ஈரோடு: 8ம் வகுப்பு தேர்ச்சிபெற்றால் அரசு வேலையா!

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களில் தொடங்கி டிகிரி முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்க கூடிய சிறந்த அரசு வேலைவாய்ப்பு, அதுவும் நமது ஈரோடு மாவட்டத்தில் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்த (வே.ஆ.எண்: 347/ சே.ம.தொ.அ/ஒப்பந்தப்புள்ளி – 2022) அறிவிப்பானது பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, அதாவது மாவட்ட நலச்சங்கம் (District Help Society) வெளியிட்டுள்ளது.

Tamil Nadu Erode District Health Society Recruitment 2022

ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு சுகாதார நிலையங்களில் உள்ள காலி பணியிடங்களை இந்த கட்டுரையில் நீங்கள் பார்க்க விருக்கும் அடிப்படையில் நிரப்ப உள்ளனர்.

இந்த வேலைக்கான விண்ணப்பம் பெறக்கூடிய இறுதி தேதி ஆனது 10/10/2022 அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும், இது தபால் மூலம் விண்ணப்பிக்க கூடிய வேலை.

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

இந்த வேலைக்கு குறைந்தபட்ச சம்பளமாக 8,500 தொடங்கி அதிகபட்ச சம்பளமாக 20,000 ஆயிரம் வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அவரவர் கல்வித்தகுதிக்கு ஏற்றார் போல் 8 விதமான பணிகளும் மற்றும் 19 வகையான காலி பணியிடங்களும் உள்ளது, அவைகளைப் பற்றிய விரிவான தகவல்களை காணலாம் வாருங்கள்.

  • Data Entry Operator
  • Operation Theatre Assistant
  • MPHW
  • Security Guard
  • Physiotherapist
  • Early Intervention-Special Educator -Social Worker
  • OT Technician
  • Refrigeration Mechanic

நாங்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசாங்க வேலைகள் மற்றும் சிறந்த ஊதியம் தரக்கூடிய தனியார் வேலைகள் பற்றிய கட்டுரைகளை வெளியிட்டு வருகிரோம்.

எனவே தொடர்ந்து எங்கள் வலைதளத்தை உங்கள் நண்பர்களுக்கு பரிந்துரைகள், மேலும் வலைதளத்தின் மூலம் எங்கள் வாட்ஸ்அப் குரூப், டெலிகிராம் குரூப், மற்றும் கூகுள் நியூஸ் போன்ற பகுதிகளை பின்பற்றுங்கள், வாரங்கள் தொடர்ந்து வலைதளத்தில் பயணிக்கலாம்.

jobstn Whatsapp Group GIF Jobs Tn

கல்வி தகுதி என்ன?

இந்த வேலைக்கான கல்வி தகுதியை பொருத்தவரை எட்டாம் வகுப்பில் தொடங்கி அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம்.

இது சம்பந்தமான (8th Pass ITI, Diploma, OT Technician, Any Degree) அனைத்து படிப்புகளும் வரவேற்கப்படுகிறது, எனவே எட்டாம் வகுப்பு படித்து முடித்தவர்கள் முதல் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் கூடுதல் விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை கீழே பார்க்கலாம், அதை பதிவிறக்கம் செய்யும் வாய்ப்பும் உங்களுக்கு கிடைக்கும்.

தேதி விவரம் என்ன?

இந்த வேலைக்கான அறிவிப்பு தேதி ஆனது 27/09/2022 அன்று வெளியிடப்பட்டது, ஆனால் இந்த வேலைக்கான இறுதி தேதியாக, அதாவது நீங்கள் தபால் மூலம் விண்ணப்பத்தை அலுவலகத்திற்கு அனுப்பக்கூடிய இறுதியாக 10/10/2022 அன்று மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும் என்பது குறிப்பிடதக்கது.

எனவே அது சம்பந்தமான விவரங்களை தெளிவாக வலைதளத்தில் படித்து பார்த்து விண்ணப்பிக்க மறக்காதீர்கள், அதோடு இந்த வேலை ஈரோடு மாவட்டத்தில் வழங்கக்கூடிய வேலை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தேர்வு எப்படி இருக்கும் ?

சரியான நேரத்துக்குள் பெறப்பட்ட ஆவணங்களை சரி பார்க்கப்பட்டு தகுதியானவர்களை நேர்காணலுக்கு அழைப்பார்கள்.

அப்போது நேர்காணல் மூலமும் அவன சரிபார்ப்பு மூலமும் வேலை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, கூடுதல் விவரங்களை அலுவலகத்தில் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

விவரம்அறிவிப்பு
அறிவிப்புTamil Nadu District Health Society
துறைதமிழ்நாடு மாவட்ட சுகாதார சங்கம்
இணையதளம்erode.nic.in
சம்பளம்Rs. 8,500/- to Rs. 20,000/-
கடைசி தேதி10/10/2022
வேலை இடம்தமிழ்நாடு, ஈரோடு
தேர்வு முறை(நேர்காணல்) மூலமாக
பதிவுமுறையை(Speed Post) மூலமாக
தொலைபேசி0424 243 1020
jobs tn google news

விண்ணப்பக் கட்டணம் உண்டா?

இந்த வேலைக்கான விண்ணப்ப கட்டணம் என்று எதுவும் கிடையாது, உங்கள் ஆவணங்களை சரியாக பூர்த்தி செய்து பின்னர் நீங்கள் தபால் மூலம் அனுப்பலாம்.

நேரில் சென்றும் உங்களுடைய விண்ணப்பத்தை கொடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது, எனவே நீங்கள் ஈரோடு மாவட்ட சுற்றுவட்டாரத்தில் இருந்தால் நீங்கள் நிச்சயம் நேரில் சென்று விண்ணப்பத்தை பெற்று அதை பூர்த்தி செய்து உங்களுடைய ஆவணங்களை நகல்களை இணைத்து கொடுக்க முடியும், அதற்கான விலாசம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறு விண்ணப்பிப்பது?

இந்த பதவியானது முற்றிலும் தற்காலிகமானது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும், எந்த ஒரு காலத்திலும் பணிநிரந்தரம் செய்யப்பட மாட்டாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணியில் சேருவதற்கான மேற்கண்ட நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டு கடிதம் அளிக்கப்பட வேண்டும், அதாவது பணிக்கான விண்ணப்பம் பெறப்படும் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலம் தெரிய வருகிறது.

எனவே அறிவிப்பு மூலம் வெளியான தகவலை தெளிவாக உங்களுக்கு வழங்க நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம், விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி நீங்கள் கீழே காணலாம்.

நிர்வாக செயலாளர் / துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள், மாவட்ட நல்வாழ்வு சங்கம் (ஹெல்த் சொசைட்டி) திண்டல் ஈரோடு மாவட்டம் ஈரோடு 638012.

அதேசமயம் விண்ணப்பத்தை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ நீங்கள் அனுப்பலாம், விண்ணப்ப படிவங்களை ஈரோடு துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்ப படிவத்துடன் கூறிய அனைத்து தகுதிகளையும் சுய கையொப்பம் இட்டு, சுயசான்றொப்பம் செய்யப்பட்ட நகல்களை இணைக்க வேண்டும் கூறப்பட்டுள்ளது.

எனவே இந்த விஷயங்களை தெளிவாக இணைத்து உங்கள் ஆவணங்களை விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கவேண்டும், மேலும் 10/10/2020 அன்று மாலை 5 மணிக்குள் உங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மறக்காதீர்கள்.

Tamil Nadu District Health Society Recruitment Announcement

Tamil Nadu District Health Society Recruitment Announcement
வேலைக்கான கெடு முடிவடைந்தது, வேறு பணியை எங்கள் வலைதளத்தில் தேடுங்கள்

கவனியுங்கள்:

இது ஒரு ஒப்பந்த அடிப்படை வேலையாக இருந்தாலும் அனைவருக்கும் இது பலனளிக்கக் கூடும், காரணம் வருங்காலத்தில் நிரந்தர பணிக்கு உங்கள் பரிந்துரை செய்யவும் வாய்ப்பு உள்ளது.

நீங்கள் தற்போது சிறப்பாகவே பணியாற்றுகிறார்கள் என்றால் வருங்காலத்தில் காலிபணியிடங்கள் இருக்கும்போது உங்களுக்கு முன்னுரிமை அளிக்கக் கூடும், இது ஒரு சாதாரணமான கூற்றுத் தான்.

காரணம் இது போன்ற அனுபவசாலிகள் நிரந்தரபணி வழங்கப்பட்டுள்ளது, எனவே இதை சாதாரணமாக கருதாமல் ஆவலுடன் விண்ணப்பியுங்கள், அல்லது உங்கள் நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ, ஈரோடு சுற்றுவட்டார மக்களுக்கு இதை பகிருங்கள் பிறருக்கு உதவியாக இருக்கக் கூடும்.

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment