திருப்பத்தூர் மாவட்ட அலுவலக உதவியாளர் வேலை: 8ம் வகுப்பு முதல் விண்ணப்பிக்கலாம்!!

அறிவிப்பு: திருப்பத்தூர் மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அறிவிப்பு, அலுவலக உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்யப்பட உள்ளது. விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதான அரசு வேலை வாய்ப்பு: மொத்தம் 11 பணியிடங்கள் திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு வேலைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த Tirupur District Office Assistant வேலைக்கான முழு விவரங்களையும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பிக்கக்கூடிய விண்ணப்ப படிவத்தையும் இந்த பகுதியில் உங்களால் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

Note: மேலும் இந்த திருப்பத்தூர் மாவட்ட அலுவலக உதவியாளர் வேலைக்கு பொது பிரிவு, ஆதிதிராவிடர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் போன்ற பலருக்கும் இன சுழற்சி முறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகையால் இதற்கு உரிய நபர்கள் முன்னுரிமை பெற்றவர்கள் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 01/07/2023 தேதி படி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் என்றும் அறிவிப்பின் மூலம் நமக்குத் தெரிய வருகிறது. எனவே இந்த வேலை சம்பந்தமான முழு விவரங்களை இந்த வலைதள கட்டுரையில் பார்க்க உள்ளோம்.

[dflip id=”9076″ ][/dflip]


Tirupur District Rural Development and Panchayat Department Office Assistant Vacancies:

அறிவிப்புtirupathur.nic.in
பதவிஅலுவலக உதவியாளர்
சம்பளம்15,700/- To 58,100/-
காலியிடம்11
பணியிடம்திருப்பத்தூர்
தகுதிகள்8ம் வகுப்பு முதல்
விண்ணப்பிக்க கடைசி தேதி30/10/2023

அலுவலக உதவியாளர் மத சம்பளம்:

ஆகியல், நீங்கள் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவராக இருந்தால் இந்த மாவட்ட அலுவலக உதவியாளர் வேலை பெறுவதற்கான வாய்ப்பை பெறுங்கள், இதற்கு அதிகபட்ச ஊதியமாக 58,100/- ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, குறைந்தபட்ச ஊதியமாக 15,700/- ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே திருப்பத்தூர் மாவட்டத்தில் வெளியிடப்பட்ட அலுவலக உதவியாளர்கள் வேலைக்கு விண்ணப்பித்து, இந்த வேலையை பெறுவதற்கான வாய்ப்பை பெறுங்கள்.

திருப்பத்தூர் மாவட்ட அலுவலக உதவியாளர் வயதுவரம்பு:

வயதுவரம்பு பொருத்தவரை கீழே உள்ள பட்டியலை தெளிவாக பாருங்கள்:

  • பொது பிரிவுக்கு: குறைந்தபட்ச வயது 18, அதிகபட்ச வயது 32
  • மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு: குறைந்தபட்ச வயது 18, அதிகபட்ச வயது 34
  • பிற்படுத்தப்பட்டோர்: குறைந்தபட்ச வயது 18, அதிகபட்ச வயது 34
  • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு: குறைந்தபட்ச வயது 18, அதிகபட்ச வயது 37
  • ஆதரவற்ற விதவைகளுக்கு: 18 வயது குறைந்தபட்சமும், அதிகபட்ச வயது 37 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு: குறைந்தபட்ச வயது 18, மற்றும் ஒவ்வொரு பிரிவினருக்கும் நிர்ணயிக்கப்பட்ட உச்ச வயது வரம்பில் கூடுதலாக 10 ஆண்டுகள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் என்றும் அதிகாரப்பூர் அறிவிப்பின் மூலம் குறிப்பிடப்பட்டது.

முன்னாள் ராணுவத்தினருக்கு: குறைந்தபட்ச வயது 18 ஆகவும், மற்றும் ஜிடி 48, பிசி/எம்பிசி/ எஸ்சி/எஸ டி ஆகியோர்களுக்கு 53 வயது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்த தகவல்களை தெளிவாக தெரிந்துகொண்டு விண்ணப்பியுங்கள்.

திருப்பத்தூர் அலுவலக உதவியாளர் மொத்த காலி பணியிடங்கள்:

மொத்த காலி பணியிடங்கள் 11 ஆககும், அனால் இதில் இடஒதுக்கீட்டை பொருத்த அளவு கொரோனா தொற்றில், இதர காரணங்களாகவோ பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்களுக்கு (மகன்/மகள்) ஆகியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • ஆதிதிராவிடர்/அருந்ததியினர் முன்னுரிமை, அதிலும் மகளிர் ஆதரவற்ற விதவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  • மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/சீர்மரபினர் ஆகியோருக்கு முன்னுரிமையும், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அதிக முன்னுரிமையும் வழங்கப்படுகிறது.
  • பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம் அல்லாதவர்களுக்கு) முன்னுரிமை, தமிழக அரசசு பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்றவர்களுக்கு அதிகபட்சம் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • அதோடு மகளிர் ஆதவற்று ஆதரவற்ற விதவை, போரில் உடல் தகுதியை இழந்த முன்னாள் ராணுவத்தினர், போன்ற பல விஷயங்களை நீங்கள் இங்கு காண முடியும்.

