தருமபுரி அரசு அலுவலக உதவியாளர்‌ பணி – 8ம்‌ வகுப்பில்‌ தேர்ச்சி: சம்பளம்‌ ரூ.15,700/- முதல்‌ ரூ.50,000/-

தருமபுரி மாவட்டத்தில்‌ காலியாக உள்ள அலுவலக உதவியாளர்‌ பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிப்பை நம்‌ JobsTn வலைதளத்தில்‌ காண்போம்‌ வாருங்கள்‌!

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

இந்த தருமபுரி அரசு அலுவலக உதவியாளர்‌ வேலைக்கான விண்ணப்ப முறை, தகுதி, காலியிடம்‌, பணியிடம்‌, சம்பளம்‌, விண்ணப்பிக்கும்‌ முறை மற்றும்‌ விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஆகிய விவரங்கள்‌ உங்களுக்கான கீழே தரப்பட்டுள்ளது.

ஆம், தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சி அலகில்‌ அரசு தரப்பில்‌ காலியாக உள்ள 4 அலுவலக உதவியாளர்‌ பணியிடத்தை பூர்த்தி செய்யும்‌ பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன.

மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்‌ 13.11.2023 முதல்‌ 21.11.2023 வரை அலுவலக வேலை நாட்களில்‌ காலை 10.00 மணி முதல்‌ மாலை 05.45 மணி வரை அலுவலகத்தில்‌ சமர்ப்பிக்கப்பட வேண்டும்‌.

பணியின்‌ பொறுப்பு: இந்த பணியின்‌ தன்மையினை பொறுத்தவரை ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித்‌ துறை அலுவலகங்களில்‌ பணிபுரியும்‌ உயர்‌ அலுவலகர்களுக்கு அடிப்படைப்‌ பணிகள்‌ மேற்கொள்வதில்‌ உதவி செய்தல்‌ மற்றும்‌ அலுவகை நடைமுறை பணிகளில்‌ உதவி செய்தல்‌ ஆகும்‌ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பளம்‌: இந்த வேலைக்கான சம்பளம்‌ ரூ.15,700- முதல்‌ ரூ.50,000/- (Level-1) வரை என்ற சம்பள ஏற்ற முறையில்‌ அரசு நிர்ணயம்‌ செய்யும்‌ படிகளுடன்‌ வழங்கப்படும்‌.

வயது: வயது வரம்பினை பொறுத்தவரை 01.07.2023 அன்று குறைந்தபட்சம்‌ 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்‌. அதிகபட்ச வயது பூர்த்தி அடையாமல்‌ இருத்தல்‌ வேண்டும்‌.

கபவனிக்க: (01.07.2023 அன்றுள்ளவாறு) இதர பிரிவின்‌ 32 வயதிற்குள்ளும்‌, பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ மிகவும்‌ பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்‌ மற்றும்‌ சீரமரபினர்‌ 34 வயதிற்குள்ளும்‌, பட்டியல்‌ வகுப்பினர்‌, பழங்குடியினர்‌ மற்றும்‌ அனைத்து வகுப்பினை சார்ந்த ஆதரவற்ற விதவைகள்‌ 42 வயதிற்குள்ளும்‌ இருத்தல்‌ வேண்டும்‌ என்று கூறப்பட்டுள்ளது.

மேலும்‌ இதற்கான இனசுழற்சி மற்றும்‌ இடஒதுக்கீட்டிற்கான விவரங்கள்‌ குறித்தும்‌ உங்களுக்கான எங்கள்‌ வலைதளத்தில்‌ கொடுத்துள்ளோம்‌:

  • பிற்படுத்தப்பட்டோர்‌ யிற்படுத்தப்பட்ட முஸ்லீம்கள்‌ தவிர) – பொது (BC – General).
  • பொதுப்போட்டி (பெண்கள்‌ – ஆதரவற்ற விதவை) (OC – Women – Destitute Widow).
  • ஆதிதிராவிடர்‌ – பொது (SC -General).
  • உ மிகவும்‌ பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்‌ மற்றும்‌ சீரமரபினர்‌ (பெண்கள்‌ – ஆதரவற்ற விதவை) (MBC – DC – Women/Destitite Widow).

கல்வித்தகுதி: தருமபுரி மாவட்டத்தில்‌ வெளியான இந்த அலுவலக உதவியாளர்‌ பணியிடத்திற்கான கல்வித்‌ தகுதியினை பொறுத்தவரையில்‌ 8ம்‌ வகுப்பில்‌ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌. மற்றும்‌ மிதிவண்டி ஓட்டத்‌ தெரிந்தவராக இருக்க வேண்டும்‌.

