நீலகிரி மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2024!

Driver Recruitment 2024: நீலகிரி நீர்வளத்துறையில் ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கண்காணிப்புப்பொறியாளர் அலுவலகம், நீவது., பவானி வடிநில வட்டம், ஈரோட்டின் கட்டுப்பாட்டிலுள்ள செயற்பொறியாளர், நீ.வ.து., பவானிசாகர் அணைக்கோட்டம், பவானிசாகர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் உதவி செயற்பொறியாளர், நீ.வ.து., பாசன உபகோட்டம், உதகமண்டலம், நீலகிரி மாவட்டம், அலுவலகத்தில் காலியாக உள்ள 19500-71900 (Level-8) ஊதிய ஏற்ற முறையிலான ஒரு (1) ஈப்பு ஓட்டுநர் பணியிடத்திற்கு தகுதியான நபர் தேர்வு செய்யப்பட உள்ளார்.

இதற்காக வேலைவாய்ப்பகம் பரிந்துரைக்கும் நபர்கள் தவிர, இதர தகுதியுள்ள நபர் தங்களது வயது சான்று, கல்வி சான்று, சாதி சான்று, குடும்ப அட்டை நகல், ஓட்டுநர் உரிமம், மூன்றாண்டு முன் அனுபவச் சான்று, ஆகியவற்றின் சுயசான்றொப்பமிட்ட நகல்களுடன் கண்காணிப்புப்பொறியாளர், நீவது., பவானி வடிநில வட்டம், ஈரோடு-11 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

Nilgiri District Government Jobs 2024
Image By (Tn Govt)

காலிப்பணியிட விவரம்:

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

1) பொதுப் போட்டி (முன்னுரிமை அற்றவர்)

ஓட்டுநர் பணிக்கு தகுதிகள்:-

  • கல்வித் தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • “இலகுரக” மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
  • ”இலகுரக” வாகனங்களை ஓட்டுவதில் மூன்று வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • நல்ல உடல் ஆரோக்கியமும், கண்பார்வையும் வேண்டும்.
  • 01.07.2023 அன்று பொதுப் போட்டி (முன்னுரிமை அற்றவர்) 18 வயது நிரம்பியவராகவும், 32-வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

பொறுப்பு: குறிப்பிட்ட தேதிக்குப் பின்னர் வரும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. காலதாமத்திற்கு நிர்வாகம் பொறுப் பேற்காது என கண்காணிப்புப் பொறியாளர், நீ.வ.து., திரு.சா.மன்மதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கவனிக்க: விண்ணப்பங்கள் 23.02.2024 -க்குள் வந்து சேர வேண்டும். காலிப்பணியிட விவாம்.

Driver Recruitment PDF Download: Nilgiris.nic.in Driver Recruitment 2024

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment