மிகவும் பிரபலமான என்எல்சி இந்தியா லிமிடெட் – Neyveli Lignite Corporation (NLC) நெய்வேலியில் புதிதாக 901 அப்ரண்டீஸ் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- Fitter
- Turner
- Mechanic (Motor Vehicle)
- Electrician
- Wireman
- Mechanic (Diesel)
- Mechanic (Tractor)
- Carpenter
- Plumber
- Stenographer
- Welder
- PASAA
இந்த காலிப் பணியிடங்களுக்கு ஐடிஐ முதல் டிகிரி முடித்தவர்கள் வரை அனைவரும் விண்ணப்பிக்கலாம், மேலும் ஒரு வருட காலத்திற்கு இந்த பணி காலம் நீட்டிக்கப்படும்.
இந்த பணிக்கு நீங்கள் 16/11/2022 க்குள் விண்ணப்பிக்க வேண்டும், (நேரிலோ (அ) தபால்) இது சம்பந்தமான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது, அந்த அறிவிப்பில் இருந்து உங்களுக்காக சேகரிக்கப்பட்ட தகவல்களை தமிழ்மொழியில் வழங்க உள்ளோம்.
நீங்கள் குறைந்த வயதில் ஒரு சிறந்த அப்ரண்டீஸ் பயிற்சியை பெற வேண்டுமென்று நினைத்தால் கட்டாயம் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம், மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் என்று அழைக்கப்படக்கூடிய என்.எல்.சி-யில் இந்த வேலை வாய்ப்பானது வெளியிடப்பட்டுள்ளது.
இது சம்பந்தமான தகவல்களை தெளிவாக தெரிந்துகொண்டு இதற்கு விண்ணப்பிக்க துவங்குங்கள், மேலும் உங்கள் நண்பர்கள் ,உறவினர்கள் மற்றும் சுற்றத்தாருக்கு பகிருங்கள்.
இதற்கு மாத சம்பளம் வழங்கப்படும் மற்றும் சிறந்த சர்டிபிகேட் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது, சம்பந்தமான தகவல்களை தொடர்ந்து வலைதளத்தில் காணலாம்.
இந்த வேலைக்கு கல்வித் தகுதி என்ன?
இந்த வேலைக்கான கல்வி தகுதியை பொருத்தவரை நாம் ஆரம்பத்தில் பேசியது போல் ஐடிஐ முடித்தவர்கள் முதல் பட்டதாரி இளைஞர்கள் வரை நீங்கள் விண்ணப்பிக்க முடியும், அது சம்பந்தமான படிப்பு சார்ந்த விவரங்களை கீழே காணுங்கள்.
ITI, B.com, B.sc (cs), BCA, BBA, B.sc (Geology)
மேலும் இது சம்பந்தமான கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழ் மொழியில் உங்களால் படித்து பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலைக்கான ஊதியம் எவ்வளவு?
இது ஒரு அப்ரண்டீஸ் வேலை இது உங்களுக்கு ஒரு வருட கால பயிற்சி அளிப்பதன் மூலம் வருங்காலத்தில் ஏதேனும் நிரந்தர பணிக்காக இது உதவியாக இருக்கும், இருந்தபோதும் தற்போது உத்தரவாதம் இல்லை.
இந்த அப்ரண்டீஸ் பணி கெட்டு 8,766/-, தொடங்கி 10,019/-, 12,524/- ஊதியம் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது, எனவே இதைத் தெளிவாக தெரிந்துகொண்டு ஆர்வத்துடன் விண்ணப்பியுங்கள், அதற்கான கல்வித் தகுதி உங்களிடம் இருந்தால் போதுமானது, மேலும் இதற்கான கூடுதல் விளக்கங்கள் நோக்கி நாம் பயணிக்கலாம்.
விவரம் | அறிவிப்பு |
---|---|
அறிவிப்பு | SSC |
துறை | மத்திய அரசு என்எல்சி இந்தியா லிமிடெட் |
பணி | 901 |
சம்பளம் | Rs. 8,766/- to Rs. 12,524/- |
இணையதளம் | nlcindia.in |
கடைசி தேதி | 16/11/2022 |
வேலை இடம் | நெய்வேலி |
தேர்வு முறை | ஆவண சரிபார்ப்பு, நேர்காணல் |
பதிவுமுறையை | (Offline) மூலமாக |
முகவரி | பொது மேலாளர்கள் மற்றும் மேம்பாட்டு மையம் என்.எல்.சி இந்தியா நிறுவனம் வட்டம் 20, நெய்வேலி – 607803 |
காலிப்பணியிடங்களின் விவரங்கள்?
மொத்தமாக இந்த வேலைக்கு 901 காலி பணியிடங்கள் உள்ளது, அதை பற்றி நாம் கட்டுரையின் ஆரம்பத்தில் விவாதித்தோம்.
இருந்தபோதும் இதில் (டிரேட் அப்ரண்டிஸ்)பயிற்சி பிரிவில் மொத்தம் 728 காலி பணியிடங்கள் உள்ளன, அடுத்த கட்டமாக பொறியியல் அல்லாத பட்டதாரி அப்ரண்டிஸ் பயிற்சி பிரிவில் 173 காலிப்பணியிடங்கள் உள்ளன.
மற்ற காலிப்பணியிடங்களின் பிரிவை கீழே நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம், (NLC)Announcement 2022 பார்ப்பதன் மூலம் அதிகப்படியான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்த பகுதியிலேயே படித்துப் பார்க்கும், பதிவிறக்கம் செய்யக்கூடிய வாய்ப்பும் உங்களுக்கு கிடைக்கும், விண்ணப்பம் சார்ந்த சில தகவல்களும் அடங்குகின்றது, அதையும் உங்களுக்காக நாங்கள் சிறந்த முறையில் தொகுத்து வழங்கி இருக்கிறோம் என்பதை உங்களுக்கு உறுதியளிக்கிறோம்.
வயது வரம்பு என்ன?
இதை கேட்கும்போது நீங்கள் கட்டாயம் ஆச்சரியப்படுவீர்கள், இந்த வேலைக்கான வயது வரம்பை பொருத்தவரை 14 வயது உடையவர்கள் வரை நீங்கள் விண்ணப்பிக்க முடியும், அதாவது 01/10/2022 அன்று அடிப்படையில் நீங்கள் 14 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
இதற்கு முன் பயிற்சி பெற்றவர் அல்லது தற்சமயம் பயிற்சி அடிப்படையில் இருப்போர் மீண்டும் பயிற்சி பெற தகுதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
அதோடு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்றும் அந்த NLC அறிவிப்பின் மூலம் நம்மால் பார்க்க முடிகிறது, எனவே இந்த விஷயத்தை தெளிவாக கொண்டு விண்ணப்பிக்க துவங்குங்கள்.
இந்த வேலை தேர்வு முறை எப்படி இருக்கும்?
இந்த வேலைக்கான தேர்வு முறையைப் பொறுத்த வரை உங்கள் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு நேர்காணல் மூலம் உங்களுக்கு இந்த வேலை வழங்கப்படும்.
விண்ணப்பப் படிவம்?
விண்ணப்பபடிவம் 02/11/2022 காலை 10 மணி முதல் 11/11/2022 அன்று மாலை 5 மணிக்குள் அதிகாரபூர்வ வலை தளமான என்எல்சி nlcindia.in என்ற இணையதளத்தில் (ஆன்லைன் ரிஜிஸ்ட்ரேஷன்) பார்மில் பூர்த்தி செய்து விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும், கையொப்பமிட்ட விண்ணப்பத்துடன் விண்ணப்பிக்கும் முறை பற்றி கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விஷயங்களையும் இணைக்க வேண்டும்.
மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெளிவாக இது சம்பந்தமான ஆவணங்கள் பற்றிய விவரங்கள் உள்ளது, இணைக்க வேண்டிய ஆவணங்கள் அனைத்தையும் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் நீங்கள் இணைத்து அனுப்ப வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
நேரடியாகச் சென்றும் கூட நீங்கள் கலெக்ஷன் பாக்ஸில் இதை விட முடியும், அது காண முகவரி: பொது மேலாளர்கள் மற்றும் மேம்பாட்டு மையம் என்.எல்.சி இந்தியா நிறுவனம் வட்டம் 20, நெய்வேலி – 607803
எவ்வாறு இந்த வேலைக்கு விண்ணப்பிப்பது?
இந்த வேலைக்கு விண்ணப்பிப்பது பற்றிய குழு விளக்கத்தையும் அதிகாரபூர்வ அறிவிப்பு மூலமாக தமிழ் மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
எனவே தயக்கமின்றி நீங்கள் அதைப் படித்து தெரிந்து கொள்ளலாம், நீங்கள் விண்ணப்பிப்பதற்கான முழு விபரமும் அங்கு உங்களால் பார்க்க முடியும்.
இருந்த போதும், அதில் மதிப்பெண் பட்டியல், மாற்று சான்றிதழ், சாதி சான்றிதழ், முன்னாள் ராணுவ வீரர் வாரிசு சான்றிதழ், மாற்றுத் திறனாளி சான்றிதழ் போன்ற விவரங்களையும் சேர்த்து இணைத்து பதிவு செய்வதற்காக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இதை தபால் மூலம் நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும், நாம் மேலே பார்த்த அனைத்தையும் நகலெடுத்து 16/11/2022 மாலை 5 மணிக்குள் தபால் மூலமாக அல்லது கீழ்க்கண்ட முகவரியில் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள கலசன் பாக்ஸ் அதாவது (சேகரிப்பு பெட்டியில்) நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும், அந்த முகவரியை நீங்கள் கீழே காணலாம்.
முகவரி: பொது மேலாளர்கள் மற்றும் மேம்பாட்டு மையம் என்.எல்.சி இந்தியா நிறுவனம் வட்டம் 20, நெய்வேலி – 607803
(NLC)Announcement Apprenticeship Result
மேலும் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தில் ஏதேனும் குறை இருந்தால் அது நிராகரிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட அடிப்படையில் பயிற்சி தேர்வு செய்யப்பட்டு கற்றல் மற்றும் மேம்பாட்டு மையத்தின் தகவல் பலகையில் மற்றும் இணையதளத்திலும் 28/11/2022 தேதியில் உங்களுக்கான ரிசல்ட் அதாவது அறிவிப்பு வெளியிடப்படும்.
(NLC) Apprenticeship Pdf
[dflip id=”3447″ ][/dflip]
முக்கியமான பிற தகவல்கள்:
non engineering graduate அப்ரண்டிஸ் பயிற்சி விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பத்துடன் +12வில் பெற்ற மதிப்பெண் சான்றிதழ் மற்றும் டிகிரி சர்டிபிகேட் நகல் ஆகியவற்றை படிவத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
ஐடிஐ பயிற்சி முடித்த பயிற்சியாளர்கள் விண்ணப்ப படிவத்துடன் ஐடிஐ மதிப்பெண் சான்றிதழ் மற்றும் PNTC/NTC சான்றிதழ்களையும் விண்ணப்பத்துடன் அவசியம் இணைத்து அனுப்பவேண்டும்.
BC/MBC சான்று உள்ளவர்கள் OBC பிரிவின் கீழ் இட ஒதுக்கீடு பெற OBC சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும், BC/MBC சான்றிதழ்களை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
என்எல்சி நிரந்தர வேலை வாய்ப்பின் உத்தரவாதம் எதுவும் இல்லை என அறிவிக்கப்படுகிறது, வெளியூர் பயிற்சியாளர்களுக்கு விடுதி வசதி இருப்பில் உள்ள வீடுகளில் காலியிடங்களுக்கு ஏற்ப என்எல்சியில் நிபந்தனைகள் கீழ் வழங்கப்படும்.
M Raj (Mohan Raj) is an expert in crafting informative articles, specializing in education updates and detailed job postings. With a keen eye for detail, Mohan Raj provides readers with accurate and up-to-date information.