மேலும்‌ இப்பணியிடத்திற்கான மாதிரி விண்ணப்பப்‌ படிவத்தினை https: //dharmapuri.tn.nicin என்ற இணையதள. முகவரியிலும்‌ மற்றும்‌ எங்கள்‌ JobsTn வலைதளத்திலும்‌ பதிவிறக்கம்‌ செய்து விண்ணப்பிக்கலாம்‌.

இவ்வேலைக்கு விண்ணப்பிப்பதற்கான சில நிபந்தனைகள்‌ கொடுக்கப்பட்டுள்ளது, அவற்றையும்‌ உங்களுக்கான எங்கள்‌ வலைதளத்தில்‌ பகிர்ந்துள்ளோம்‌:

தகுதியுள்ள விண்ணப்பத்தாரர்கள்‌ தங்களது விண்ணப்பத்தினை www.dharmapuri.tn.nicin என்ற இணைதளத்திலும்‌ தேசிய தொழில்நெறி வழிகாட்டு மைய இணையதளத்திலும்‌ (National Career Service Portal) www.ncs.gov.in உள்ள விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம்‌ செய்து பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும்‌.

இணையதளத்தில்‌ பதிவிறக்கம்‌ செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து 13.11.2023 அன்று முதல்‌ 21.11.2023 வரை அலுவலக வேலை நாட்களில்‌ காலை 10.00 மணி முதல்‌ மாலை 05.45 மணி வரை மாவட்ட ஆட்சியரின்‌ நேர்முக உதவியாளர்‌ (வளர்ச்சி), மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகம்‌ (வளர்ச்சிப்‌ பிரிவு), இரண்டாவது தளம்‌, தருமபுரி – 636 705 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால்‌ மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும்‌.

இணையதளத்தில்‌ பதிவிறக்கம்‌ செய்யப்பட்ட தருமபுரி அரசு அலுவலக உதவியாளர்‌ விண்ணப்பப்‌ படிவத்தில்‌ உள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும்‌. முழுமையாக பூர்த்தி செய்யப்படாத (கல்வி, வயது, இனசுழற்சி) விண்ணப்பங்கள்‌ கண்டிப்பாக நிராகரிக்கப்படும்‌.

தகுதியுள்ள விண்ணப்பத்தாரர்களுக்கு நேர்முகத்‌ தேர்வு நடைபெறும்‌. இடம்‌ மற்றும்‌ தேதி குறித்து நேர்காணல்‌ கடிதம்‌ (Call Letter) பின்னர்‌ அனுப்பி வைக்கப்படும்‌.

நிபந்தனை:

  • தகுதி இல்லாத விண்ணப்பங்கள்‌ நிராகரிக்கப்படும்‌.
  • காலதாமதமாக வரும்‌ விண்ணப்பங்கள்‌ எக்காரணம்‌ கொண்டும்‌ பரிசீலிக்கப்பட மாட்டாது.
  • எந்த ஒரு விண்ணப்பத்தையும்‌ நிராகரிக்கும்‌ அதிகாரம்‌ நிர்வாகத்திற்கு உண்டு, போன்ற நிபந்தனைகள்‌ அந்த அரசு ஆணையில்‌ கொடுக்கப்பட்டூள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

மாவட்ட ஆட்சியரின்‌ நேர்முக உதவியாளர்‌ (வளர்ச்சி),
மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகம்‌ (வளர்ச்சிப்‌ பிரிவு),
இரண்டாவது தளம்‌, தருமபுரி – 636 705.


Office Assistant Vacancy in Dharmapuri: Apply Now!
Notification For Office Assistant Details

Notification For Office Assistant Details in Dharmapuri Rural Development and Panchayat Unit

[dflip id=”10687″ ][/dflip]

Application Form For Office Assistant in Dharmapuri Rural Development and Panchayat Unit

[dflip id=”10690″ ][/dflip]

அறிவிப்புஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித்துறை
பதவிஅரசு அலுவலக உதவியாளர்‌
சம்பளம்15,700/- முதல்‌ 50,000/-
காலியிடம்04
பணியிடம்தருமபுரி மாவட்டத்தில்‌
தகுதிகள்8ம்‌ வகுப்பில்‌ தேர்ச்சி
விண்ணப்பிக்க கடைசி தேதி21/11/2023

நவம்பர் மாத தருமபுரி மாவட்ட அரசு வேலைகள்!

அரசு வேலைகள்கடைசி தேதி
மாவட்ட அரசு சுகாதார சங்கத்தில்‌ DHS வேலை!23/11/2023
தருமபுரி மாவட்ட அரசு இரவுக்‌ காவலர்‌ பணி!21/11/2023
தருமபுரி மாவட்டத்தில்‌ அரசு ஓட்டுநர்‌ பணியிடம்‌!21/11/2023

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment