இப்போது வெளியான தென்காசி மாவட்ட TNSRLM அரசு வேலைவாய்ப்பு, பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
தென்காசி மாவட்டம் வட்டார இயக்க மேலாளர் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் களுக்கான காலி பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் தகவல் வெளியாகி உள்ளது.
- Block Co-ordinator
- Block Mission Manager
இந்த ந.க.எண்: அ1/174/2022 அறிவிப்பின் அடிப்படையில் பெண்களுக்கு ஒரு நிரந்தர அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
அதாவது இதன் விரிவான விளக்கத்தை நாம் படித்து பார்க்கும் போது, ஆரம்பத்தில் இது ஒப்பந்த அடிப்படையில் வேலை வழங்கப்பட்டாலும், விண்ணப்பதாரரின் வேலைத் திறனையும், நன்னடத்தையும் பார்த்து தொடர்ந்து பணி வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை நம்மால் பார்க்க முடிகிறது.
மேலும் தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அல்லது தென்காசி மாவட்டத்தில் குடியிருப்பவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிப்புகள் மூலம் நமக்குத் தெரிய வருகிறது.
எனவே இந்த வேலை சம்பந்தமான விளக்கங்கள் தெளிவாக நாம் பார்க்கப் போகிறோம் தமிழ் மொழியில், இதற்கான அனைத்து தகவல்களை தெரிந்து கொண்டு தபால் மூலம் இந்த வேலையை விண்ணப்பிக்க துவங்கலாம்.
இதுபோன்ற தகவல்களை நாங்கள் அவ்வப்போது வழங்கி வருகிறோம், எனவே தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் நீங்களும் ஒருவராக இருந்தால் நிச்சயம் இந்த பணிக்கு விண்ணப்பியுங்கள்.
அல்லது சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்கு இந்த கட்டுரை உதவியாக இருக்கும், ஆகையால் வாட்ஸ்அப் குரூப்பில் பகிர மறக்காதீர்கள்.
இந்த வேலைக்கான கல்வித் தகுதி என்ன?
வேலை கல்வித்தகுதியை பொருத்தவரை நாம் 2 விதமான வேலைகளை இதில் பார்க்கிறோம், இதில் முதல் வேலையானது வட்டார இயக்க மேலாளர் இதற்கு 3 பணியிடங்கள் உள்ளது.
அடுத்தது வட்டார ஒருங்கிணைப்பாளர் இதற்கு மொத்தம் 24 பணியிடங்கள் காலியாக உள்ளது, எனவே மொத்தமாக நாம் 27 காலிப்பணியிடங்களை பார்க்கிறோம்.
அப்படி என்றால் நாம் ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியான வயது வரம்பை பார்க்க முடியும், தகுதியை பார்க்கமுடியும், அதாவது இரண்டு பணியிடங்களுக்கும் தனித்தனி தேவைகள் இருக்கும்.
இதில் பிளாக் கோ-மேனேஜர் (Block Co-ordinator) அதாவது வட்டார இயக்க மேலாளர் என்ற பணிக்கான கல்வித் தகுதி ஏதேனுமொரு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த வராகவும்.
மற்றும் எம்எஸ் ஆபீஸ் MS-Officeஇல் குறைந்தபட்சம் 6 மாதம் பணியாற்றி கணினி படித்ததற்கான சான்றிதழை பெற்றவராகவும் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அதேசமயம் (Block Mission Manager) வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மற்றும் எம்எஸ் MS-Officeஇல் குறைந்த பட்சம் ஆறு மாத காலம் பணியாற்றியிருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இரு வேலைக்கான கூடுதல் தகுதி?
அதாவது இந்த இரு வேலைகளுக்கும் வாழ்வாதார இயக்கம் துறை சார்ந்த திட்டத்தில் செயல்பாடுகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
அதேபோல் வாழ்வாதார இயக்கம் துறை சார்ந்த செயல்பாடுகளில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர்கள் இந்த வட்டார இயக்க மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரண்டு பணிகளுக்கும் இருக்கக்கூடிய, அதாவது மொத்தம் 27 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கூடிய நபர்கள் அதே மாவட்டத்தில் வசிக்க வேண்டும் என்பது கட்டாயம்.
அதாவது விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்ட அந்த வட்டாரத்தில் குடியிருப்போர் ஆக இருக்க வேண்டும் என்பது கட்டாயம், அந்த வட்டாரம் சம்பந்தப்பட்ட தகவல்களை நீங்கள் கீழே காணலாம்.
வட்டார இயக்க மேலாளர்: |
---|
குருவிகுளம் – 1 |
கடையநல்லூர் – 1 |
மேலநீலிதநல்லூர் – 1 |
வட்டார ஒருங்கிணைப்பாளர்: |
---|
சங்கரன்கோவில் – 4 |
மேலநீலிதநல்லூர் – 2 |
குருவிகுளம் – 3 |
கடையநல்லூர் – 3 |
வாசுதேவநல்லூர் – 2 |
தென்காசி – 1 |
செங்கோட்டை – 3 |
கீழப்பாவூர் – 2 |
கடையம் – 2 |
ஆலங்குளம் – 2 |
வயது வரம்பு என்ன?
2 வேலைக்கான வயது வரம்பை பொருத்தவரை 28 வயது அதிகபட்சமாக குறிப்பிடப்பட்டுள்ளது, இந்த வயது 01/07/2022 அடிப்படையில் கணக்கிடப்படும் என்றும் அறிவிக்கும் மூலம் நம்மால் பார்க்க முடியாது.
விவரம் | அறிவிப்பு |
---|---|
அறிவிப்பு | Tamil Nadu State Rural Livelihoods Mission (TNSRLM) |
துறை | தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் |
இணையதளம் | tenkasi.nic.in |
கடைசி தேதி | 20/10/2022 |
வேலை இடம் | தமிழ்நாடு, தென்காசி |
தேர்வு முறை | (நேர்காணல் & எழுத்து தேர்வு) |
பதிவுமுறையை | (Offline) மூலமாக |
முகவரி | தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியரகம் தென்காசி 627811 |
தேர்வு முறை எப்படி இருக்கும்?
இந்த வேலைக்கான தேர்வை பொருத்தவரை தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு எழுத்து தேர்வு முதலில் நடத்தப்படும், எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும் நேர்காணலுக்கு அழைப்பு வரும்.
அப்போது எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்-இல் எடுக்கப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஒரு வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
பணித் திறன் மற்றும் மதிப்பீட்டின் அடிப்படையில் தொடர்ந்து பணியில் ஈடுபடுவதற்கான ஒப்பந்த காலம் புதுப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, நான் மேலே குறிப்பிட்டது போல் இது ஒரு நிரந்தர அரசு வேலையாக மாறுவதற்கும் வாய்ப்பு இருக்கின்றது.
வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?
இந்த வேலைக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும், விண்ணப்பிக்க கூடிய விலாசத்தை நீங்கள் வலைதளத்தில் தொடர்ந்து பயணிக்கும் போது காணலாம்.
முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யுங்கள், அங்கு கேட்கப்பட்டிருக்கும் தகவல்களை தெளிவாக படித்து பார்த்து அந்த தகுதி உங்களுக்கு இருந்தால் நீங்கள் நிச்சயம் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்தை தெளிவாக படித்து பார்த்த பின்பு அந்த விண்ணப்பத்தில் கேட்கப்பட்டு இருக்கின்ற அனைத்து தகவல்களையும், அதாவது ஆறு மாத எம்எஸ் கணினி பயிற்சி கானது, அடுத்தது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு, வாழ்வாதார இயக்கம் துறை சார்ந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 2 அல்லது மூன்று ஆண்டுகள் அனுபவம் பெற்ற அதற்கான சான்று.
அனைத்தையும் இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள விலாசத்திற்கு உரிய நேரத்திற்குள் அனுப்புங்கள், அதாவது 20/10/2022க்கு முன்பாக அனுப்புங்கள், உங்கள் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு நேர்காணலுக்கு உங்களை அழைப்பார்கள்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியரகம் தென்காசி 627811 |
Tamil Nadu State Rural Livelihoods Mission Tenkasi Jobs Announcement (TNSRLM)
[dflip id=”2347″ ][/dflip]
கவனியுங்கள்:
இந்த தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகிலுள்ள இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான முயற்சியில் நீங்களும் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்.
- தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கம்
- தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் Explain Video
M Raj (Mohan Raj) is an expert in crafting informative articles, specializing in education updates and detailed job postings. With a keen eye for detail, Mohan Raj provides readers with accurate and up-to-date information.