பணிக்கு விண்ணப்பிக்க தகுதி அற்றவர்கள்.
- முன் அனுபவ சான்று இணைக்கப்பட வேண்டும், நன்னடத்தை உடையவராக இருக்க வேண்டும், இதற்கு அரசிநாள்ல் பதிவு பெற்ற அரசு உயர் அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட நன்னடத்தை சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கிய குறிப்பு: இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடும் தேதிக்கு முன்னதாக வரப்பெற்ற விண்ணப்பங்களும் அல்லது காலம் கடந்து, அதாவது 30/10/2023-ம் தேதி மாலை 5 45 மணிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்களும் நிச்சயமாக நிராகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவனிக்க: அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மீது வேலையின் பெயரை கண்டிப்பாக (பதவியின் பெயர்) குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். அதாவது நீங்கள் விண்ணப்பங்களை எழுதி அனுப்பும்போது அந்த விண்ணப்பித்திற்கான (பதவி) எந்த வேலைக்காக நீங்கள் அனுப்புகிறீர்களோ அந்த வேலையின் பெயரை குறிப்பிட வேண்டும். உதாரணத்துக்கு தற்போது நாம் உதவி மின் கம்பியாளர் பணிக்கு விண்ணப்பிக்கிறோம், ஆகையால் அந்த பதவியின் பெயரை எழுதி அனுப்ப வேண்டும்.
முக்கிய குறிப்பு:
- நேரடி நியமனம் இந்து சமய அறநிலைத்துறை சட்ட விதிகளுக்கு உட்பட்டவை, மற்றும் விண்ணப்பதாரர் நல்ல தேக ஆரோக்கியம் உள்ளவராக இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் அனுப்பப்படும் அனைத்து சான்றிதழ்களுக்கும் அரசு பதிவு பெற்ற அலுவலர் சான்று பெற்ற புகைப்பட நகல்களாக மட்டுமே இருக்க வேண்டும். அசல் சான்றிதழ்களை அனுப்பக் கூடாது. மேலும் விண்ணப்பங்களுக்கு கட்டணம் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோயில் உதவி மின் கம்பியாளர் வேலைக்கு நேர்முகத்தேர்வு எப்போது?
வரப்பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வு அறிவிப்பு அனுப்பப்படும், அதாவது உங்களுக்கு தபால் மூலம் நேர்முக தேர்வுக்கான தேதி மற்றும் நேரம் அனுப்பி வைக்கப்படும், அதற்கு நீங்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.
திருச்செந்தூர் முருகன் கோயில் வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி அதிகாரப்பூர்வை அறிவிப்பு குறிப்பிடப்பட்டுள்ளது, அந்த முகவரி எங்கள் வலைதளத்தில் டெலிபோன் நம்பருடன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது பார்த்து பயன்பெறுங்கள்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: இணை ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் திருச்செந்தூர் -628215. தூத்துக்குடி மாவட்டம் தொலைபேசி: 04639-242221 ஆகும்.
கவனிக்க: வேலைவாய்ப்பு விளம்பர அறிவிப்பினை நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யவும், நிறுத்தி வைக்கவும் திருக்கோயில் நிர்வாகத்திற்கு முழு அதிகாரம் உண்டு.
வேலைவாய்ப்பு கட்டுரை பற்றி பேசலாம்:
திருச்செந்தூர் திருக்கோயிலில் வெளியான இந்த உதவி மின் கம்பியாளர் பணியிடத்திற்கான முழு விளக்கங்களையும், விண்ணப்ப படிப்பையும் நாங்கள் தெளிவான முறையில் கொடுத்திருக்கிறோம்.
எனவே நீங்கள் முழு தகுதிகளுடன் அனைத்து சான்றிதழ்களையும் இணைத்து விண்ணப்பியுங்கள், சரியான (30.10.2023, 5:00PM) நேரத்துக்குள் உங்கள் விண்ணப்பங்கள் சென்று அடைந்து உங்களுக்கு இந்த வேலை கிடைக்க வாழ்த்துக்கள்.
வேண்டுகோள்: மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே கருத்து பெட்டியில் பதிவிடுங்கள், அதற்கான பதிலை உடனே கொடுக்க முயற்சிப்போம். உங்கள் வருகைக்கு நன்றி, மேலும் ஒரு சிறிய வேண்டுகோள், அதாவது நேரம் இருந்தால் பிறருக்கும் இந்த கட்டுரை பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.