அறிவிப்பு: திருவள்ளுர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பெண்கள் சேவை மையத்தில் வெளியான வேலைவாய்ப்புச் செய்தியை பற்றி காண்போம்!
திருவள்ளுர் மாவட்டத்தில் தனியார் மற்றும் பொது இடங்களில் குடும்பத்தில், சமுதாயத்தில் மற்றும் பணிபுரியும் இடத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் சமூக நலன் (ம) மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய தகுதியான பெண் விண்ணப்பத்தாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மேலும் இதற்கான விண்ணப்பங்கள் திருவள்ளூர் மாவட்ட இணையதளத்தில் https://thiruvallur.nic.in என்ற முகவரியில் பணியிடம் மற்றும் தகுதிகள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 6 விதமான வேலை வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வேலைக்கும் விண்ணப்பிக்கும் தகுதி, சம்பளம், வயது வரம்பு பற்றிய விவரங்கள் உங்களுக்காக எங்கள் வலைதளத்தில் வழங்கியுள்ளோம்:
1) மைய நிர்வாகி (Centre Administrator)
தகுதி: சட்டம் (Master in Law)/ சமூகப்பணி (Master in Social Work)/சமூகவியல் (Sociology)/ சமூக அறிவியல் (Social Science)/ உளவியல் (Psychology) போன்றவற்றில் முதுகலை பட்டம் (Master Degree) போன்ற கல்வி தகுதிகள் இருக்க வேண்டும்.
அனுபவம்: பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் அரசு அல்லது அரசு சாரா நிர்வாக அமைப்பில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் இருத்தல் வேண்டும். மேலும் அதே அமைப்பில் அல்லது அதற்கு வெளியே குறைந்தபட்சம் 1 வருட ஆலோசனை வழங்கிய அனுபவம் தேவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பணியிடம்: 1
- சம்பளம்: மாதம் ரூ.30,0007-
- வயது: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
முக்கிய குறிப்பு:
- மேலும் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார்கள்.
- 24 மணி நேரம் சேவை அளிக்கும் வகையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
- திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
2) மூத்த ஆலோசகர் (Senior Counsellor)
தகுதி: சட்டம் (Master in Law)/ சமூகப்பணி (Master in Social Work)/ சமூகவியல் (Sociology)/ சமூக அறிவியல் (Social Science)/ உளவியல் (Psychology) போன்றவற்றில் முதுகலை பட்டம் (Master Degree) போன்ற கல்வி தகுதிகள் இருக்க வேண்டும்.
அனுபவம்: பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் அரசு அல்லது அரசு சாரா நிர்வாக அமைப்பில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் இருத்தல் வேண்டும். மேலும் அதே அமைப்பில் அல்லது அதற்கு வெளியே குறைந்தபட்சம் 1 வருட ஆலோசனை வழங்கிய அனுபவம் தேவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பணியிடம்: 1
- சம்பளம்: மாதம் ரூ.20,0007-
- வயது: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
- மேலும் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார்கள்.
- 24 மணி நேரம் சேவை அளிக்கும் வகையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
- திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
3) வழக்கு பணியாளர் (Case Worker)
தகுதி: சட்டம் (Master in Law)/ சமூகப்பணி (Master in Social Work)/ சமூகவியல் (Sociology)/ சமூக அறிவியல் (Social Science)/ உளவியல் (Psychology) போன்றவற்றில் முதுகலை பட்டம் (Master Degree) போன்ற கல்வி தகுதிகள் இருக்க வேண்டும்.
அனுபவம்: பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் அரசு அல்லது அரசு சாரா நிர்வாக அமைப்பில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் இருத்தல் வேண்டும். மேலும் அதே அமைப்பில் அல்லது அதற்கு வெளியே குறைந்தபட்சம் 1 வருட ஆலோசனை வழங்கிய அனுபவம் தேவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பணியிடங்கள்: 6
- சம்பளம்: மாதம் ரூ.15,000/-
- வயது: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
- மேலும் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார்கள்.
- 24 மணி நேரம் €சவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் (Shift) பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
- திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
கவனிக்க: வழக்கு பணியாளர் (IT Staff), (Multipurpose Worker), (Security) போன்ற பணியிடங்களுக்கு கீழே உள்ள எங்களுடைய விரிவான pdfஐ பாருங்கள்.
எவ்வாறு விண்ணப்பிக்க: மேற்கண்ட வேலைவாய்ப்பு பணியிடங்களுக்கு விருப்பமுள்ள மற்றும் தகுதியுள்ள பெண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து 04.12.2023 அன்று மாலை 5 மணிக்குள் கீழே உள்ள முகவரிக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
மாவட்ட சமூக நல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலை வளாகம், 2வது தளம்,
திருவள்ளுர் மாவட்டம்-602001.
Tiruvallur District Social Welfare Office – Press Release
[dflip id=”10965″ ][/dflip]
அறிவிப்பு | virudhunagar.nic.in |
பதவி | Night Watchman |
சம்பளம் | 6,400/- TO 30,000/- |
காலியிடம் | 13 |
பணியிடம் | ஒருங்கிணைந்த பெண்கள் சேவை மையத்தில் |
தகுதிகள் | Degree |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 04/12/2023 |
M Raj (Mohan Raj) is an expert in crafting informative articles, specializing in education updates and detailed job postings. With a keen eye for detail, Mohan Raj provides readers with accurate and up-to-date information.