திருப்பத்தூர் அரசு அலுவலக உதவியாளர் வேலைக்கு கல்வித்தகுதி:

திருப்பத்தூர் மாவட்ட அலுவலக உதவியாளர் வேலைக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம் என்பது கூடுதல் சிறப்பம்சமாகவே பார்க்கப்படுகிறது. எனவே நீங்கள் உங்கள் கல்வித் தகுதியை நினைத்து பயப்பட வேண்டாம். எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் கட்டாயம் இந்த பணிக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

அலுவலக உதவியாளர் வேலைக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள்:

திருப்பத்தூர் மாவட்ட அலுவலக உதவியாளர் வேலைக்கு விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாளானது 31/10/2023 மாலை 5:45 மணி என்று குறிப்பிடப்பட்டுள்ளது, ஆகையால் அதற்குள் உங்களுடைய முழு தகவலையும் கட்டுரையின் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து, அதோடு ஆவணங்களை இணைத்து சுய கையோப்பம் இட்டு உரிய இடத்திற்கு அனுப்ப வேண்டும், அது சம்பந்தமான தகவலை கீழே பாருங்கள்.

அலுவலக உதவியாளர் வேலைக்கு இதர தகுதிகள்:

இதர தகுதிகளை பொறுத்தவரை மிதிவண்டி மற்றும் இரு சக்கர மோட்டார் வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கவனிக்க: இருசக்கர வாகனம் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் என்று குறிப்பிடும் பட்சத்தில் உங்களுக்கு ஓட்டுநர் உரிமமும் தேவைப்படலாம் என்று கருதுகிறோம்.

நிபந்தனைகள்:

  • நிபந்தனைகளை பொறுத்த வரை விண்ணப்பதாரர்களுக்கான கல்வித் தகவல் சான்று, முன்னுரிமை சான்று ஆகியவற்றிற்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.
  • இன சுழற்சி, வயது மற்றும் கல்வி தகுதி உள்ளவர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
  • விண்ணப்ப படிவத்தில் உள்ள விபரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும், முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
  • சுய முகவரியுடன் கூடிய அஞ்சல் வெள்ளை ரூபாய் 30 ஓட்டி, அஞ்சல் உரை- 1, 10×4 அளவுக்கு இணைத்து அனுப்ப வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  • மேலும் தகுதி இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  • காலதாமதம் கடந்து பெறப்படும் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும்.
  • எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு

குறிப்பு: அரசு விதிகளின்படி இன சூழ்ச்சி முறையை பின்பற்றி நிபந்தனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது, எனவே அனைத்தையும் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் விண்ணப்பதாரர்கள் இருக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் மேலும் பூர்த்தி செய்யப்பட்ட பொறுப்பு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்கள் இணைத்து அலுவலக வேலை நாட்களில் ஒப்புகை சீட்டுடன் கூடிய பதிவேஞ்சல் மூலமாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஊரக வளர்ச்சி, அழகு மூன்றாவது தளம் e-பிளாக் மாவட்ட ஆட்சியரகம் திருப்பத்தூர் – 63 5601 என்ற முகவரிக்கு 31/10/2023 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

முக்கியமான கருத்து: நேரில் கொண்டு வரப்படும் விண்ணப்பங்கள் எக்காரணக் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது, நீங்கள் தபால் மூலம் மட்டுமே அனுப்ப முடியும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Tirupattur Office Assistant Jobs
Tirupattur District Rural Development and Panchayat Department Office Assistant

திருப்பத்தூர் மாவட்ட அலுவலக உதவியாளர் வேலைக்கு நேர்முகத்தேர்வு எப்போது?

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடம் நேர்காணல் நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்த தகவல் பதிவஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும். எனவே நீங்கள் உங்கள் விண்ணப்பத்தை அனுப்பி வைத்த பிறகு உங்களுக்கான பதில் அஞ்சல் கிடைக்கும், அதற்கு உங்கள் தகுதி ஒப்புக்கொள்ளப்பட வேண்டும்.

Tirupattur District Office Assistant Jobs Application:

அலுவலக உதவியாளர்களுக்கான காலி பணியிடங்கள் விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவத்தை திருப்பத்தூர் மாவட்ட அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலும் (https://tirupathur.nic.in/) நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் எங்கள் JobsTn வலைதளத்திலும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யும் வாய்ப்பும் உங்களுக்கு கிடைக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment