தமிழக அரசு வெளியிட்ட IEC வேலை வாய்ப்பு – எடிட்டிங் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது!

Follow Us
Sharing Is Caring:

தற்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் உள்ள மாவட்ட தகவல் மற்றும் கல்வி தொடர்பு சம்பந்தப்பட்ட IEC எனப்படும் அரசு வேலை வாய்ப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக திருநெல்வேலி மாவட்டத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் அடிப்படையில் நல்ல எடிட்டிங் தெரிந்தவர்கள், அதாவது எம்எஸ் வேர்டு, அடோப், போட்டோஷாப் போன்ற விஷயங்கள் தெரிந்தவர்களுக்கு இந்த வேலையில் முன்னுரிமை வழங்கப்படும். ஆகையால் 22/12/2023க்குள் விண்ணப்பிக்கமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Tirunelveli District Recruitment
Image: Canva

Tirunelveli District IEC வேலை பெயர் என்ன: இந்த வேலையின் பெயரானது தமிழில் தகவல், கல்வி மற்றும் தொடர்பு (IEC). அதாவது Information, Education and Communication (IEC) எனப்படும் வேலையாகும். இந்த வேலைக்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகிறது, காலிப்பணியிடத்தை பொருத்தவரை இரண்டு காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைக்கான கல்வி தகுதி: Tirunelveli Information, Education and Communication (IEC) வேலைக்கான கல்வி தகுதியை பொருத்தவரை பி.ஜி. மாஸ் கம்யூனிகேஷன் / மாஸ் மீடியாவில் பட்டம் அல்லது அதற்கு சமமான பட்டம் வேண்டும். அந்த சமமான கல்வி தகுதியை நீங்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி கழகத்திலிருந்து முடித்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

IEC கூடுதல் தகுதி என்ன: நீங்கள் மாஸ் கம்யூனிகேஷன்/ வாஷ்/சமூக அணிதிரட்டல்/பொதுத் துறை தகவல் தொடர்பு ஆகியவற்றில் இரண்டு முதல் மூன்று வருடங்கள் அனுபவம் பெற்று இருந்தால் விரும்பத்தக்க தகுதியாக ஏற்றுக் கொள்ளப்படும். அரசு அல்லது தனியார் துறையில் சமூக ஊடக பிரிவுகளில் பணிபுரிந்த விண்ணப்பதாரர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Information, Education, and Communication (IEC) Recruitment in District Rural Development Agency Tirunelveli District
Image: District Rural Development Agency Tirunelveli District

கவனிக்க: அஅரசாங்க அதிகாரிகள், கல்வித்துறை உள்ளூர் கலைஞர்கள், சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் பலதரப்பு கூட்டாளர்களுடன் தொடர்புகொள்வது, மிகவும் தேவைப்படும் சூழலில் பணிபுரியும் திறன் போன்றவை இந்த பதவிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

விரும்பத்தக்க தகுதிகள்: பொதுவாகப் பயன்படுத்தப்படும் MS Word, Powerpoint, adobe Photoshop & Illustrator போன்ற பேக்கேஜ்களைப் பற்றி நன்கு அறிந்த கணினித் திறன், தொடர்புடைய தரவு மற்றும் ஆவணங்களைத் தேட, வீடியோ மேக்கிங், மீம் தயாரித்தல், சுவரொட்டிகள் மற்றும் துண்டுப் பிரசுரங்களை உருவாக்குதல் போன்றவற்றில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். எனவே இவைகளில் நல்ல அனுபவம் பெற்றவர்கள் இந்த பதவிக்கு கட்டாயம் விண்ணப்பிக்கலாம்.

அதுமட்டுமில்லாமல் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முன்மாதிரியாக எழுதும் திறன் அவசியம். ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் திறன், விளக்கக்காட்சி திறன் மற்றும் தமிழ் பாப் கலாச்சாரம் பற்றிய நல்ல புரிதல் அவசியம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வேலைக்கான ஊதியம் எவ்வளவு: இந்த Information, Education, and Communication (IEC) வேலைக்கு இரண்டு பணியிடங்களுக்கான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு, அந்த விண்ணப்பதாரர்களுக்கு மாதம் 25 ஆயிரம் வழங்கப்படும்.

வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது: இது ஆன்லைனில் விண்ணப்பக்கும் ஒரு வேலையாகவும். ஆகையால் முதலில் உங்களுடைய விண்ணப்ப படிவத்தை நீங்கள் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். அப்போது உங்கள் விண்ணப்பம் சரி பார்க்கப்பட்டு அழைப்பு வரும். அப்போது நேரத்தில் உங்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்களை எடுத்து சென்ட்ரல், அதை சரிபார்த்து உங்களுக்கு Tirunelveli District IEC வேலை வழங்கப்படும்.

Information, Education, and Communication (IEC) Recruitment in Tirunelveli District
Information, Education, and Communication (IEC) Recruitment in Tirunelveli District

வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த பகுதியை கிளிக் செய்யுங்கள். அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்க இந்த பகுதியை கிளிக் செய்யுங்கள்.

கூடுதல் தமிழக அரசு வேலைகள்!
Sharing Is Caring:

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment