நீலகிரி மாவட்டத்தில் மின் மேலாளர் பதவிக்கு விண்ணம் அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த பணிக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த பணிக்கான தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படும், இது சம்பந்தமான கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் விவரம், தேர்வு முறை போன்ற விஷயங்களையும் இந்த வலைதள கட்டுரையில் பார்க்க உள்ளோம்.
இந்த வேலைக்கு நீங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து உங்களுடைய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்பது நினைவில் கொள்ளலாம், அது மட்டுமில்லாமல் நீலகிரி சுற்று வட்டாரத்தை சேர்ந்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது சம்பந்தமான அதிகாரபூர்வ அறிவிப்பில் உங்களால் பார்க்க முடியும், அந்த அறிவிப்பை இந்த பகுதியில் நேரடியாகப் படித்து பார்க்கவும், பதிவிறக்கம் செய்வதற்கான வாய்ப்பும் கிடைக்கும், அதையும் நாங்கள் தெளிவாக இந்த கட்டுரையில் கொடுத்துள்ளோம்.
இது போன்ற பல விஷயங்களை மாவட்ட வாரியாக நாங்கள் தொகுத்து வழங்கி வருகிறோம், அது அனைவருக்கும் உதவியாக இருக்கின்றது, தற்போது கூட ரேஷன் கடையில் வெளியான வேலை வாய்ப்பு பற்றி பேசி இருக்கிறோம், அதையும் நீங்கள் தெளிவாக பார்வையிடலாம். மேலும் இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும் பகிரலாமே என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறோம்.
இந்த வேலைக்கான தேதி விவரம் என்ன?
இந்த வேலைக்கான தேதியை பொருத்தவரை நீங்கள் 14/10/2022 இலிருந்து விண்ணப்பிக்கலாம், விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 28/10/2022 அன்று மாலை 6 மணி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதற்குள் இந்த இடைப்பட்ட காலத்தில் உங்களுடைய விண்ணப்பங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சரியான கவனத்தோடு எங்கள் வலைத்தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களை தெளிவாக படித்து விண்ணப்பித்து விண்ணப்பியுங்கள்.
மேலும் இந்த விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு அதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் 02/11/2022 அன்று வெளியிட படுவார்கள், அதாவது தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல்.
மேலும் 09/11/2022 அன்று தேர்வு நடைபெறும் நாளாக குறிப்பிடப்பட்டுள்ளது, அதற்க்கான தேர்வு முடிவுகள் வெளியிடும் நாளாக 09/11/2022 அதாவது, அதே தினத்தில் மாலை தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
இந்த தேர்வின் அடிப்படையாக கொண்டு வேலை வழங்கப்படும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
தேர்வு முறை எப்படி இருக்கும்?
அதாவது தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் 02/11/2022 அன்று தேர்வு நடக்கும் இடம் மற்றும் நேரம் மாவட்டம் இணையதளத்தில் பார்க்க முடியும்.
விண்ணப்பதாரர்களுக்கு தனிப்பட்ட முறையில் வேறு விபரங்கள் ஏதும் அனுப்பப்பட மாட்டாது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
மாவட்ட இணையதளம் மூலமாக தேர்வு நடத்தப்படும் இடத்தை வெளியிடுவார்கள், அதை சரியாக தெரிந்து கொண்டு ஆன்லைன் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் 09/11/2022 அன்று உதகமண்டலத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட அதாவது, அறிவிக்கப்பட்ட கல்லூரிக்கு ஆன்லைன் தேர்வுக்கு நேரில் வரவேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
தேர்வு முடிவின் அடிப்படையில் மதிப்பெண்களை கொண்டு இந்த பணியிடம் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது, அது சம்பந்தமான தகவல்களை நீங்கள் அதிகார ஒரு வலைத்தளத்தில் பார்க்க முடியும்.
இந்த செய்தி வெளிவந்த நாளிலிருந்து அனைவரும் ஆர்வமாக இந்த வேலைக்காக தங்களை தயார்படுத்திக் கொள்கிறார்கள், நீங்களும் உங்களை தயார்படுத்திக் கொள்ள மறவாதீர்கள்.
விவரம் | அறிவிப்பு |
---|---|
அறிவிப்பு | Nilgiris District Electricity Authority Association |
துறை | நீலகிரி மாவட்ட மின் ஆளுமை சங்கம் |
இணையதளம் | nilgiris.nic.in |
கடைசி தேதி | 28/10/2022 |
வேலை இடம் | தமிழ்நாடு, நீலகிரி |
தேர்வு முறை | Online தேர்வு மற்றும் நேர்காணல் |
பதிவுமுறையை | (Online) மூலமாக |
முகவரி | நீலகிரி மாவட்ட நிர்வாகம், தேசிய தகவல் மையம், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு – 643204 |
வேலைக்கான கல்வித்தகுதி என்ன?
இந்த வேலைக்கான கல்வி தகுதியை பொருத்தவரை நீலகிரி மாவட்ட மின் ஆளுமை சங்கத்தின் கீழ் மின் மாவட்ட மேலாளர் பதவிக்கு தற்போது தகுதி வாய்ந்த இளைஞர்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வித்தகுதிக்கான விவரங்கள் கிழே:
(BE) அல்லது (B.Tech)
- (Computer Science)
- (Computer Engineering)
- (Information Technology)
- (Information and Communication Technology) ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.
அல்லது மூன்றாண்டு இளங்கலை (Graduate) படிப்பு முடித்து, முதுகலை (Post graduate – M.C.A, M.Sc), (Computer Science), (Information Technology), (Software Engineering) போன்ற படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். வேறு துறையில் பட்டம் பெற்றவர்கள் இத்தேர்வில் பங்கேற்க முடியாது.
கவனிக்க: வேறு துறையில் பட்டம் பெற்றவர்கள் இந்த தேர்வில் பங்கேற்க முடியாது என்றும், கண்டிப்பாக வலைத்தள அறிவிப்பு மூலம் நம்மால் பார்க்க முடிகிறது.
எனவே நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதற்கான இருப்பிட சான்று, பிறப்பு சான்று இணைக்கவேண்டும் என்பதை நம்மால் பார்க்க முடிகிறது, எனவே நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் மட்டும், அதேசமயம் இந்த குறிப்பிட்ட பட்டப்படிப்பு படித்தவர் மட்டுமே இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியும் என்பதை நம்மால் தெளிவாக பார்க்க முடிகிறது.
எனவே இது சம்பந்தமான விவரங்களை உங்களுக்கு வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம், மேலும் தகவலுக்கு அதிகாரபூர்வ வலை தளத்தை பாருங்கள்.
எவ்வாறு விண்ணப்பிப்பது?
இந்த வலைத்தளத்தில் தகவல்களை அனைத்தையும் நீங்கள் தெளிவாக படித்து விட்டீர்கள், ஒருவேளை ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பு நேரடியாக பார்க்க முடியும், அதை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
நீலகிரி மாவட்டத்தில் வசிப்பவர்கள் என்றால் அதற்கான சான்றிதழை நீங்கள் பெற வேண்டும், பிறப்பு சான்றிதழை அதோடு இணைக்க வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.
இருப்பிட சான்றிதழ் அல்லது பிறப்பிட சான்றிதழ்களை இணைத்து 28/10/2022 மாலை 6 மணிக்குள் உங்கள் விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலம் சமர்ப்பிக்க வேண்டும், அதற்கான வலைதளம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது, அதை பின்பற்றி கொள்ளுங்கள்.
உங்களுக்கு அழைப்பு விடுக்க மாட்டோம் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது, நீங்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே தெரிந்து கொள்ள முடியும், இருந்தாலும் அதை அனைத்தையும் தெளிவாக உள்ளிட்டு பதிவு செய்யுங்கள், பதிவு செய்த பிறகு ஏதேனும் ஆதாரம் தெரிந்தால் அதனை நகல் எடுத்துக்கொள்ளுங்கள், அல்லது ஸ்றீன்ஷாட் எடுத்துக்கொள்ளுங்கள்.
Nilgiris District Electricity Authority Association E-District Manager Pdf
Please wait while flipbook is loading. For more related info, FAQs and issues please refer to DearFlip WordPress Flipbook Plugin Help documentation.
கவனியுங்கள்:
நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரிகளுக்கு சிறந்த வேலையை உங்களுக்கு நாங்கள் உரிய நேரத்திற்கு முன்பாகவே கொடுத்துள்ளோம், இந்த வேலைக்குத் தகுதியானவர் என்றால் நிச்சயம் இதற்கு விண்ணப்பித்து அதற்கான தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள், அதாவது தேர்வுக்கு தகுதியான விஷயங்களை சேகரித்து துவங்குங்கள்.
பிறருக்கு உதவும் என்று கருதினால் நிச்சயம் இதை உங்கள் சுற்றத்தாருக்கும் பகிருங்கள், அவர்களுக்கு பயன் அளிக்கக் கூடும், மேலும் பல வேலைவாய்ப்புகளை நாங்கள் வழங்கிவரும் காரணத்தினால், அவைகளையும் தெளிவாக பார்த்து பயன்பெறுங்கள்.
JobsTn M Raj is very proficient in article writing job-related vacancy details posts.