மயிலாடுதுறை மாவட்ட OSC மையம் ஆட்சேர்ப்பு 2023: 13 பணியிடங்கள்!! மதம் 6,500/- முதல் 30,000/- வரை ஊதியம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த அறிவிப்பானது மயிலாடுதுறை மாவட்ட அரசு வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பு சம்பந்தப்பட்ட தெளிவான விளக்கங்களை தான் இந்த கட்டுரையில் நாம் பார்க்க உள்ளோம்.

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

கவனிக்க: 24 மணி நேரமும் செயல்படும் பாதிக்கப்பட்ட மகளிர் காண உதவி மையத்திற்கான தொகுப்பு புதிய முறையில் பணிநீயமும் செய்யப்படுவது பற்றிய அறிவிப்பு.

[dflip id=”9944″ ][/dflip]

[dflip id=”9947″ ][/dflip]


Notification Form for Government Center Administrator, Senior Legal Adviser, Computer Administrator, Case Worker, Multi-Purpose Worker, and Constable Posts published in Mayiladuthurai District.

அறிவிப்புramanathapuram.nic.in
பதவிஅரசு மைய நிர்வாகி, சட்ட முதுநிலை ஆலோசகர், கணினி நிர்வாகி, வழக்குப் பணியாளர், மல்டி பர்ப்பஸ் ஒர்க்கர், காவலர்
சம்பளம்6,500/- முதல் 30,000/-
காலியிடம்13
பணியிடம்சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை – மயிலாடுதுறை
தகுதிகள்8th to Degree
விண்ணப்பிக்க கடைசி தேதி31/10/2023

ஒன்று: மைய நிர்வாகி காலி பணியிடம்

இது மைய நிர்வாகி காலி பணியிடம் (Administor) எனும் பணியிடம், இதற்க்கு (1) ஒன்று வேலையவாய்ப்பு உள்ளது, இதற்கு மாத (30,000/-) முப்பதாயிரம் ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்பட உள்ளது, இது முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிவதற்கான வேலைவாய்ப்பு. இதற்கான கல்வி தகுதி MSW அல்லது சட்டப்படிப்பு, மேலும் நான்கு வருட அனுபவம், மற்றும் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

இரண்டாவது: சட்ட முதுநிலை ஆலோசகர்

வேலை வாய்ப்பு இரண்டாவது வேலை வாய்ப்பு என்பது சட்ட முதுநிலை ஆலோசகருக்கான பணியிடம், இதற்கு ஒரு (1) காலி பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது, 20,000/- ரூபாய் தொகுப்பு ஊதியம் ஒப்பந்த அடிப்படையில் தான் பணி புரிய வேண்டும். கல்வி தகுதியை பொருத்தவரை MSW கல்வி தகுதி அல்லது சட்டப்படிப்பு, மேலும் 2 வருடம் அனுபவமும் 35 வயதுக்கு குறைவாகவும் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்றாவது: கணினி நிர்வாகி

வேலைவாய்ப்பு மூன்றாவது வேலை வாய்ப்பு பொறுத்தவரை தமிழில் கணினி நிர்வாகி என்று கூறக்கூடிய பணியிடம் (ஐடி அட்மினிஸ்ட்ரேட்டர் – IT Administrator) என்பது, இதற்கு 1 பணியிடம் உள்ளது, மேலும் தொகுப்பூதியமாக மாதம் 18,000/- ரூபாய் வழங்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது, தொகுப்பு ஊதியம் அடிப்படையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்களுக்கு இளங்கலை பட்டம் மற்றும் முதுகலை பட்டம் கணினி அறிவியல் போன்றவற்றில் மூன்று வருடம் அனுபவத்துடன் கூடிய படிப்பு தேவைப்படுகிறது, இதற்கு 35 வயது அதிகபட்சமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நான்கு: வழக்கு பணியாளர்

வழக்கு பணியாளர் (Case Worker) எனும் பணியிடத்திற்கு ஆறு (6) காலி பணியிடங்கள் அறிவிக்கவும் பட்டுள்ளது, இதற்கு மாதம் 15,000/- ரூபாய் தொகுப்பதில் வழங்கப்பட உள்ளதாகவும், மேலும் பட்டப்படிப்பு, இளங்கலை சமூகப் பணி போன்றவற்றில் ஒரு (1) வருடம் அனுபவத்துடன் கூடியவர்கள் விண்ணப்பிக்கலாம், இதற்கான வயது வரம்பு 35 வயது என்று கணக்கிடப்பட்டுள்ளது.

ஐந்து: பல்நோக்கி உதவியாளர்

பல்நோக்கி உதவியாளர் அதாவது பல விஷயங்களுக்கு உதவி புரிபவர் எனப்படும் வேலைக்கு (Multipurpose Worke) இரண்டு (2) காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது, இந்த காலி பணியிடத்தை பொறுத்தவரை 6,500/- தொகுப்பு ஊதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிய வேண்டும், 35 வயதுக்கு குறைவாக இருக்க வேண்டும்.

ஆறாவது: காவலருக்கான பணியிடம்

காவலருக்கான பணியிடம், இதை செக்யூரிட்டி என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள், இந்த பணியிடத்திற்கு மாதம் 10,000/- ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்பட உள்ளது, இதுவும் ஒப்பந்த அடிப்படையில் தான்வழங்கப்படும், மற்றும் 35 வயதுக்கு குறைவாக இருக்க வேண்டும், முக்கியமாக இந்த வேலைக்கு மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று அறிவிப்பின் மூலம் நமக்கு தெரிய வருகிறது.

கவனிக்க: இதற்கான விண்ணப்பத்தை எங்களுடைய வலைதளத்திலும் நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், மயிலாடுதுறை அதிகாரப்பூர் (https://mayiladuthurai.nic.in/) வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், அல்லது மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறு விண்ணப்பிப்பது?

மயிலாடுதுறையில் வெளியிடப்பட்ட இந்த மகளிர் உரிமைத்துறை வேலைக்காக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட சமூகநல அலுவலகம், 3/264 குமரன் தெரு, சீனிவாசபுரம் மயிலாடுதுறை – 609 001 என்ற முகவரிக்கு வரும் 31/10/2023 அன்று மாலை 5:45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு இந்த தொலைபேசி 04364-212429, எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Mayiladuthurai District OSC Center Recruitment Pdf

Mayiladuthurai District OSC Center Recruitment 2023, 13 Posts!! Religion Jobs Paying 6,500- to 30,000/-
Mayiladuthurai District OSC Center Recruitment 2023, 13 Posts!! Religion Jobs Paying 6,500- to 30,000-

உங்களோடு சில வார்த்தை!

நாங்கள் மயிலாடுதுறையில் வெளிவந்த இந்த வேலை வாய்ப்பு பற்றிய தெளிவான விளக்கத்தை வழங்கியிருப்போம் என்ற நம்பிக்கையோடு உங்களிடமிருந்து விடைபெறுகிறோம். மேலும் அடுத்த வேலை வாய்ப்பை பற்றிய தெளிவான விளக்கங்களை சேகரிக்க நாங்கள் செல்ல வேண்டி இருப்பதால் இத்துடன் இந்த கட்டுரையில் விடைபெறுகிறோம் நீங்கள் உங்கள் சுற்றத்தாருக்காகவும் இதனை பகிருங்கள்.

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment