அறிவிப்பு: வேலூரில் உள்ள சிறார் நீதி வாரியத்தில் அசிஸ்டெண்ட் கம் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலூர் மாவட்டத்தில் சிறந்த அரசு வேலை வாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது, இந்த வேலைவாய்ப்பானது சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் இளைஞர்கள் நீதிக் குழுமத்திற்கு தேவைப்படும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணி நியமனம் ஆகும்.
மேலும் இது உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பதவிக்கு வரவேற்கப்படும் விண்ணப்பம் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு இது முற்றிலும் தற்காலிகமாக வேலை, இருந்தபோதும் இது ஒரு நல்ல அரசு வேலை என்பதால் கட்டாயம் நீங்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
உண்மைதான்! 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு, அதோடு தொகுப்பூதியத்தின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளதால் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட உள்ளதாக வேலூர் மாவட்ட அரசாங்க வலைதளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புக்கான முழு விளக்கங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் போன்ற அனைத்தையும் இந்த கட்டுரையில் பார்க்கலாம். அதோடு இதற்கு விண்ணப்பிக்கக்கூடிய கடைசி தேதி, வயது வரம்பு என்று அனைத்தையும் பார்க்க வாருங்கள்.
வயதை பொறுத்தவரை இதற்கு 40 கடக்காமல் இருக்க வேண்டும், ஊதியமாக 11,916/- ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 16/10/2023 மாலை 5:45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டியது அவசியம் எனப்பட்டுள்ளது. ஆகையால் அனைத்தும் விவரங்களும் கீழே உங்களுக்கு தெளிவாக, அதை பற்றி தெளிவாக பார்க்கலாம்.
[dflip id=”9113″ ][/dflip]
[dflip id=”9106″ ][/dflip]
Details Of Vellore Assistant Cum Data Entry Operator Requirement
அறிவிப்பு | vellore.nic.in |
பதவி | டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் |
சம்பளம் | Rs. 11,916/- |
காலியிடம் | 1 |
பணியிடம் | வேலூர் |
தகுதிகள் | 12ம் வகுப்பு முதல் |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 16/10/2023 |
அசிஸ்டெண்ட் கம் டேட்டா என்ட்ரி கல்வித் தகுதி:
இந்த வேலூரில் டேட்டா என்ட்ரி வேலைக்கான கல்வி தகுதியை பொருத்தவரை 12ஆம் வகுப்பு கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் டிப்ளமோ சர்டிபிகேட், கம்ப்யூட்டர் தெரிந்து இருக்க வேண்டும். அதோடு வேலை செய்த எக்ஸ்பீரியன்ஸ் இருக்க வேண்டும், தட்டச்சு தேர்வில் நல்ல திறன் பெற்று இருக்க வேண்டும், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை தேர்ச்சி பெற்ற அவசியம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
English: Diploma / Certificate in Computers. Weightage for work experience candidate.
ஆகையால் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சியோடு இவை அனைத்தும் உங்களுக்கு இருந்தால் கட்டாயம் இந்த பணிக்கு நீங்கள் விண்ணப்பிக்க முடியும்.
வேலூர் அரசு டேட்டா என்ட்ரி வயது வரம்பு:
இந்த வேலூர் டேட்டா என்ட்ரி விண்ணப்பத்திற்கான வயது 40க்கும் குறைவாக இருக்க வேண்டும் என்று கட்டுரையின் ஆரம்பத்தில் நாங்கள் குறிப்பிட்டிருந்தோம். இருந்தாலும் தெளிவான விளக்கத்தை பார்க்கலாம்.
அதாவது 01/07/2023 அன்று உள்ளபடி 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று விண்ணப்பத்தில் வேலைக்கான அறிவிப்பில் நம்மால் பார்க்க முடிகிறது, அந்த அறிவிப்பை நீங்களும் பார்த்து தான் இந்த பகுதி வரை வந்திருப்பீர்கள், காரணம் மேலே அது சம்பந்தமான அறிவிப்பை நாங்கள் கொடுத்து இருக்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.
கவனிக்க: வேலூர் அரசு டேட்டா என்ட்ரி வேலை அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் வேண்டும் என்றால் அதிகாரப்பூர் வலைதளமான https://vellore.nic.in/ வலைதளத்திலும் நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலூர் டேட்டா என்ட்ரி வேலைக்கான ஊதியம் எவ்வளவு?
வேலைக்கான ஊதியத்தைப் பொறுத்தவரை இது தொகுப்பூதியம் என்று குறிப்பிட்டுள்ளோம், ஆகையால் அதனை பற்றிய வீக்கத்தை முதலில் காணுங்கள்:
தொகுப்பூதியம் என்றால் என்ன?
தொகுப்பு என்பது குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வழங்கப்படக் கூடிய ஊதியம், அதாவது ஒரு வேலையில் நீங்கள் சேர்கிறீர்கள் என்றால் அந்த வேலை ஒரு டெம்பரவரியான, அதாவது குறுகிய வருடத்திற்கு அல்லது குறுகிய மாதத்திற்கு மட்டும் கொடுக்கக்கூடிய வேலையாகும். எனவே அவ்வாறு அந்த வேலையின் காலக்கெடு முடியும் வரை கிடைக்கும் ஊதியத்தை தொகுப்பூதியம் என்று குறிப்பிடுகிறோம்.
இந்த வேலூர் டேட்டா என்ட்ரி வேலைக்கான தொகுப்பூதியத்தை பொருத்தவரை 11,916/- ரூபாய் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ஒரு சிறந்த அரசு வேலையை தேடுபவர்களுக்கு இந்த தொகுப்பு ஊதிய பணி கிடைக்க வாய்ப்பு உள்ளது.
கவனிக்க: மெர்க்குரிப்பீட்ட தகுதி வாய்ந்த நபர்கள் இப்பதவிக்கான விண்ணப்பம் மற்றும் தகவல்களை வேலூர் மாவட்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், எங்களுடைய வலைதளத்திலும் பதிவிறக்கம் செய்வதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளோம். ஆகையால் இரண்டையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
அரசு டேட்டா என்ட்ரி வேலைவாய்ப்பு விண்ணப்பம் அனுப்பக்கூடிய செயல்முறை:
விண்ணப்பத்தை உரிய ஆவணங்களோடு இணைத்து சுய கையொப்பமிட வேண்டும், அதோடு ஒளி நகலுடன் வரும் 16/10/2023 மாலை 5:45 மணிக்குள் கீழ் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு வந்து சேரும் வகையில் விண்ணப்பிக்குமாறு வேலூர் மாவட்ட சமூக பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் இளைஞர் நீதி குழுமத்தின் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பம் அனுப்பி வைக்க வேண்டிய முகவரி: முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு (சுற்றுலா மாளிகை எதிரில்) அண்ணா சாலை வேலூர் – 63 20 01 என்று முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

கவனிக்க வேண்டியது:
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும், மேலும் உரிய ஆவணங்கள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் யாவும் முன் தகவல் என்றி நிராகரிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகையால் விண்ணப்பத்தை தெளிவாக பூர்த்தி செய்து அனுப்புங்கள்.
சில வார்த்தைகள் உங்களோடு: இந்த வேலூர் அரசு டேட்டா என்ட்ரி வேலையை பற்றிய முழு தகவலை உங்களுக்கு வழங்கி இருப்போம். மேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் கட்டாயம் கருத்துப்பட்டியில் பதிவிடுங்கள், அதற்கான பதிலை விரைவில் கொடுப்போம்.
வேண்டுகோள்: அதோடு நீங்கள் விருப்பப்பட்டால் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மற்றவர்களுக்கும் இந்த அரசு டேட்டா என்ட்ரி வேலையை பகிரலாம் என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொண்டு அடுத்த கட்டுரையில் சந்திக்கிறோம் நன்றி வணக்கம்.

JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.