கவனிக்க: திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் மூன்று காலி பணியிடங்கள் உள்ளது, இதில் ஒரு பணிக்கு எழுத படிக்க தெரிந்தவர்கள் கூட விண்ணப்பிக்கலாம், மேலும் இரண்டு காலி பணியிடங்களுக்கு இளங்கலை பட்டம், சமூக பணியில் தேர்ச்சி பெற்றவர் விண்ணப்பிக்கலாம், இது சம்பந்தமான கூடுதல் விவரங்கள் தான் இந்த வலைதள கட்டுரை.
திருவாரூர் மாவட்ட வேலையவாய்ப்பு பத்திரிக்கை செய்தி:
சமூக நலன் மற்றும் மகளிரின் உரிமைதுறையின் கீழ் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவம் வளாகத்தில் 24 மணி நேரமும் இயங்கி வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு வழக்குப் பணியாளருக்கு இரண்டு (2) பணியிடமும், பல் நோய்க்கு உதவியாளர் பணியிடத்திற்கு ஒரு (1) பணியிடமும் முற்றிலும் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் பூர்த்தி செய்யப்பட உள்ளது.
எனவே திருவாரூர் மாவட்டத்தில் வசிக்கும் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது, இப்பதிக்கான மாதிரி விண்ணப்ப படிவம் திருவாரூர் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கவனிக்க: எங்களுடைய வலைதளத்திலும் கீழே திருவாரூர் அதிகாரப் வலைதளத்தையும், மற்றும் திருவாரூர் அரசு வேலைக்கான விண்ணப்ப படிவத்தையும் பதிவிறக்கம் செய்யக்கூடிய மற்றும் அணுகக் கூடிய வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
மகிழ்ச்சியாக சொல்கிறோம்! பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட சமூக அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக இணைப்பு கட்டிடம், தரைத்தளம், திருவாரூர் 613004 என்ற முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். அனுப்ப வேண்டிய இறுதி நாள் 31/10/2023 பிற்பகல் 5:45 மணிக்குள் அனுப்பி வைக்குமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வணக்கம் மக்களே! நீங்கள் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவராக இருந்தால் தற்போது இந்த பத்திரிக்கை செய்தி முழுமையாக படித்து பார்த்ததில் உங்களுக்கு கூடுதல் விளக்கங்கள் தெரிந்திருக்கும். ஆகையால் தற்போது நமது வலைத்தளத்தில் இது சம்பந்தமான கூடுதல் விவரங்கள், விண்ணப்பிக்கக்கூடிய வாய்ப்பு, கல்வித் தகுதி, வயதுவரம்பு போன்ற அனைத்து விஷயங்களையும் தெளிவாக பார்க்க உள்ளோம், வாருங்கள் பயணிக்கலாம்.
Tiruvarur District Dental Assistant and Case Worker Vacancy Details
அறிவிப்பு | truvarur.nic.in |
பதவி | பல் நோய்க்கு உதவியாளர் மற்றும் வழக்குப் பணியாளர் |
சம்பளம் | 6,400/- to 15,000/- |
காலியிடம் | 3 |
பணியிடம் | திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி |
தகுதிகள் | எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும், மற்றும் இளங்கலை பட்டம் |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 31/10/2023 |
திருவாரூர் மாவட்டத்தில் தற்போது வந்த அரசு வேலைக்கான தகுதி:
திருவாரூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெளியிடப்பட்ட சிறந்த வேலை வாய்ப்புகள், எழுத படிக்க தெரிந்தால் போதுமானது விண்ணப்பிக்கலாம்! இருந்த போதும் தனித்தனியாக கீழே காணலாம் வாருங்கள்:
கட்டுரையில் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல் பல் நோய்க்கு உதவியாளர் பணிக்கு நீங்கள் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. ஆனால் வழக்கு பணியாளர் பணியிடத்திற்கு நீங்கள் இளங்கலை பட்டம், மற்றும் சமூக பணியில் தேர்ச்சி பெற்றிருந்தால் விண்ணப்பிக்கலாம், கூடுதல் விவரங்கள் கீழே உங்களுக்கு கட்டுரையில் கிடைக்கும்.
திருவாரூர் மருத்துவக் கல்லூரி காலி பணியிடங்கள்:
இதற்க்கு மொத்தமாக மூன்று (3) காலி பணியிடங்கள் இருக்கின்றது, இந்த மூன்று காலி பணியிடங்களுக்கான விளக்கத்தையும் தெளிவாக காணலாம் வாருங்கள்:
காலிப் பணியிடம் வேலைக்கான காலி பணி இடத்தை பொருத்தவரை ஆரம்பத்தில் கூறிவிட்டும் வழக்குப் பணியாளர் எனக் கூடிய பணிக்கு இரண்டு (2) காலிப்பணியிடங்களும், பல் நோய்க்கு உதவியாளருக்கு ஒரு (1) காலிப்பணியிடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதி வாய்ந்த நபர்கள் கட்டாயம் கூடுதல் தகவல் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.
