விருதுநகர் மாவட்டத்தில் 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு அலுவலக உதவியாளர் வேலை!!

அறிவிப்பு: விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய தலைப்பில் காலியாக உள்ள மூன்று (3) அலுவலக உதவியாளர் பணியிடங்களை நேரடியாக நியமனம் செய்ய தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு மூலம் ஒன்றிய தலைப்பு அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களுக்கு நேரடியாக பணி நியமனம் வழங்கப்பட உள்ளது. இந்த பணி நியமனம் பற்றிய தெளிவான விளக்கங்கள் தான் இந்த கட்டுரை.

விருதுநகர் மாவட்டத்தில் வெளியான இந்த வேலை வாய்ப்புக்கான இறுதி தேதியானது 31/10/2023 ஆகும் நீங்கள் 11/10/2023 முதல் உங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். சமர்ப்பிக்க வேண்டிய விலாசம், கல்வி தகுதி, ஊதியம் போன்ற அனைத்தையும் தெளிவாக பார்க்க உள்ளோம் வாருங்கள் கட்டுரை தொடர்ந்து பயணித்து விருதுநகர் அரசு வேலைவாய்ப்பு பற்றிய விளக்கங்களை பார்க்கலாம்.

Office Assistant Post Notification – Rajapalayam Block


Virudhunagar Office Assistant Vacancy Details

அறிவிப்புvirudhunagar.nic.in
பதவிஅரசு அலுவலக உதவியாளர்
சம்பளம்15,700/- to 50,000/-
காலியிடம்3
பணியிடம்ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில்
தகுதிகள்8ம் வகுப்பு
விண்ணப்பிக்க கடைசி தேதி31/10/2023

அரசு அலுவலக உதவியாளர் வேலைக்கான காலிப்பணியிடங்கள்:

வேலைக்கான காலி பணியிடங்களை பொறுத்தவரை அலுவலக உதவியாளர் வேலைக்கு மூன்று (3) காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது, இது விருதுநகர் மாவட்ட அலுவலக உதவியாளர் பணி என்பது குறிப்பிடத்தக்கது, இது விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் கிடைக்கக்கூடிய பணி என்பது குறிப்பிடத்தக்கது.

விருதுநகர் அலுவலக உதவியாளர் வேலைக்கான ஊதியம்:

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

இந்த அரசு அலுவலக உதவியாளர் வேலைக்கான ஊதியத்தைப் பொறுத்தவரை 15,700/- முதல் 50,000/- வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, நீங்கள் அறிவிப்பு பார்க்கும்போது மேலும் தெரிந்து கொள்ளலாம்.

விருதுநகர் அலுவலக உதவியாளர் வேலைக்கான கல்வி தகுதி:

அரசு அலுவலக உதவியாளர் கல்வி தகுதி பொருத்தவரை எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம், மேலும் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விருதுநகர் வேலைக்கான இன சூழ்ச்சி முறை:

மூன்று காலிபணியிடங்களுக்கு மூன்று இன சுழற்சி முறையில் உங்களால் காண முடியும்:

அதில் பொதுப்போட்டி (முன்னுரிமை பெற்றவர்) 1. ஆதிதிராவிடர் (முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினர்) பெண், ஆதரவற்ற விதவையில் 1. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் (முன்னுரிமை பெற்றவரில்) ஒன்று (1) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வயதுவரம்பு:

வயது வரம்பு பொருத்தவரை ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனி வயதுவரம்பு குறிப்பிடப்பட்டுள்ளது:

 • பொது பிரிவில் 18 வயது முதல் 32 வயது வரை இருக்க வேண்டும்.
 • பிற்படுத்தப்பட்டோருக்கு 18 வயது முதல் 34 வயது வரை இருக்க வேண்டும்.
 • மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 18 வயது முதல் 34 வயது வரை இருக்க வேண்டும்.
 • ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கு 18 வயது முதல் 37 வயது இருக்க வேண்டும் என்று குறிப்பிடத்தக்கது.
 • ஆதரவற்ற விதவைக்கு 37 வயது அதிகபட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு சலுகைகள்:

வயது வரம்பு சலுகைகளை பொறுத்தவரை நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்புக்குமேல் பத்தாண்டு வரை வயதுவரம்பு சலுகை பெற தகுதியுடையவராக தமிழ்நாடு அரசு பணியாளர்கள் பணி நியமன சட்டம் 2016 பிரிவு 64-ல் குறிப்பிட்டுள்ளவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் முன்னாள் ராணுவத்தினர் போன்ற பறக்கும் வயதுவரம்பு சலுகைகள் உள்ளது.

விருதுநகர் அரசு அலுவலக உதவியாளர் வேலைக்கான அறிவுரைகள்:

 • அனைத்து சான்றுகளும் நகலுடன் சுய சான்றோப்புமிட்டு இணைத்து அனுப்ப வேண்டும், எக்காரணம் கொண்டும் அசல் சான்றுகளை இணைக்க கூடாது.
 • விண்ணப்பங்களை 11/10/2023 முதல் 31/10/2023 பிற்பகல் 5:45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
 • காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
 • முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் தகுதியற்ற கல்வி, வயது ன்றவர்களை கொண்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
 • நேர்காணலுக்கு வரும் விண்ணப்பதாரர்களுக்கு பயணப்படி கிடையாது.
 • இன சூழ்ச்சி முறையை பின்பற்றி நிபந்தனைகள் மேற்கொள்ளப்படும்.
 • நேர்முக தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்த விவரங்கள் நேர்காணல் கடிதம் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

முக்கியமானது: முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளுடன் அஞ்சல் உரையில அனுப்ப வேண்டும், மேலும் 25 ரூபாய் மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டி சுய விலாசம் இட்ட ஒப்புகை அட்டையுடன் அஞ்சல் உரையிடனும் இணைக்கப்பட வேண்டும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதை பின்பற்றுதல் அவசியம்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: ஆணையாளர் ஊராட்சி ஒன்றியம் ராஜபாளையம் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது பதிவு தபால் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.

Direct Recruitment: Office Assistant Vacancies in Virudhunagar
Direct Recruitment: Office Assistant Vacancies in Virudhunagar

Application Pdf of Direct Recruitment for 3 Office Assistant Vacancies in Virudhunagar

கவனிக்க: விருதுநகர் அரசு அலுவலக உதவியாளர் வேலைக்கான வெளியிடப்பட்ட வேலை வாய்ப்புக்கான விண்ணப்ப படிவம், மற்றும் அரசாங்க அறிவிப்புக்கு கிழே உள்ள பொத்தானை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


கூடுதல் வாய்ப்பு:

சில விஷயங்களை விவாதிப்போம்:

நீங்கள் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவராக இருந்தால் கட்டாயம் இந்த கட்டுரையை உங்களுக்கு நல்ல பலன் நிலைத்திருக்கும், அதோடு அரசாங்க வேலைகளுக்கு ஆர்வமாக உள்ளவர்களுக்கும் இது ஒரு நல்ல கட்டுரையாக அமையும்.

மேலும் எட்டாம் வகுப்பு படித்தவர்கள் முதல் விண்ணப்பிக்க கூடிய அரசு வேலையாக இது இருக்கும் காரணத்தினால் அனைவருக்கும் பலன் அளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், அதனால் இந்த கட்டுரையை நாங்கள் அதிக நேரம் எடுத்துக்கொண்டு தெளிவான முறையில் எழுதி இருக்கிறோம்.

இருந்தபோதும், ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் தீர்த்து வைக்க நாங்கள் ஆவலுடன் இருக்கும் காரணத்தினால் கீழே கருத்து பெட்டியில் அந்த சந்தேகத்தை பதிவிடுங்கள், அதற்கான பதிலையும் விரைவில் கொடுப்போம்.

மேலும் இந்த கட்டுரையை உங்கள் சுற்றத்தாருக்கும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம், உங்கள் வருகைக்கு நன்றி தெரிவித்து விடைபெறுகிறோம் வணக்கம், அடுத்த கட்டத்தில் சந்திக்கிறோம்.

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment