நண்பா (SBI) தமிழ்நாட்டில் மட்டும் 355 வேகன்ஸி உள்ளது

இந்தியாவில் அனைவருக்கும் பரிச்சயமான வங்கிகளிலும் முதன்மையாக இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அதாவது (SBI) என்று அழைக்கக்கூடிய வங்கியில் மொத்தம் 5,190 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் முக்கியமாக இந்தியாவில் உள்ள நமது தமிழ்நாட்டில் மட்டும் 355 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

நமது தமிழ்மொழி பேசும் மக்களுக்காக கிடைக்க கூட அனைத்து வேலைகளையும் நாங்கள் தொகுத்து வழங்கி வருகிறோம், அந்த வகையில் எஸ்பிஐ வங்கி மூலம் இந்த (Advertisement No. CRPD/CR/2022-23/15) காணலாம்.

JUNIOR ASSOCIATES (CUSTOMER SUPPORT & SALES) அறிவிப்பில் வெளியான இந்த வேலைக்கான வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்கும் முறை, ஊதிய விவரம் போன்ற பல விஷயங்களை எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிலிஇருந்து சேகரித்து தமிழ் மொழியில் சுலபமாக தொகுத்து வழங்கியுள்ளோம்.

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

இதை நீங்கள் தமிழ்மொழியில் மிக சுலபமாக புரிந்து கொள்ளும் வாய்ப்பை நாங்கள் இந்த பகுதியில் வடிவமைத்துள்ளோம், இதன் மூலம் உங்களுக்கு உதவி கிடைக்கும் என்று நம்புகிறோம், வாரங்கள் தொடர்ந்து இந்த வேலையைப் பற்றிய சில விவரங்களை நாம் பார்க்கலாம்.

முதலில் இந்த அறிவிப்பானது எஸ்பிஐ வங்கி அதிகாரபூர்வ அறிவிப்பு-இல் இருந்து எடுக்கப்பட்டது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும், தொடர்ந்து அதிகப்படியான விவரங்களை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு உங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கிடைக்கும்.

அறிவிப்பை சேரும் வழி எங்கள் வலைதள கட்டுரையில் கீழே உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது, அதன் மூலம் கூடுதல் விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

SBI Advertisement No. CRPDCR2022-2315

இந்த வேலையின் பெயர் என்ன?

இந்த வேலையின் பெயரானது (Junior Associate (Customer Support & Sales) in Clerical Cadre Posts) என்று கூறப்படுகிறது.

அதாவது இது பல வேலைகளை, பல காலிப்பணியிடங்களை தன் உள்ளடக்கியதாக உள்ளது, எனவே இதற்கான கல்வித் தகுதியை தெளிவாக தெரிந்துகொண்டு நீங்கள் விண்ணப்பிக்க துவங்கலாம்.

இதன் மூலம் உங்களுக்கு இந்த வேலை காண தேர்வு முறையிலும், உங்கள் சான்றிதழ் சரிபார்ப்பு முறையிலும் வேலை வழங்கப்படும் என்பது குறிப்பிட தக்கது.

வயது வரம்பு என்ன?

வேலைக்கான வயது வரம்பை பொறுத்தவரை நீங்கள் குறைந்தபட்சம் 18 வயது உள்ளவராகவும், அதிகபட்சம் 28 வயதை தாண்டாத நபராகவும் இருக்க வேண்டும், அதன் அடிப்படையில் உங்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.

விவரம்அறிவிப்பு
அறிவிப்புState Bank of India (SBI)
துறைஎஸ்பிஐ வங்கி
அறிவிப்பு மற்றும் விண்ணப்பிக்கAdvertisement No. CRPD/CR/2022-23/15
திறக்கும் தேதி07/09/2022
கடைசி தேதி27/09/2022
வேலை இடம்தமிழ்நாடு
பதிவுமுறையை(Online) மூலமாக

ஊதியம் எவ்வளவு?

இந்த வேலைக்கான ஊதியத்தை பொருத்தவரை 17,900 தொடங்கி 19,900 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது, மேலும் கூடுதல் சில படிகளும் உங்களுக்கு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.

PAY SCALE: Rs.17900-1000/3-20900-1230/3-24590-1490/4-30550-1730/7-42600-3270/1-45930-1990/1-47920.

The starting Basic Pay is Rs.19900/- (Rs.17900/- plus two advance increments admissible to graduates) அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் நீங்கள் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்

வேலைக்கான விண்ணப்ப கட்டணம்?

இந்த விண்ணப்பத்தை பொருத்தவரை 750 நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இருந்தபோதும் சில முக்கிய வகுப்பினருக்கு இந்த விண்ணப்ப கட்டணம் நீக்கப்பட்டுள்ளது, அதைப் பற்றிய விவரங்களை தொடர்ந்து காணலாம்.

SC/ ST/ PwBD/ ESM/ DESM – No Fees
General/ OBC/ EWS – Rs.750/-

இதை நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் இறுதி தேதி?

காலி பணியிடங்களில் விவரங்கள் என்ன?

இது மொத்தம் 5,190 காலிப்பணியிடங்களை தன்னுள் அடக்கிய SBI அறிவிப்பாக உள்ளது, அதில் பாண்டிச்சேரியில் 7 காலி பணியிடங்களும், தமிழ்நாட்டில் 355 காலி பணியிடங்களும், மற்றும் இதர மாநிலங்களில் 4,822 காலி பணியிடங்களும் உள்ளது.

இதில் நாம் முக்கியமாக பார்க்க விருப்பது தமிழ்நாட்டிலுள்ள 355 காலி பணியிடங்களை நிரப்பும்போது நம் தமிழர்கள் இதற்கு முயற்சித்தால் நிச்சயம் பலன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே உங்கள் விண்ணப்பத்தை விரைவாக பூர்த்தி செய்ய மறக்காதீர்கள்.

தேர்வுமுறை எப்படி இருக்கும்?

இந்த வேலைக்கான தேர்வை பொருத்தவரை உங்களுக்கு ஆன்லைன் டெஸ்ட், மெயின் எக்ஸாம் மற்றும் லாங்குவேஜ் டேஸ்ட் (Online Test, Preliminary & Main exam, Local Language Test) போன்றவை இருக்கிறது.

அதாவது அந்த மாநிலத்தில் அணியப்படும் சொந்த தாய் மொழியை பற்றிய சில கேள்விகள் கேட்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது, எனவே அதற்கும் நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் இறுதி தேதி?

முதலில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டும், அதற்கான வாய்ப்பை எங்கள் வலைதளத்தின் மூலம் நீங்கள் பெறலாம்.

உங்களுடைய கல்வி தகுதிக்கு தகுந்தார் போல் இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, உங்கள் விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அதில் உங்களுடைய ஈமெயில் ஐடி, மொபைல் நம்பர் போன்ற தகவல்களை தெளிவாக கொடுக்க வேண்டும், அப்போதுதான் எஸ்பிஐ வங்கி உங்களை தொடர்பு கொள்ளும்.

பின்பு அனைத்து விஷயங்களும் சரியாக செய்த பின்னர் 750 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த நேரிட்டால் நிச்சயம் அதை செலுத்துங்கள்.

அனைத்து தகவலும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டதா என்பதை உறுதி செய்த பிறகே இறுதி பொத்தானை அழுத்தி உங்கள் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யுங்கள்.

நீங்கள் பதிவேற்றம் செய்து அதற்கான ஏதேனும் ஆதாரம் தோன்றும்போது அதை நீங்கள் நகல் எடுத்து வைத்துக் கொள்வது, அதாவது பிரிண்ட் எடுப்பது அவசியம்.

இவை அனைத்தையும் எஸ்பிஐ வங்கியின் அறிவிப்பில் கூறியவாறு 27/09/2022 அன்றுக்குள் நீங்கள் செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எங்கள் jobstn.in தளத்தில் அதிக வேலைகளைப் பார்க்கவும்
jobstn Whatsapp Group GIF Jobs Tn

கட்டாயம்

இந்த வலைதள கட்டுரையில் பார்த்த இந்த SBI Advertisement No. CRPD/CR/2022-23/15 தகவலின் மூலம் தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்ட எஸ்பிஐ வங்கியின் 355 காலிப்பணியிடங்களை நம் தமிழ் மக்கள் பெறுவதற்கான உதவியில் ஏதோ ஒரு பகுதியை நாங்கள் எடுத்து செயல்பட்டோம் என்று நினைக்கிறோம்.

நீங்களும் தமிழ் மக்களுக்கு இந்த வேலை கிடைக்க வேண்டும் என்று நினைத்தால் நீங்களும் ஒரு விரல் கொண்டு இந்த வலைதள கட்டுரையை ஒரு வாட்ஸ்அப் குரூப்பிலாவது பகிருங்கள், அதன் மூலம் பலருக்கும் உதவி கிடைக்கும்.

SBI New VacancySTATE BANK OF INDIA (sbi.co.in)
Apply LinkWelcome to SBI Recruitment – CRPD/SCO/2022-23/17 (bank.sbi)
Announcment PageCurrent Openings – Careers (sbi.co.in)

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment