தமிழக கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் அதாவது (Co-optex) தனது புதிய (Marketing Manager) வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்புக்கு 50,000/- ரூபாய் ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த வேலையானது சென்னை, கடலூர், கோவை, மதுரை, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, வேலூர், பெங்களூரு, மும்பை, விஜயவாடா போன்ற அனைத்து மாவட்டங்களிலும் காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது.
எனவே குறிப்பிடப்பட்ட இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால் நிச்சயம் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த தமிழக கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் (TN கோ-ஆப்டெக்ஸ்) பணிக்கு நீங்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள், ஆவணங்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு நேர்காணலுக்கு செல்ல வேண்டும்.
தற்போது இதற்கான வயதுவரம்பு, கல்வித்தகுதிகள், நேர்காணலுக்கு (Interview) செல்லக்கூடிய விவரம் போன்ற விஷயங்கள் அனைத்தையும் இந்த வலைதள கட்டுரையில் நீங்கள் தெளிவாக பார்க்க உள்ளீர்கள்.
இது தமிழர்களுக்கான தமிழ் வேலைவாய்ப்பு வலைத்தளம், எனவே இந்த வலைத்தளத்தில் வரும் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவலை நீங்களும் தெரிந்து கொண்டு உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள், அனைத்து தமிழர்களுக்கும் வேலை கிடைக்கவேண்டும் என்பதில் ஒரு சிறு முயற்சிதான் இந்த வலைதளம் இயங்குகிறது.
வயது வரம்பு என்ன?
முதலில் இந்த வேலைக்கான விவரங்களை காணலாம் வாருங்கள், வேலைக்கான வயது வரம்பை பொருத்தவரை அதிகபட்சமாக 35 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வயது 19/09/2022 தேதி அடிப்படையில் கணக்கிடப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள், இது பற்றிய கூடுதல் தகவல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு உங்களால் பார்க்க முடியும்.
நேரடியாக Tamil Nadu Handloom Weaver Co-operative Society Limited அறிவிப்பை இந்த பகுதியிலேயே உங்களால் படித்துப் பார்க்க முடியும், அதற்க்கான வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி என்ன?
இந்த வேலைக்கான கல்வி தகுதியை பொருத்தவரை எம்பிஏ முடித்திருக்க வேண்டும், அதாவது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையங்களில் எம்பிஏ படிப்பு முடித்து இருந்தால் இதற்கு நீங்கள் தகுதியானவர்.
(MBA மார்க்கெட்டிங் துறையில், முழுநேர யுஜிசி அங்கீகாரம் பெற்ற படிப்பு – M.B.A., in the field of Marketing, full-time UGC approved course)
எனவே நேர்காணலுக்கு செல்லும் போது உங்கள் படிப்பு சார்ந்த ஆவணங்கள் ஏதேனும் கூடுதல் தகுதி இருந்தாலும் அதாவது கூடுதல் அனுபவம் இருந்தாலும் எடுத்து செல்லலாம், அதுவும் இந்த வேலைக்கு உங்களுக்கு உதவி அளிக்கக்கூடும்.
அந்த வேலைக்கான ஊதியத்தை பொறுத்தவரை 50,000/- நீக்கப்பட்டுள்ளதாக நம்ம கட்டுரையில் முதலில் நாம் பார்த்துவிட்டோம்.
விவரம் | அறிவிப்பு |
---|---|
அறிவிப்பு | Tamil Nadu Handloom Weaver Co-operative Society Limited Marketing Manager (Co-optex) |
துறை | தமிழக கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் |
சம்பளம் | Rs. 50,000/- |
கடைசி தேதி | 28/09/2022 |
வேலை இடம் | சென்னை, கடலூர், கோவை, மதுரை, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, வேலூர், பெங்களூரு, மும்பை, விஜயவாடா |
பதிவுமுறையை | (நேர்காணல்) மூலமாக |
இந்த வேலையின் நேர்காணல் மற்றும் இந்த வேலையின் பெயர் என்ன?
இந்த வேலையை பெயரானது மார்க்கெட்டிங் மேனேஜர் (Marketing Manager) என்று குறிப்பிடக்கூடிய வேலையாகும், அதுமட்டுமில்லாமல் இந்த வேலையின் நேர்காணளுக்கு நீங்கள் உங்கள ஆவணங்களுடன் செல்லவேண்டிய அவசியம் ஏற்படும்.
செல்லவேண்டிய நேர்காணலுக்கான விலாசத்தை கீழே உங்களால் காண முடியும், உங்கள் நேர்காணலுக்கு நீங்கள் 28/09/2022 தேதிக்கு செல்ல வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
Interested candidates can attend a Walk in Interview on 28.09.2022 by 11.00 A.M. at Co-optex Head Office, No. 350, Pantheon Road, Egmore, Chennai – 600 008 |
Toll Free Number: 1800-599-7633
கோ-ஆப்டெக்ஸ் தலைமை அலுவலகம், எண். 350, பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை – 600008.
இந்த வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?
இந்த வேலைக்கு விண்ணப்பிப்பது என்பது நீங்கள் ஆன்லைனில் அல்லது தபால் மூலமும் விண்ணப்பிக்கும் வேலை கிடையாது.
இந்த வலைதளத்தில் பார்த்த படித்த அனைத்து தகவலையும் தெரிந்துகொண்டு இதற்கு நீங்கள் வயது அடிப்படையிலும், கல்வித் தகுதி அடிப்படையிலும் தகுதியானவர் என்று தெரிந்தால் உங்கள் ஆவணங்களை எடுத்துக்கொண்டு நேர்காணலுக்குச் செல்லுங்கள், அது பற்றிய முகவரியை நாம் ஏற்கனவே கட்டுரையில் பார்த்து விட்டோம்.
Tamil Nadu Co-optex Recruitment for Marketing Manager Notification File
[dflip id=”1934″ ][/dflip]
கவனியுங்கள்:
தமிழகத்தில் இருக்கும் நபர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும், அதுவும் சொந்த மாவட்டத்திலேயே கிடைக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் இருக்கும் வேலைகளை பற்றி பேசுவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது எங்கள் வலைதளம்.
எனவே குறிப்பிட்ட இந்த கடலூர், கோவை, மதுரை, சென்னை, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, பெங்களூர், மும்பை, விஜயவாடா போன்ற பகுதிகளில் இருக்கும் நபர்களுக்கு இந்த பதிவை பகிருங்கள் அதன் மூலம் இந்த வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
அதுமட்டுமில்லாமல் இந்த வேலைக்கான காலிப்பணியிடம் ஆனது 11 காலி பணியிடங்கள் உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது, எனவே குறிப்பிட்ட மாவட்டங்களில் இருக்கும் வேலையை பெறுவதற்கான வாய்ப்பை அந்தந்த மாவட்ட நபர்களுக்கு இது ஒரு உதவியாக இருக்கும் என்று நினைக்கிறோம்.
தகுதியுள்ளவர்கள் நேர்காணலுக்கு செல்லும் உரிய தேதிக்கு முன்பே அனைவருக்கும் இந்த கட்டுரையை பகிருங்கள்.
JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.