திருவாரூர் மருத்துவமனையில் வெளியிடப்பட்ட வேலைக்கான ஊதியம் எவ்வளவு?
திருவாரூர் அரசு வேலைக்கான சம்பளத்தை பொறுத்தவரை வழக்கு பணியாளர் எனும் இரண்டு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டால் அதற்க்கு 15,000/- மாத தொகுப்பு பதிவாக வழங்கப்படும். மேலும் பல் நோய்க்கு உதவியாளருக்கு ஒரு பணியிடம் நிரப்பப்பட்டு அதுக்கு 6,400/- தொகுபதியுமாக வழங்கப்படும்.
திருவாரூர் அரசு வேலைக்கான தொகுப்பூதியம் என்றால் என்ன?
தொகுப்பு என்பது குறுகிய காலத்திற்கு வழங்கப்படும் வேலைக்கு அந்த காலம் முடியும் வரை வழங்கும் ஊதியமே (சம்பளம்) தொகுப்பூதியம் எனப்படுகிறது.
திருவாரூர் மருத்துவக் கல்லூரி வேலைக்கான தகுதி என்ன?
திருவாரூர் மாவட்டத்தில் வெளியிடப்பட்ட இந்த வேலைக்கான தகுதியை பொருத்தவரை இரண்டு வேலைக்கும் தனிதனி தகுதிகள் கேட்கப்பட்டுள்ளது:
வழக்கப் பணியாளருக்கு விரும்பத்தக்க தகுதிகள்:
அதில் முதல் வேலையான வழக்குப் பணியாளர் வேலைக்கு இளங்கலை பட்டம் சமூக பணியில் தேர்ச்சி பெற்ற வேண்டும், ஒரு வருட அனுபவம் வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- கணினி, இணையதள பயன்பாடு.
- தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு பயிற்சியில் தேர்ச்சி.
- இரண்டு சக்கர வாகன ஓட்டுனர் உரிமம்.
பல்நோக்கு உதவியாளர் பதவிக்கு விரும்பத்தக்க தகுதிகள்:
அடுத்த கட்டமாக பல்நோக்கு உதவியாளர் பணிக்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் மற்றும் சமையல் பணியில் முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும், அரசு மருத்துவர்களிடம் உடல் தகுதி சான்று பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- அலுவலகத்தில் பணிபுரிந்து அனுபவம்.
- இட்டப் பணிகளை கையாள தெரிந்திருக்கும் திறன்.
கவனிக்க: இரண்டு வேலைகளுக்கும் பணி நேரத்தை பொறுத்தவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டப்பட்டி, பகல் மற்றும் இரவு சுழற்சி முறையில் பணி புரிதல் வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைக்கான வயது வரம்பு:
இந்த வேலைக்கான வயது வரம்பை பொறுத்தவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு குறிப்பிடப்படவில்லை. எனவே நீங்கள் நேர்க்கானலுக்கு செல்லும் போது அது பற்றி தெரிந்து கொள்ளலாம்.
திருவாரூர் அரசு வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?
இந்த வேலையை பொறுத்தவரை எப்படி விண்ணப்பிப்பது என்பது கட்டுரையின் ஆரம்பத்தில் பத்திரிக்கை செய்தியில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்ததை கொடுத்துவிட்டோம். இருந்தபோதும் சுருக்கமாக கூறுகிறோம்.
நீங்கள் உங்களுடைய ஆவணங்கள் அனைத்தையும் சுயசான்றோப்பமிட்டு சரியான முறையில் இணைக்க வேண்டும், இணைக்கப்பட்ட நகலுடன் அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்து விரைவு தபால் மூலம் 31/10/2023 பிற்பகல் 05:45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: சமூக அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக இணைப்பு கட்டிடம் தரைத்தளம், திருவாரூர் – 613 004 என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலம் அனுப்புங்கள்.
கூடுதல் வேலைவாய்ப்பு: திருவாரூர் மாவட்டத்தில் மூன்று (3) அரசு உதவியாளர் பணியிடங்கள்!!
இத விளக்கங்கள்:
கூடுதல் விளக்கங்களை பொறுத்தவரை கூடுதலான விளக்கங்களை நம்மால் அறிவிப்பில் பார்க்க முடியவில்லை. இருந்தபோதும் நீங்கள் தேர்வு செய்யப்பட்டால் உங்களுக்கு அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
மேலும், நீங்கள் நேரிலோ தபால் மூலமாகவோ விண்ணப்பிக்க முடியும். அதோடு உள்ளூரை சேர்ந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு என்பதால் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்கும் போது நேரிலேயே சென்று கூடுதல் விளக்கங்களை தெரிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பொறுப்பு: மேலே படித்த கூடுதல் மற்றும் இதர விளக்கங்கள் நாங்களாக கூறிய கருத்து ஆகும், அது பொதுவான கருத்துமட்டுமே.
JobsTn M Raj is very proficient in article writing job-related vacancy details posts.