திருவாரூர் மாவட்டத்தில் மூன்று (3) அரசு உதவியாளர் பணியிடங்கள்!! எட்டாம் வகுப்பு முதல் விண்ணப்பிக்கலாம்!!

Follow Us
Sharing Is Caring:

அறிவிப்பு: திருவாரூர் மாவட்ட ஒன்றிய தலைப்பில் உள்ள 3 அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு நேரடிநியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளதால், திருவாரூர் மாவட்டம் ஒன்றிய தலைப்பில் 31/03/2021 வரை ஏற்பட்டுள்ள மூன்று அலுவலக உதவியாளர் காளி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுவதற்கான தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்க்கு 27/10/2023 மாலை 5:45 மணிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.


திருவாரூர் மாவட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள (வலங்கைமான் ஊராட்சி ஒன்றியம்) அரசு அலுவலக உதவியாளர் பணியிடங்களின் முழு விவரம் தான் இந்த வலைதள கட்டுரை. ஆம் திருவாரூர் மாவட்ட அரசு அறிவிப்பின் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்களை தெளிவான முறையில் தமிழ் மொழியில் உங்களுக்கு தொகுத்தவும் வழங்க உள்ளோம்.

எனவே இது பற்றிய கூடுதல் விளக்கங்களை தெரிந்து கொண்டு நீங்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம், மேலும் எட்டாம் (8tn) வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்பது கூடுதல் சிறப்பம்சம் என்பதால் கட்டாயம் இதைப் பற்றி நீங்கள் சற்று பரிசீலிக்கலாம்.

ஆகையால் தயவுசெய்து இந்த கட்டுரையை முழுமையாக படித்து பயன்பெறுமாறும், மேலும் மற்றவர்களுக்கு பகிருமாறு உங்களை கேட்டுக்கொள்கிறோம்.


Government Office Assistant Vacancies under Tiruvarur District Union

அறிவிப்புtiruvarur.nic.in
பதவிஅரசு அலுவலக உதவியாளர்
சம்பளம்15,700/- to 50,000/-
காலியிடம்3
பணியிடம்திருவாரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியம்
தகுதிகள்8ம் வகுப்பு
விண்ணப்பிக்க கடைசி தேதி27/10/2023

திருவாரூர் மாவட்ட வலங்கைமான் ஊராட்சி வேலையின் விதம்:

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

திருவாரூர் மாவட்ட அரசு அறிவிப்பின் அடிப்படையில் ஒன்றிய தலைப்பில் மூன்று (3) அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது, மூன்றுமே அலுவலக உதவியாளர் பணியிடம் என்பது குறிப்பிடத்தக்கது.

திருவாரூர் அலுவலக உதவியாளர் வேலைக்கான வயது வரம்பு:

வேலைக்காக தான் வயது வரம்பு பொறுத்தவரை ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ளது, அதை தெளிவாக கீழே காணுங்கள்:

  • பொது பிரிவினருக்கான வயதுவரம்பு: 18 பூர்த்தியடையும் 35 வயதிற்கு மிகையகமலும் இருக்க வேண்டும்.
  • மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (மற்றும் சீர்மரபினர்): 8 பூர்த்தியடையும் 36 வயதிற்கு மிகையகமலும் இருக்க வேண்டும்.
  • பிற்படுத்தப்பட்டோர் (பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் தவிர): 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும், 36 வயதிற்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
  • ஆதிதிராவிடர் (அருந்ததியினர் முன்னுரிமை அடிப்படையில்): 18 வயது பூர்த்தி அடைந்து, 37 வயதுக்கு மிகவும் இருக்க வேண்டும்.

கவனிக்க: பொதுவாக 18 வயது முதல் 37 வயது தாண்டாமல் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

திருவாரூர் மாவட்ட அலுவலக உதவியாளர் வேலைக்கான கல்வி தகுதி என்ன?

திருவாரூர் மாவட்டத்தில் வெளியான அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்புக்கு மூன்று பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது, அதனை நாம் பார்த்தோம், தற்போது இதற்கான கல்வி தகுதியை பற்றி பேசும்போது எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்-ஆக இருந்தால் விண்ணப்பிக்க முடியும். எனவே எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவருமே இந்த வேலைக்கு விண்ணப்பித்து வேலை வாய்ப்பு பெற முடியும்.

திருவாரூர் அரசு அலுவலக உதவியாளர் வேலைக்கான நிபந்தனைகள்:

  • விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி, இருப்பிடம், முன்னுரிமை சான்று ஆகியவளுக்கு ஆதாரம் இணைத்து அனுப்ப வேண்டும்.
  • இன சுழற்சி வயது மற்றும் கல்வி தகுதியற்ற நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  • அரசு விதிகளின்படி இன சுழற்சியை முறையை பின்பற்றி பணி நியமனம் மேற்கொள்ளப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் நாளில் 01/01/2023 தேதியின் அடிப்படை 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

கவனிக்க: தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அரசாணை நிலை எண்: 303 நிதி ஊதியக்குழு, துறை நாள் 11/10/2017 அடிப்படையில் 15,700/- முதல் 50,000/- வரை மெட்ரிக் லெவல் 1 (Pay matrix Level-1) அடிப்படையில் ஊதியமும் மற்றும் இதர படிகளும் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வலங்கைமான் ஊராட்சி அரசு வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

உங்களுடைய உரிய ஆவணங்களுடன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்று மற்றும் நகலுடன் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பின்னர் அரை என் 60, மாவட்ட ஆட்சியரகம் (வளர்ச்சி பிரிவு), மாவட்ட ஆட்சியரகம், திருவாரூர் மற்றும் வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ 27/10/2023 பிற்பகல் 5:45 மணிக்குள் அனுப்ப வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கவனிக்க: முக்கியமாக காலம் கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று திருவாரூர் அரசு வேலை வாய்ப்பு அறிவிப்பில் நம்மால் பார்க்க முடிகிறது.

திருவாரூர் அலுவலக உதவியாளருக்கு நேர்முகத்தேர்வு எப்போது?

தகுதியுள்ள நபர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு, நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்த நேர்காணல் கடிதமானது பின்னர் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகையால் உங்கள் ஆவணங்களை தெளிவான முறையில் இணைத்து அனுப்ப மறக்காதீர்கள்.

Tiruvarur District Office Assistant Jobs!! Apply from 8th class onwards!!
Tiruvarur District Office Assistant Jobs!! Apply from 8th class

கூடுதல் வேலைவாய்ப்பு: திருவாரூர் மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி வேலைவாய்ப்பு!!

முக்கிய குறிப்பு: அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களுக்கான விபரங்கள் மற்றும் மாதிரி விண்ணப்பப்படிவம் திருவாரூர் மாவட்ட ஆட்சியரகம் வளர்ச்சி பிரிவு விளம்பர பலகையில்யும், மற்றும் வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாக விளம்பர பலகையிலும் மற்றும் திருவாரூர் மாவட்ட அரசு (https://tiruvarur.nic.in/) வலைத்தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது (எங்களுடைய JobsTn தளத்திலும் பதிவிறக்கலாம்). நீங்கள் சுலபமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

Sharing Is Caring:

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment