திருப்பூர் மாவட்டத்தில் 14 அரசு ணியிடங்கள்!! இதில் பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கக்கூடிய 8 பணியிடங்கள்!!

Follow Us
Sharing Is Caring:

கவனிக்க: திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 14 அரசு காலிபணியிடங்கள் வந்துள்ளது, அதில் 8 காலி பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும், எனவே இந்த சிறந்த வேலைவாய்ப்புக்கு அனைவரும் விண்ணப்பித்து வேலையைப் பெறுங்கள.

திருப்பூர்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்களின்‌ பத்திரிக்கைச்‌ செய்தி:

தமிழ்நாடு அரசு, திருப்பூர்‌ மாவட்ட சமூகநல அலுவலகத்தின்‌ கட்டுப்பாட்டின்‌ கீழ்‌ புதிதாக துவங்கப்படவுள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தில்‌ (OSC) காலியாக உள்ள மைய நிர்வாகி, மூத்த ஆலோசகர்‌, தகவல்‌ தொழில்நுட்ப பணியாளர்‌, களப்பணியாளர்‌, பல்நோக்கு உதவியாளர்‌ மற்றும்‌ பாதுகாவலர்‌/ஓட்டுநர்‌ பதவிக்கு தொகுப்பூதிய ஒப்பந்த அடிப்படையில்‌ முற்றிலும்‌ தற்காலிகமாக பணிபுரிய திருப்பூர்‌ மாவட்டத்தில்‌ வசிக்கும்‌ தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகிறது.

இதற்கான விண்ணப்ப படிவத்தினை https://tiruppur.nic.in என்ற இணையதள முகவரியில்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்‌ மாவட்ட சமூகநல அலுவலர்‌, அறை எண்‌.35,36 தரை தளம்‌, மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகம்‌, திருப்பூர்‌ என்ற முகவரிக்கு வரும்‌ 15.10.2023 மாலை 5.30 மணிக்குள்‌ தபால்‌ மூலமாகவோ அல்லது dswo.tpr@gmail.com என்ற மின்னஞ்சல்‌ முகவரிக்கோ அனுப்பப்பட வேண்டும்‌ எனவும்‌, தாமதமாக பெறப்படும்‌ விண்ணப்பங்கள்‌ நிராகரிக்கப்படும்‌ எனவும்‌ மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ திரு.தா.கிறிஸ்துராஜ்‌, இ.ஆஃப., அவர்களால்‌ தெரிவிக்கப்படுகிறது.


திருப்பூர் மாவட்டத்தில் தமிழக அரசியல் 14 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, இதற்கு உள்ளூர் சேர்ந்த பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் இதில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி (10th Pass/Fail,) பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்க முடியும், டிரைவர் வேலைகளுக்குமான விண்ணப்பங்களும் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

ஆகையால் இந்த வேலை வாய்ப்பு பற்றிய முழு விளக்கங்களை தெரிந்து கொண்டு விண்ணப்பிப்பதற்காக உங்களை நாங்கள் அழைக்கிறோம், நீங்கள் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவராக இருந்தால் கட்டாயம் இந்த பதிவு உங்களுக்கு உதவியானதாக இருக்கும்.

எனவே தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த திருப்பூர் மாவட்ட அரசு வேலை பற்றிய விளக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது பார்த்து பயன்பெறுங்கள்.


Details Of Tiruppur District Social Welfare Recruitment

அறிவிப்புtiruppur.nic.in
பதவிமைய நிர்வாகி, மூத்த ஆலோசகர்‌, தகவல்‌ தொழில்நுட்ப பணியாளர்‌, களப்பணியாளர்‌, பல்நோக்கு உதவியாளர்‌ மற்றும்‌ பாதுகாவலர்‌/ஓட்டுநர்‌
சம்பளம்6,500/-, 10,000/-, 15,000/-, 18,000/-, 20,000/-, 30,000/-
காலியிடம்14
பணியிடம்திருப்பூர்‌ மாவட்ட சமூகநல அலுவலகம்‌
தகுதிகள்10th Pass/Fail. MSW. Graduate with Diploma in Computer / IT, Master of Social Work (MSW)/ Master Degree in Clinical Psychology. Master of Social Work (MSW)/ Bachelor’s Degree in law.
விண்ணப்பிக்க கடைசி தேதி15/10/2023

திருப்பூர் மாவட்டத்தில் வெளியான வேலைகளில் பெயர்:

இதில் மொத்தம் 14 வேலைகள் அறிவிக்கப்பட்டுள்ளது, அவைகளில் நம் கட்டுரையில் ஆரம்பித்தில் பார்த்தது போல் மைய நிர்வாகி, மூத்த ஆலோசகர், தகவல் தொழில்நுட்ப பணியாளர், களப்பணியாளர், பல் நோய்க்கு உதவியாளர், பாதுகாவலர் மற்றும் ஓட்டுநர் என்ற 6 காலி பணியிடங்களுக்கு மற்றும் 14 வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமான தெளிவான விளக்கங்கள் தான் இந்த கட்டுரை, எனவே கூடுதல் விவரங்களை பார்க்கலாம் வாருங்கள்.

திருப்பூர் மாவட்டத்தில் ஆட்சி தலைவர் மூலம் வெளியான வேலைவாய்ப்புக்கான வயது வரம்பு:

இதில் ஒவ்வொரு வேலைகளுக்கு என்றும் தனித்தனி வயது வரை நம்மால் பார்க்க முடியும், இதில் குறைந்தபட்ச வயது 40 அதிகபட்ச வயது 45 என குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்த போதும் தனித்தனியாக பார்க்கலாம்:

அதாவது மைய நிர்வாகிக்கு அதிகபட்ச வயது 45 இருக்க வேண்டும், மூத்த ஆலோசகர் வேலைக்கு அதிகபட்ச வயது 45க்குள் இருக்க வேண்டும், தகவல் தொழில்நுட்ப பணியாளர்க்கு வேலைக்கு அதிகபட்ச வயது 40 க்குள் இருக்க வேண்டும், களப்பணியாளர் வேலைக்கான அதிகபட்ச வயது 40-க்குள் இருக்க வேண்டும், மேலும் பல நோய்க்கு உதவியாளர் வேலைக்கும் 40 வயது குறிப்பிடப்பட்டுள்ளது. பாதுகாவலர் மற்றும் ஓட்டுநர் வேலைகளுக்கான அதிகபட்ச வயது 40 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, ஆகையால் இந்த வயதின் அடிப்படையில் வேலைக்காக நீங்க விண்ணப்பிக்கலாம்.

காலி பணியிடங்கள் எத்தனை:

திருப்பூர் மாவட்ட அரசு வேலைக்கு 14 பணியிடங்கள் உள்ளது, இருந்தபோதும் தெளிவாக காணலாம்:

மைய நிர்வாகிக்கு ஒரு (1) காலிப்பணியிடங்களும், மூத்த ஆலோசகருக்கு ஒரு (1) காலிப்பணியிடங்களும், தகவல் தொழில்நுட்ப பணியாளருக்கு ஒரு (1) காலி பணியிடங்களும் உள்ளது. ஆனால் களப்பணியாளர் வேலைக்கு ஆறு (6) காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது, பல் நோய்க்கு உதவியாளர் உதவியாளர் பணிக்கு இரண்டு (2) காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது, அதே சமயம் பாதுகாவலர் மற்றும் ஓட்டுநர் வேலைக்காக மூன்று (3) காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது (Total 14) என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பூர் மாவட்ட சமூக நல வேலைக்கான ஊதியம் எவ்வளவு:

ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனி ஊதியத்தை நிர்ணயித்துள்ளது, திருப்பூர் மாவட்ட அரசு வேலையை பொறுத்தவரை மைய நிர்வாகிக்கு அதிகபட்சமாக 30,000/- ரூபாயும், மூத்த ஆலோசகருக்கு 20,000/- ரூபாயும், தகவல் தொழில்நுட்ப உதவியாளருக்கு 18,000/- களப்பணியாளருக்கு மாதம் 15,000/-, பல்நோக்கி உதவியாளருக்கு 6400-யும் மற்றும் பாதுகாவலர், ஓட்டுநர் அவர்களுக்கு மாதம் 10,000/- தொகுப்பு உதயமாக வழங்கப்பட உள்ளது.

அரசு தொகுப்பூதியம் (வேலை) என்றால் என்ன?

தொகுப்பூதியம் என்பதை பொறுத்தவரை தற்காலிகமாக கொடுக்கப்படும் வேலைக்கு அந்த வேலை முடியும் காலம் வரை வழங்கப்படும் ஊதியம் என்பது தொகுப்பூதியம் என குறிப்பிடப்படுகிறது. எனவே இதை நினைவில் கொள்வது அவசியம்.

வேலை காண கல்வித் தகுதி என்ன:

இதில் ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு கல்வி தகுதி உள்ளது:

 • இதில் மைய நிர்வாகிக்கு (Master of Social Work (MSW)/ Bachelor’s Degree in law) படித்திருக்க வேண்டும்.
 • மூத்த ஆலோசகருக்கு தகவல் (Master of Social Work (MSW)/ Master Degree in Clinical Psychology) படித்திருக்க வேண்டும்.
 • தகவல்‌ தொழில்நுட்ப பணியாளருக்கு (Graduate with Diploma in Computer / IT) படித்திருக்க வேண்டும்.
 • பல் நோய்க்கு உதவியாளருக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
 • அதேபோல் பாதுகாவலர் மற்றும் ஓட்டுநர் வேலைக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றிருந்தால் போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் கட்டுப்பாட்டில் கிடைக்கும் வேலைவாய்ப்புகளின் இதர தகுதிகள்:

ஒவ்வொரு வேலைகளுக்கும் தனித்தனி தகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளது, இந்த தகுதிகள் பற்றிய பட்டியல் கீழே:

மைய நிர்வாகி வேலைக்கான தகுதிகள்:

 • திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் பெண் விண்ணப்பதாரராக இருத்தல் வேண்டும். அப்படி என்றால் பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கக்கூடிய வேலை.
 • பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையில் இருந்து மீட்பு மற்றும் ஆலோசனை வழங்குதலில் தொடர்பான ஐந்து வருடம் குறைந்தது பணி அனுப்பவும் பெற்றிருக்க வேண்டும்.
 • ஒருங்கிணைந்து சேவை மையத்தில் ஓஎஸ் 24×7 தங்கி பணிபுரிய விருப்பம் உள்ளவராக இருக்க வேண்டும்.
 • அதோடு 4.181 மற்றும் இதர உதவி எண்கள் மூலம் வரும் அழைப்புகள் தொடர்பான உதவிகளுக்கு தேவையை அறிந்து உதவும் எண்ணம் கொண்டவராகவும், களப்பணி புரிய விருப்பம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.
 • ஐந்து பெண்களுக்கு விழிப்புணர்வு மற்றும் ஊக்கப்படுத்தும் வகையில் அரசு திட்டங்களை அவர்களிடம் சென்றடைய செய்வதில் ஆர்வம் உடையவராக இருத்தல் வேண்டும்.

மூத்த ஆலோசகர் பணிக்கான இதர தகுதிகள்:

 • திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் பெண்கள் ஆக இருக்க வேண்டும்.
 • பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான மீட்பு மற்றும் ஆலோசனை வழங்குதல் தொடர்பால் குறைந்தது மூன்று வருடம் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
 • சுழற்சி முறையில் 24×7 பணிபுரி ஆர்வமாக உள்ளவராக இருக்க வேண்டும்.
 • 4.181 மற்றும் இதர எண்களின் மூலம் வரும் அழைப்புகள் தொடர்பான உதவிகளை மற்றும் தேவையை அறிந்து உதவும் எண்ணம் கொண்டவராகவும், களப்பணிக்கூறிய விருப்பமுள்ளவராகவும் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
 • பெண்களுக்கு விழிப்புணர்வு மற்றும் ஊக்கப்படுத்தும் வகையில் அரசு திட்டங்களை அவர்களிடம் கொன்று சேர்க்கும் விதத்தில் ஆர்வம் உள்ளவராக இருக்க வேண்டும்.

தகவல் தொழில்நுட்ப பணியாளருக்கான இதர தகுதிகள்:

 • திருப்பூர் மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
 • தகவல் தொழில்நுட்பத் துறையில் (Data Management, Web based reporting and Video Conferencing) குறைந்தது மூன்று வருடம் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

களப்பணியாளர் பதவிக்கான இதர தகுதிகள்:

 • திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் பெண் விண்ணப்பதாரராக இருக்க வேண்டும், அப்படி என்றால் இந்த வேலைக்கும் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
 • மூன்று வருடம் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
 • சுழற்சி முறையில் 24×7 பணி உடைய ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.
 • 4.181 மற்றும் இதர உதவி எண்கள் மூலம் வரும் அழைப்பு தொடர்பான உதவிகளுக்கு தேவையை அறிந்தது உதவும் ஒரு பக்குவத்தை கொண்டவராக இருக்க வேண்டும்.
 • பெண்களுக்கு விழிப்புணர்வு மற்றும் ஊக்கப்படுத்துதல் வகையில் அரசு திட்டங்களை சென்றடையச் செய்ய ஆர்வம் உடையவராக அவர் இருத்தல் அவசியம்.

பல் நோய்க்கு உதவியாளருக்கான இதரத் தகுதிகள்:

 • திருப்பூர் மாவட்டத்தில் வசிப்பதாக இருக்க வேண்டும்.
 • சமையல் மற்றும் அலுவலக தூய்மை பணியில் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

பாதுகாவலர் மற்றும் ஓட்டுநருக்கான இதர தகுதிகள்:

 • திருப்பூர் மாவட்டத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
 • மூன்று வருடம் அனுபவம் இருக்க வேண்டும்.
 • சுழற்சி முறையில் 24×7-ல் பணிபுரி ஆர்வமாக உள்ளவராக இருக்க வேண்டும்
 • 4.181 மற்றும் இதர எண்களின் மூலம் வரும் அழைப்புகள் தொடர்பான உதவிகளுக்கு தேவையான ஆர்வம் இருக்க வேண்டும்.

திருப்பூர் மாவட்ட சமூக நல வேலை வின்னபத்தை அனுப்பக்கூடிய விலாசம்:

நீங்கள் உங்களுடைய விண்ணப்பத்தை எங்களுடைய JobsTn தளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், அல்லது திருப்பூர் மாவட்ட அரசாங்க வலைதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்,

பின்னர் பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மாவட்ட சமூகநல அலுவலர்‌, அறை எண்‌.35,36 தரை தளம்‌, மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகம்‌, திருப்பூர் என்ற முகவரிக்கு மாலைக்கு 5:30 மணிக்குள் அனுப்ப வேண்டும், அல்லது மின்னஞ்சல் (dswo.tpr@gmail.com) மூலமாகவும் அனுப்பலாம்.

Tiruppur District Social Welfare Recruitment
Tiruppur District Social Welfare Recruitment in tamilnadu govt

கூடுதல் வாய்ப்பு: 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஆக்சிஸ் வங்கியில் பணியிடங்கள்!!

சில வார்த்தைகள் பேச ஆசை:

திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் உங்களுக்காக சிறந்த அரசாங்க வேலை கிடைக்க வேண்டும், உங்களுக்கு சந்தேகம் இல்லாமல் இந்த திருப்பூர் மாவட்ட சமூக நல அரசு வேலை விண்ணப்பிக்கும் முறையும், கல்வி தகுதி, வயதுவரம்பு போன்றவை புரிய வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த கட்டுரையை தெளிவாக எழுதி அளித்துள்ளோம் பார்த்து பயன்பெறுங்கள். மற்றவர்களுக்கும் இதை பகிருங்கள், உங்கள் வருகைக்கு நன்றி அடுத்த வேலைவாய்ப்பில் சந்திக்கிறோம்.

Sharing Is Caring:

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

3 thoughts on “திருப்பூர் மாவட்டத்தில் 14 அரசு ணியிடங்கள்!! இதில் பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கக்கூடிய 8 பணியிடங்கள்!!”

Leave a Comment