விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன: மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிற்கு!

Follow Us
Sharing Is Caring:

பத்திரிக்கை செய்தி: நாகப்பட்டினம் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிற்கு உறுப்பினர் நியமனம் 2015ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள நாகப்பட்டினம் மாவட்ட குழந்தைகள் நலக்குழுமத்திற்கு உறுப்பினர் நியமிக்கப்படுவதற்காக கீழே குறிப்பிடுள்ள தகுதிகளைக் கொண்ட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Department of Social Defence jobs 2024
Department of Social Defence Notification (https://www.nagapattinam.nic.in/)

குறிப்பு: குழந்தை நலக்குழுவிற்கு உறுப்பினர் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளார் மற்றும் இப்பதவி அரசு பணி அல்ல.

 விண்ணப்பதார்கள் குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூக பணி அல்லது சமூகவியல் அல்லது மனித ஆரோக்கியம் அல்லது கல்வி அல்லது மனித மேம்பாடு அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மற்றும் குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவர் அல்லது குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூக பணி அல்லது சமூகவியல் அல்லது மனி ஆரோக்கியம் அல்லது கல்வி அல்லது மனித மேம்பாடு அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்ற தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும்.

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

மேலும் விண்ணப்பதாரர் நியமனம் செய்யப்படும் போது 35 வயதுக்கு குறையாதவராகவும், 65 செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும். வயதை பூர்த்தி அடையாதவராகவும் இருக்கவேண்டும்.

கவனிக்க: ஒருநபர் குழந்தை நலக்குழு உறுப்பினராக நியமனம் செய்த தேதியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு பதவி வகிப்பார். இதற்கான விண்ணப்ப படிவத்தை நாகப்பட்டினம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், தகுதிவாய்ந்த நபர் மேற்கண்ட பதவிக்கு அதற்கான அமைந்த படிவத்தில் (செய்தி வெளியீடு நாளிலிருந்து 15 நாட்கள் வரை) கீழ்க்கண்ட முகவரியில் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம்.

விலாசம் ஆங்கிலத்தில்:

The Director,
Directorate of social Defence,
No.300, Purasaiwalkam High Road,
Chennai – 600 010.

விலாசம் தமிழில்:

இயக்குநர்,
சமூகப்பாதுகாப்புத்துறை,
எண். 300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை,
Q&60T600601 – 600 010.

Note: பூர்த் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேரவேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இதுகுறித்து அரசின் முடிவே இறுதியானது.

Child Welfare Committee Member Jobs Announcement & Application Form Pdf

Sharing Is Caring:

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment