திருவண்ணாமலை தேசிய நல வாழ்வு குழும திட்டத்தின் கீழ் காலியாக உள்ள கீழ்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி புரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த (District Health Society) அறிவிப்பின் அடிப்படையில் திருவண்ணாமலை சுற்றுவட்டாரத்தில் உள்ள நபர்கள் அரசு பணிக்கு ஆர்வமாக இருந்தால் கட்டாயம் விண்ணப்பிக்கலாம். உங்கள் விண்ணப்பங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில், அது சரிபார்க்கப்பட்டு அரசு வேலை வழங்கப்படும்.
மேலும் நீங்கள் அனுப்பும் விண்ணப்பத்துடன் உங்களுடைய கல்வி தகுதி சான்று, மதிப்பெண் சான்று போன்றவற்றை நீங்கள் இணைக்க வேண்டும், ஆகையால் அது சம்பந்தமான கூறுதல் விவரங்களும் கட்டுரையில் கிடைக்கும், எனவே தொடர்ந்து படிக்க வேண்டும்.
திருவண்ணாமலை தேசிய நல வாழ்வு குழும திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பதவிகளுக்கு விண்ணப்பத்திற்கான அறிவிப்பு வெளிவந்த நாளானது 05/03/2024 ஆகும். அதேசமயம், விண்ணப்பத்தை நீங்கள் வரும் 20/03/ 2024 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதோடு, நீங்கள் விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்து தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் முக்கியமான இரண்டு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு பணியிடத்திற்கும் ஒவ்வொரு காலி பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் நீங்கள் கட்டுரையை தெளிவாக படிக்கவேண்டும்.
இதில் (Block Data Entry Operator) மற்றும் RBSK Phamacist என்ற பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதலில் கூறிய பிளாக் டேட்டா என்ட்ரி பதவிக்கு 13 ஆயிரத்து 500 ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்தபடியாக RBSK Phamacist என்ற பணிக்கு 15 ஆயிரம் ரூபாய் மாத ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் டேட்டா என்ட்ரி வேலைக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கணினி பட்டதாரி அல்லது கணினி விண்ணப்பத்தில் டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தபடியாக, RBSK Phamacist வேலைக்காக நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் D.Pharm அல்லது B.Pharm பாடநெறி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டிய ஆவணங்கள்; கல்வி சான்று மற்றும் மதிப்பெண் சான்று.
நிபந்தனைகள்; இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது, எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி; கௌரவ செயலாளர், துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள், மாவட்ட நல வாழ்வு சங்கம், (டிஸ்ட்ரிக்ட் ஹெல்த் சொசைட்டி) துணை சுகாதாரப்பணி அலுவலகம், பழைய அரசு மருத்துவ வளாகம், செங்கம் சாலை திருவண்ணாமலை என்ற முகவரிக்கு உங்கள் விண்ணப்பத்தை பதிவு செய்து அனுப்புங்கள்.
கவனிக்க வேண்டிய விஷயம்; மேற்கண்ட பதவிகளுக்கு அவசரம் மற்றும் அவசியம் கருதி உடனடியாக பணியமர்த்த உள்ளதால், ஒப்பந்த அடிப்படையில் பணி புரிவதற்கு 20/03/2024 மாலை 5 மணிக்குள், நேரிலோ அல்லது தபால் மூலமாக உங்கள் விண்ணப்பத்தினை மேற்கண்ட முகவரிக்கு வந்து சேருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக உங்கள் விண்ணப்பத்தை விரைந்து அனுப்பி, வேலையில் சேர முயற்சி செய்யுங்கள். விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்வதற்கான வாய்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது, அதிகாரப்பூர்வ வலைதளத்தை அணுகும் வாய்ப்பும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது பார்த்த பயன் பெறுங்கள்.
JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.