அரசு வரவேற்கும் இரவு காவலர் விண்ணப்பங்கள்!

Follow Us
Sharing Is Caring:

தற்போது சில நாட்களாகவே தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இரவு காவலர் பணி இடத்திற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் தற்போது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கட்டுப்பாட்டின் கீழ் பாதிக்கப்பட்ட மகிளிருக்கு உதவும் மையமான ஒன் ஸ்டாப் சென்டர் (One Stop Centre) எனும் மையத்திற்கு தேவையான இரவு காவலர் பணியிடத்திற்கான விண்ணப்பங்களை அரசு கேட்டுள்ளது.

இந்த பணியிடத்திற்கான முழு விவரங்களையும் இந்த கட்டுரையில் உங்களுக்கு வழங்க உள்ளோம். ஆகையால் விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கட்டாயம் விண்ணப்பித்து, DSWO-One Stop Centre வேலையை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடலாம்.

கவனிக்க: கூடுதல் சந்தேகம் இருந்தாலும், கருத்து பெட்டியில் கீழே பதிவிடுங்கள், அதற்கான உதவியும் நாங்கள் வழங்குவோம் என்று தெரிவித்துக் கொண்டு கட்டுரையில் அழைக்கிறோம் வாருங்கள்.

DSWO-One Stop Centre Recruitment
Image: Canva
WhatsApp Group Join Now

Telegram Group Join Now

DSWO-One Stop Centre வேலைக்கான பணியிடம் எங்கு, எத்தனை காலியிடம் உள்ளது: இந்த வேலை ஆனது ஒரு காலி பணியிடத்தை கொண்டுள்ளது. இது நாகப்பட்டினம் மாவட்டத்தில் இயங்கு வரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கட்டுப்பாட்டின் கீழ், பாதிக்கப்பட்ட மகளிருக்கு உதவும் மையத்தில் வழங்கக்கூடிய வேலை என்பது குறிப்பிடத்தக்கது.

Nagapattinam District’s வேலைக்கான ஊதியம் எவ்வளவு: இது மாத ஊதியமாக ரூபாய் பத்தாயிரம் வழங்கப்பட உள்ளது. ஆகையால் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு மாதம் 10,000/- ரூபாய் ஊதியம் வழங்கப்படும்.

DSWO Driver வேலைக்கான தகுதி என்ன: இது பாதுகாவலர் மற்றும் டிரைவர் வேலை ஆகும். அதாவது செக்யூரிட்டி மற்றும் டிரைவர் இரண்டு வேலையும் சேர்த்து பார்க்கக் கூடிய வேலையாக இருப்பதால், உங்களுக்கு சாதாரணமான கல்வி அறிவு மற்றும் வாகனம் ஓட்டும் திறன் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Nagapattinam DSWO பணி விவரம் என்ன: பணியின் விவரத்தைப் பொறுத்தவரை OSC கட்டிடத்திற்கு பாதுகாவலர் மற்றும் ஓட்டுனராக பணி புரிய வேண்டும். 24 மணி நேரமும் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணிய அமர்த்தப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு வரவேற்கும் இரவு காவலர் விண்ணப்பங்கள்!
Image: https://www.nagapattinam.nic.in/

சுழற்சி முறை என்றால் என்ன: அதாவது காலை 6 மணி முதல் 2PM மணி வரை. மதியம் 2PM மணி முதல் இரவு 10:00PM மணி வரை. பின்பு பத்து PM மணி முதல், காலை 6 மணி வரை பணியமறுத்தப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Nagapattinam DSWO-One Stop Centre வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது: இந்த வேலைக்கு நீங்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். நீங்கள் பதிவஞ்சல் மூலம் மிக சுலபமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும், விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய இந்த பகுதியை கிளிக் செய்யுங்கள். அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்துப் பார்க்க இந்த பகுதியை கிளிக் செய்யுங்கள்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய விலாசம்: உங்களுடைய விண்ணப்பத்தை பதிவஞ்சல் மூலம் மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நலர் அலுவலகம், திட்ட செயலாக்க பிரிவு-2, தரைத்தளம், கோட்ட அலுவலக வளாகம், புதிய கடற்கரை சாலை, காடம்பாடி நாகப்பட்டினம் 611001 என்ற முகவரிக்கு எழுதி அனுப்புங்கள்.

DSWO-One Stop Centre jobs
Image: https://www.nagapattinam.nic.in/

விண்ணப்ப இறுதி தேதி: நீங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய இறுதி தேதி ஆனது 27/12/2023 அன்று மாலை 5:45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

குறிப்பு: இந்த தகவல் அனைத்துமே Nagapattinam District’s அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சேகரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. ஆகையால் கூடுதல் விவரங்களுக்கும், தெளிவான விளக்கங்களுக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்க நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

கூடுதல் தமிழக அரசு வேலைகள்!
Sharing Is Caring:

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment